Pages

Thursday, 19 August 2010

கலக்கல் காக்டெயில்-5

கைபிள்ள சுராஜ் ரண்டிவ்



ஸ்ரீலங்காவில் நடந்து கொண்டிருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா, ஸ்ரீலங்காவிற்கும் நடந்த ஒரு நாள் போட்டியில் சேவாகின் சதத்தை முடக்கி ரண்டிவ் வீசிய “நோபால்” பற்றிதான் இப்பொழுது கிரிகெட் ரசிகர்கள் வட்டாரத்தில் சூடான விஷயம்.

ரண்டிவ் இதை தானாக செய்தது மாதிரி தெரியவில்லை. சங்கா சொல்லியிருக்க வேண்டும், இப்பொழுது தில்ஷன் தான் சொன்னார் என்று அவர் நிஜாரையும், ரண்டிவ் கோமனத்தையும் உருவியிருக்கிரார்கள்.

ஆனால் ஒன்றும் தெரியாமல் நடித்த சங்காவிற்கு இந்த வருட சிறந்த நடிகருக்கான விருது கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.

ஏம்பா முதல் டெஸ்டில் முரளிக்கு 800வது விக்கெட் கொடுக்காமல் இந்தியாவின் கடைசி ஆட்டக்காரர் ஒஜா ரன் அவுட் ஆகியிருந்தால் ஸ்ரீ லங்காவிற்கு எப்படி இருந்திருக்கும்?.

ஆனா இந்திய கிரிக்கெட் வாரியம் ஒஜாவின் கோமனத்தை உருவாது.

விளையாட்டை விளையாட்டா ஆடுங்கப்பா? BCCI யோட விளயாடதிங்க, பொல்லாதவனுங்க நிஜார உருவி பேஜார் பண்ணிடுவானுங்க.

சிம்மொன்ஸ்(குரங்குப் பய), பஜ்ஜி விவகாரம் நியாபகம் இருக்கட்டும்.

ஆனால் இந்திய ஊடகங்கள் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு ரொம்ப பெரிசாத்தான் கூவரானுங்க. ஸ்ரீலங்கா போர்டும் பயந்துகின்னு எங்க பிச்சைப் போடறது நிப்பாட்டிடுவாங்கன்னு நடவடிக்கை எடுக்குரானுங்க.

வாழ்க கிரிக்கெட்.



ரசித்த கவிதை.

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!



நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்



ரசித்த விடுகதை ++18


ரம்பாவிற்கு பெருசு, சிம்ரனுக்கு சிறுசு, பெண்களுக்கு(girls) இருக்கும் ஆண்களுக்கு(boys) இருக்காது அது என்ன?

ரொம்ப யோசிக்காம விடை சொல்லுங்க.



ஹூம் ஹூம் தப்பா யோசிக்காதீங்க










விடை தெரியாதவர்கள், மேலே பார்க்காதீங்க, அப்படியே கீழே வாங்க.

\

\

\

\

\

\

\

விடை: ஆங்கில எழுத்து “R”.

14 comments:

  1. விடுகதை தாங்கலடா சாமி

    ReplyDelete
  2. யப்பா ராசா... விடுகதை .. ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்...

    எந்த ஊருக்கு போய் ரூம் போட்டு யோசிச்சது...

    ReplyDelete
  3. யப்பா சத்தியமா நான் யோசிக்கல சாமி

    ReplyDelete
  4. :)). கண்ணதாசனுக்கு நன்றி

    ReplyDelete
  5. //ஆனால் இந்திய ஊடகங்கள் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு ரொம்ப பெரிசாத்தான் கூவரானுங்க. ஸ்ரீலங்கா போர்டும் பயந்துகின்னு எங்க பிச்சைப் போடறது நிப்பாட்டிடுவாங்கன்னு நடவடிக்கை எடுக்குரானுங்க.//

    ரைட்டு....

    //
    நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்//

    பொளைச்சி போங்க...

    ///விடை: ஆங்கில எழுத்து “R”///

    ந்க்கொய்யாலே கைல மாட்னா சட்னிதான்....அலும்புக்கு ஒரு அள்வே இல்லையா???!!!!!!

    ReplyDelete
  6. ஜே மாட்ட மாட்டேனே!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  7. கண்ணதாசனின் கவிதைப் பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  8. கார்த்திகைப் பாண்டியன் வெகு நாட்களுக்குப் பிறகு வருகை தந்துள்ளீர்கள். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. விடுகதை ........ம்...........

    ReplyDelete
  10. கண்ணதாசனுக்கு நன்றி

    ReplyDelete
  11. விடுகதை சூப்பரு

    ReplyDelete
  12. அண்ணாச்சி புது பதிவு போட்ருக்கேன், படிச்சிருங்க:)

    ”சென்னை வந்துட்டேன்....+1 சேந்துட்டேன்...”, http://pattikattaan.blogspot.com/2010/08/1.html

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.