“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று கண்டும் காணாமல் போகமுடியாது. குறைந்த பட்சம் நமதுப் பதிவில் நம் கண்டனத்தை தெரிவிப்போம்.
பல வருடங்களுக்கு முன்பு முதலமைச்சரின் மனைவி பட்டுப் புடவை வாங்க பனகல்பார்க் எதிரில் நோ பார்க்கிங் ஏரியாவில் தன் காரை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். அப்பொழுது பஸ் நிறுத்தமும் அங்கு இருந்ததால் நிறைய ட்ராபிக் நெருக்கடி. அந்த ஏரியாவில் பணியில் இருந்த சார்ஜன்ட் முதலமைச்சர் மனைவியின் காரை எதிர் புறத்தில் நிறுத்தும்படி டிரைவரை கேட்டிருக்கிறார். அதற்கு அவர் “இது அம்மா கார் உன்னால் முடிந்ததை செய்” என்று சொல்லியிருக்கிறார். சார்ஜன்ட் தன் கடமையை மீறாமல் சார்ஜ் ஷீட் கொடுத்திருக்கிறார்.
விஷயம் முதலமைச்சரிடம் போனது. அவர் அந்த ஏரியா டிராபிக் கமிஷனரை அழைத்து, சார்ஜ் ஷீட்டை திரும்பப் பெரும்படியும், சார்ஜண்டை தற்காலிக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுருக்கிறார். கமிஷனர் மறுத்துவிட்டார். அவருக்கும் இதே கதி தான் நடந்தது. ஆனால் பணி நீக்கம் செய்யவில்லை அவரை இடம் மாற்றினார்கள். ஆனால் கமிஷனர் ராஜினாமா செய்துவிட்டார்.
இதெல்லாம் அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் பொழுது ஆடும் ஆட்டம். இவனுங்க எல்லாம் எப்போ திருந்துவானுங்க?
“பட்டாபட்டி” பதிவப் படிங்க, அவர் கோபமும் கண்டனமும் அவருக்கே உரிய பாணியில் பின்னியிருக்கிறார்.
17 comments:
Govt must be reconsider his suspension.I support Umasankar IAS
~TSEKAR
நாதாரிப் பசங்க திட்டியது அரசியல்வாதியா இல்ல, இந்த நாசமா போன ஜனங்களைத்தான்
எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்!
உங்கள் கருத்து சரியானதே. ஜனங்க காசு வாங்கி ஓட்டு போடும் வரை இப்படித்தான்.
என்னத்தச் சொல்ல அண்ணாச்சி... ஊடங்களும் சரி மக்களும் சரி, இத பெருசா கண்டுக்க மாட்டீங்கராங்க...
ஊடகங்களும் மக்களும் கண்டுக்காதது மிகமிக கொடுமை.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டால் ஒழிய நல்ல மாற்றங்கள் இனி ஏற்பட வாய்ப்பில்லை. எழுச்சியை நோக்கிய பயணத்தில் நாமும் ஒரு சிறு பொறியாக இருப்போம்!
சரியான கருத்து எழுச்சி தேவைதான், ஆனால் காசுக்கு வோட்டை அடகு வைக்கும் இந்த நாட்டில் அது சாத்தியமா?
உமாசங்கர் உத்தமர் போல் நடிப்பதில் வல்லவர்
நந்தகுமார் உங்களின் கருத்துக்கு என்ன ஆதாரம்?
Bravo.....
உமா சங்கரை தனி நபராக பார்க்க வேண்டாம். ஊழலுக்கு எதிராக இருந்த அதிகாரியின் பணிநீக்கமாக இந்த நிகழ்வைப் பார்க்கவும்.
எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்!
விஷயம் முதலமைச்சரிடம் போனது. அவர் அந்த ஏரியா டிராபிக் கமிஷனரை அழைத்து, சார்ஜ் ஷீட்டை திரும்பப் பெரும்படியும், சார்ஜண்டை தற்காலிக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுருக்கிறார்.
//
ஆட்சிக்கு வந்தா.. அவரவர் தன்னை கடவுளாக நினைத்து கொண்டு ஆடுறாங்க பாஸ்..
இப்போது.......மக்கள் கொடுத்த பதவியை வைத்து... மக்களையே ஆட்டு மந்தைகளாக்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது..
@NandaKumar said...
உமாசங்கர் உத்தமர் போல் நடிப்பதில் வல்லவர்
//
ஆமா சார்.. மற்ற அரசியல்வாதிகளால்..பாலும் தேனும் ஓடும் நாட்டை, உமா சங்கர் கெடுக்க வந்துட்டாரு பாருங்க..
நேர்மைக்கு மற்றொரு பெயர் நடிப்புனா.. அவரு உத்தமராவே நடிக்கட்டும்..
பட்டாபட்டி உங்கள் கருத்து சரியானதே.
என்னுடைய மாவட்டத்தில் (திருவாரூர்) அவர் கலக்ட்டராகயிருந்த போது அவருடைய செயல்களை நேரில் கண்டவன் நான் . அப்போதிலிருந்தே அவர் கட்டம் கட்டப்பட்டு அரசியல்வாதிகளால் துன்புறுத்தப்படுகிறார்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.