வானம் பார்த்து
பயிர் வளர்த்து
வயல் வெளியில்
வருகை பார்த்து
உலகை வாழ
வைக்கும் விவசாயிக்கு
உண்மையான தேவதை
கிராமத்தில் போற்றப்பட்டு
கழனியிலே காலணி படாது
கட்டிக்காக்கும் காவலர்களின்
கண் கண்ட தெய்வம்
நகரத்திலே நடந்து வந்தால்
முதல் நாள் போற்றப்பட்டு
தொடர்ந்து வந்தால்
தொல்லை என தூற்றப்பட்டு
மடை திறந்து வந்தால்
மக்களால் வெறுக்கப்படும்.
எப்பொழுது விழுந்தாலும்
ஏற்கும் மனம்,ஏந்தும் கைகள்
ஏன் எனக் கேட்போருக்கு
எந்நிலையில் இருந்தாலும்
என் அங்கம் தடவி
சத்தமுடன் விழுந்து
முத்தமழை பொழிந்து
என்னை தழுவுபவள்
அவள் தானே
நல்லாருக்கு கும்மாச்சி.
ReplyDelete//காலனி படாது//
காலணி?
நன்றி பாலா ஸார், தவறு திருத்தப்பட்டுவிட்டது.
ReplyDeleteஎப்பொழுது விழுந்தாலும்
ReplyDeleteஏற்கும் மனம்,ஏந்தும் கைகள்
ஏன் எனக் கேட்போருக்கு
எந்நிலையில் இருந்தாலும்
என் அங்கம் தடவி
சத்தமுடன் விழுந்து
முத்தமழை பொழிந்து
என்னை தழுவுபவள்
அவள் தானே
நல்லாயிருக்கு கும்மாச்சி
மழை என்னையும் நனைத்தது... பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்கள் கவிதை
ReplyDeleteதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
என்ற திருக்குறளை நினைவுக்கு கொண்டு வருகிறது!
நல்லாயிருக்கு... ஆனா...
ReplyDelete//வானம் பார்த்து
பயிர் வளர்த்து
வயல் வெளியில்
வருகை பார்த்து//
இந்தத் துவக்கவரிகளில் இருக்குற இசைமையும், நறுக்குத்தன்மையும் தொடர்ந்திருந்தா இன்னும் நல்லா இனிமையா இருந்திருக்கும்...
அது சரி... அந்த புகைப்படம் எதைக்குறிக்க...? :-)
எப்பொழுது விழுந்தாலும்
ReplyDeleteஏற்கும் மனம்,ஏந்தும் கைகள்
ஏன் எனக் கேட்போருக்கு
எந்நிலையில் இருந்தாலும்
என் அங்கம் தடவி
சத்தமுடன் விழுந்து
முத்தமழை பொழிந்து
என்னை தழுவுபவள்
அவள் தானே
..............superb!
உலகை வாழ
ReplyDeleteவைக்கும் விவசாயிக்கு
உண்மையான தேவதை
..... அருமையான வரிகள்.
supper
ReplyDeleteநல்லாயிருக்கு..
ReplyDeleteவருகை தந்து, பின்னூட்டம் இட்ட அணைவருக்கும் நன்றி.
ReplyDeleteபடம் சூப்பர்........கவிதையும் சூப்பர்
ReplyDeleteanubavitha sugamum therikirathu, kavithaiyilum + padathilumthaan!
ReplyDelete