கிளம்புமுன் ஜெஸ்ஸி என்னை முத்தமிட்டாள்.
நான் என் கண்ணில் தோன்றிய கண்ணீர்த் துளிகளும், என் முகம் அழும் விகாரமும் தெரியவேண்டாம் என்று முகத்தை திருப்பிக் கொண்டேன். பிறகு விறுவிறு வென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டேன், என் மனைவியும் பிள்ளைகளும் வர தாமதமாகியது. பின்பு வீடு வந்து ஏதோ சாப்பிட்டு உறங்க சென்றேன். உறக்கம் பிடிக்கவில்லை. என் மனைவி என்னை பரிதாபத்துடன் பார்த்தாள். ஜெஸ்ஸி இல்லாத இந்த வீடு எப்படி இருக்கப் போகிறது?, என்ற அர்த்தமற்ற யோசனை. வாழ்கை இயங்கிக் கொண்டிருக்கும் ஜெஸ்ஸியின் ஞாபகம் எங்கள் எல்லோரிடமிருந்து குறைய சில காலமாகும். என் குழந்தைகள் அழுது அழுது முகம் வீங்கிக் கொண்டு எங்களை ஏறெடுத்து பார்க்கவே இல்லை.
நான் எனது கல்லூரிப் படிப்பை முடித்து அந்த நகரத்தில் சிறந்தக் கம்பனியில் மெடீரியல் டிபார்ட்மெண்டில் பர்ச்சேஸ் ஆபீசராக பதவி ஏற்றேன். ஆபரேஷன் டிபார்ட்மென்ட் ஆர்டர் செய்யும் பொருட்களை அவர்கள் கொடுக்கும் டெக்னிக்கல் விவரங்களை வைத்துக் கொண்டு ஒப்பந்த புள்ளி கோரி குறைந்தது மூன்று சப்ளயரிடம் கொடசன் பெற்று அதனுடைய தரச்சான்றிதழ் ஆபரஷனுக்கு கொடுக்க வேண்டும். தர அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யலாம். ஆனால் கடைசி முடிவு என்னுடையது தான். இது அவர்களுக்கு பிடிக்க வில்லை. இதனால் எனக்கும் ஜோசெப்க்கும் ஒரு முறை ஒரு பெரிய வாக்குவாதம் வந்து இருவரும் நேரில் வந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்தோம். எங்களது சண்டை கம்பெனியில் மிகவும் பிரபலம். மேலும் வந்த பரிவர்த்தனைகளில் எங்களது சண்டை முற்றி ஒருவர் சொல்வதை மற்றொருவர் வேணும் என்றே எதிர்ப்போம். அப்படி இருந்த எங்களை நண்பர்களாக வைத்தவள் ஜெஸ்ஸி. எப்படி?
அன்று எதோ பொருள் வாங்க வேண்டும் என்று அந்த அங்காடிக்கு சென்றேன். அங்கு நான் ஜோசெப்பை கவலை தோய்ந்த முகத்துடன் கண்டேன். அவனுடைய மனைவி அவனருகே கண்ணீருடன் “ஜெஸ்ஸி ஜெஸ்ஸி” என்று பிதற்றிக் கொண்டிருந்தாள். நான் எங்களது சண்டையை மறந்து என்ன என்று விசாரித்தேன். அவனது இரண்டு வயதுக் குழந்தை அந்த கடைக்கு அவர்கள் ஜவுளி வாங்கிய நேரத்தில் காணவில்லை. கடை சிப்பந்திகள் தேடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு மணி நேரமாக தேடிக் கொண்டிருக்கிரார்கள் குழந்தை கிடைக்கவில்லை. நான் அவர்களை தேற்றி குழந்தையை தேடச் சென்றேன். நான் ஜெஸ்ஸியைப் பார்த்ததில்லை. அந்தக் கடை நான்கு மாடிகள் கொண்டது. இவர்கள் முதல் மாடியில் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் மேல் இரண்டு மாடியிலும் தேடச் சென்றேன். நான் படிவழியாக இரண்டாவது மாடியில் ஏறும் பொழுது அட்டைப் பெட்டிகள் எல்லாம் அடுக்கியிருந்த இடத்தைப் பார்த்தேன், சரி அங்கே தேடலாம் என்று சென்றாள், ஒரு குழந்தை அட்டைப் பெட்டிகளின் நடுவே சிறிய அட்டைப் பெட்டிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஜெஸ்ஸியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து குழந்தையை தூக்கினேன்.
உன் பெயர் என்ன என்று கேட்டேன்.
மழலையில் “ஜெச்சி” என்றது.
குழந்தையை தூக்கிக் கொண்டு ஜோசப் இருக்குமிடம் வந்தேன், அவன் மனைவி மயக்கமுற்றிருந்தாள். அவர்களை சுற்றி ஒரே கூட்டம். நான் கூட்டத்தை விலக்கி குழந்தையை ஜோசெபிடம் கொடுத்தேன். கூட்டம் அவன் மனைவிக்கு மயக்கம் தெளியவைத்து ஆசுவாச படுத்திக் கொண்டிருந்தார்கள். மயக்கம் தெளிந்து குழந்தையை வாரி அணைத்தாள்.
ஆதற்கு பிறகு நானும் ஜோசெபும் மிக நெருங்கினோம். பிறகு எனக்கு கல்யாணம் நடந்தது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாம் ஒன்றாகக் கொண்டாடினோம். எனக்கு பிறந்து குழந்தைகளுக்கெல்லாம் ஜெஸ்ஸி தான் அக்கா. ஜெஸ்ஸி எப்பொழுதும் என் வீட்டில் தான் இருப்பாள். அவள் எங்களுக்கு முதல் குழந்தை.
ஒரு முறை ஜோசப்பும் அவன் மனைவியும் வேளாங்கண்ணி சென்றார்கள். ஜெஸ்ஸியை எங்கள் வீட்டில் விட்டுச் சென்றார்கள். வேளாங்கன்னியில் இருந்து திரும்பும்பொழுது கார் விபத்தில் என் நண்பன் ஜோசப் இறந்து போனான். அவன் மனைவி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினாள். அப்பொழுது ஜெஸ்ஸிக்கு ஆறு வயது. மரணம் புரியாத வயது.
அவள் அம்மாவால் குழந்தையை கவனிக்க முடியாத நிலை. ஜெஸ்ஸி என் குழந்தைகளுடன் மூன்றாவது குழந்தையாக வளர ஆரம்பித்தாள்.
அந்த ஜெஸ்ஸிதான் இப்பொழுது இருபத்திரண்டு வயதாகி சாலமனை மணமுடித்து அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறாள்.
அவளை விமான நிலையத்தில் வழியனுப்ப சென்ற பொழுது தான் என்னை முத்தமிட்டாள்.
14 comments:
அண்ணே, கதையா? நெசமாண்ணே?. ரொம்ப டச்சிங்க இருக்கு.
ஜே முதலில் வருகைக்கு நன்றி. இது என் அனுபவம், சற்றே கற்பனையுடன். இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
அன்பின் வலி.
எஸ்.கே. வருகைக்கு நன்றி
அன்புக்கு ஏன்.... வாழ்த்துகள்
குரு வருகைக்கு நன்றி
சுபெர்ப் கும்மாச்சி
ஒரு மாதிரியாக ஆரம்பித்து அருமையான
"டச்சிங்கில்" முடித்துவிட்டீர்கள். குழந்தை படம் முதலே போட்டுவிட்டதால் சின்ன "r" பெரிய "R" suspense க்கு இடம் எதுவும் கொடுக்கவில்லை!
மனசை தொட்ட கதை...!!
நெகிழ வைத்த கதை ....
அருமை நண்பா முழுவதும் படித்தேன் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
yuo made me to cry, you are bad so so soooooooooooo bad.
கலக்கல் பதிவு ஜி.
Nice
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.