இனி கூட்டணி, பேரணி என்று ஊரு நாறடிக்கப்படும். ஏற்கனவே யாரு வேட்டி துவைக்கப் போகிறார்கள், இல்லை உள்பாவாடை துவைக்கப் போகிறார்கள் என்ற பேச்சு தொடங்கிவிட்டது. ஒரு சீட்டு, ரெண்டு சீட்டு கட்சியெல்லாம் இப்பொழுதே துண்டு போட்டு ஒரு இடத்தில் ஒதுங்கிவிட்டனர். முப்பது நாற்பது சீட்டுகள் பேசும் கட்சிகள் முண்டியடித்து பேரம் பேசத் தொடங்கிவிட்டனர். இன்னொருக் கட்சி நானே ராஜா நானே மந்திரி என்று கூவிக் கொண்டிருக்கிறது. தேசியக் கட்சி ஒற்றர்கள் வைத்து வேவு பார்த்து கொண்டிருக்கின்றனர். உளவுப் படையின் அறிக்கையில்தான் கூட்டணி தர்மம் காக்கப்படுமா இல்லை தாக்கப்படுமா என்று தெரியும்.
ஆளுங்கட்சி அறிவிக்கப் போகும் இலவசங்கள் ஏலம் போகும். எதிர் கட்சி ஏளனப் பேச்சு எங்கும் எதிரொலிக்கும். லாரிகளுக்கு கிராக்கி ஏறும். டாஸ்மாக் விற்பனை விண்ணைத்தாண்டும். போஸ்டர் வியாபாரம் கல்லா கட்டும். தலைவர்களை வரவேற்க வெடி விற்பனை, ஏற்கனவே சிவகாசிக்கு மொத்த ஆர்டர் செய்துவிட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. இனி சந்து முனைகளில் பந்தல்கள் பெருகி மைக் செட் நூற்றி இருபது “டெசிபலை” தாண்டும். எல்லாவற்றையும் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் திருவாளர் பொது ஜனம்.
எந்திரன் வெல்லுவானா?
அடுத்த ஆட்சி அய்யாவா? இல்லை அம்மாவா?, இல்லை ஐயைய்யாவா?, இல்லை அம்மையாவா?, பொருத்திருந்து பார்ப்போம்.
ஒரு முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.
மற்றைய முடிவு தெரிய சில மாதங்கள் ஆகும்.
அய்.. நானும் எந்திரனை வைத்து ஒரு பதிவு போட்டுட்டேனே.
3 comments:
அய்.. நானும் எந்திரனை வைத்து ஒரு பதிவு போட்டுட்டேனே.
.......ஜீப்ல ஏறிட்டீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா...
மொக்கய் பதிவு!!
அரசியல்வாதிகளும் நடிக்கறாங்க அப்படின்னு எவ்வளவு அழகா எந்திரனோட கம்பேர் பண்ணி சொல்லிட்டீங்க.. சூப்பர்.
கும்தலக்கடி கும்மாவா கும்மாச்சினா சும்மாவா.... (இப்படி கூட பேரணிகள்ல கோஷம் போடுவார்கள்)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.