Wednesday, 27 October 2010

கலக்கல் காக்டெயில்-11

வெறி பிடித்திருக்கிறது




அன்புமணி ராமதாஸ் சமீபத்திய கூட்டம் ஒன்றில் தனக்கு வெறி பிடித்திருப்பதாக கூறியுள்ளார். ஆட்சியைப் பிடிக்கும் வெறியாம். மூன்று கோடி வன்னியர் உள்ள நாட்டில் நம் கட்சி ஆட்சியைப் பிடிப்பது அரிதா? என்று கேட்டுள்ளார்.

மேலும் இது வரை இருந்த மத்திய அமைச்ச்சர்களிலே தான் தான் ஏதோ கிழித்ததுப் போலவும், மற்றவர்கள் கு........யை தேய்ப்பதற்கு பாராளுமன்றம் போவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இவர் பாராளுமன்றம் போனது பின் வழியாக. இன்னும் ஒரு முறைகூட மக்களை சந்திக்கவில்லை.

இவர்கள் பகிரங்கமாக ஜாதியரசியல் நடத்துவது நம் நாட்டின் சாபக்கேடு. வெள்ளையனைவிட இவர்கள் தான் சாதிப்பெயரை சொல்லிக்கொண்டு பிரித்தாண்டு கொண்டிருக்கிறார்கள்.

வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டு பிடித்தார்கள், ஆனால் இன்னும் பதவி வெறி, ஜாதி வெறி, பண வெறி, காம வெறி போன்றவற்றிக்கு எப்பொழுது கண்டு பிடிப்பார்களோ?

இந்த முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அப்பாவும் மகனும் சேர்ந்து ஒரு வேளை கண்டு பிடிப்பார்களோ?



படித்ததில் ரசித்த கவிதைகள் சில

இடமற்று நிற்கும்

கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க

பேருந்து வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம்

எதை எதிர்பார்க்கிறாய்

காதலையா?



வரிக்கு வரி நிஜம்



ஆமாம் ஆமாம்

நீ பேசும் ஒவ்வொன்றும்

வரிக்கு வரி நிஜம்

முற்றுப்புள்ளி உள்ளிட்ட

அனைத்தும் ஏற்கத் தயார்

அனைத்துக்கும் ஆமாம்.

சங்கிலியால் கட்டப்பட்டது

யானை என்றாலே

தப்புவது கடினமாச்சே

சங்கிலியால் கட்டப்பட்ட டம்ளர்

தப்புமோ கூறு.



நன்றி: பா. சத்தியமோகன்.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

மதுரை சரவணன் said...

//சங்கிலியால் கட்டப்பட்டது

யானை என்றாலே

தப்புவது கடினமாச்சே

சங்கிலியால் கட்டப்பட்ட டம்ளர்

தப்புமோ கூறு.//

ராமதாஸ் செய்தி அருமையான நகைச்சுவை . கவிதை பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

கும்மாச்சி said...

சரவணன் வருகைக்கு நன்றி

Chitra said...

நல்ல பகிர்வுங்க... நன்றி.

எல் கே said...

ஜாதி கச்சிய தடை பண்ணனும். இவங்கதான் இந்தியாவில் ஜாதிய ஒழிக்க போறானுகளா

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு நண்பரே..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.