Saturday, 23 October 2010

ஜீரோ ஆன ஹீரோ -----அம்மா பார்வையில்

அம்மாவின் மதுரை கூட்டம்தான் இப்பொழுது அரசியல் களத்தின் ஹைலைட். வழக்கம்போல தி.மு.க தலைவரையும் அவர்கள் குடும்பத்தாரையும் ஒரு பிடி பிடித்துவிட்டார்கள்.


அஞ்சா நெஞ்சனை பிரித்து, அடித்து, பிழிந்து, காயப் போட்டு தொங்க விட்டார்கள். ஐயாவின் குடும்பம் கொழிப்பதையும், திரைப் படத்துறையில் அவர்களது ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் இப்பொழுது கோலோச்சுவதையும் ஒரு பிடி பிடித்தார்கள். அப்பொழுது சொன்ன விஷயம் ஒன்று நெருடுகிறது. கலைஞர் குடும்பம் ஹீரோவை ஜீரோவாக்கி விட்டதாக சொன்னார்கள். அம்மாவின் பார்வையில் உள்ள அந்த ஹீரோ ஜீரோவானது சூரிய குடும்பம் காரணம் என்று கூற்று சற்றே நெருடுகிறது. அதே சூரிய குடும்பம் அந்த ஹீரோவை தூக்கி வைத்துக் கொண்டாடிய காலமும் உண்டு. உண்மையில் ஹீரோ ஜீரோவாவதும், ஜீரோ ஹீரோவாவதும் அவரவர் திறமை சார்ந்த விஷயம்.

தமிழ் திரையுலகம் எத்தனையோ ஹீரோக்களை பார்த்திருக்கிறது. தயாரிப்பாளர் வாரிசுகள், நடிகர்களின் வாரிசுகள், இயக்குனரின் வாரிசுகள் என்று புது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் எத்துனை பேர் நிலைக்கிறார்கள் என்பது தான் கேள்வி. என்ன தான் ஊடங்கங்கள் ஒத்தூதினாலும், உயர தூக்கிப் பிடித்தாலும் ரசிகனின் பார்வை வேறு பட்டது. அதே நேரத்தில் நாம் என்ன பார்க்க வேண்டும், என்ன கேட்க வேண்டும் என்பது இப்பொழுது தொலைக் காட்சிகள் நிர்ணயிக்கின்றன என்ற கூற்றில் ஓரளவிற்கு உண்மை இருக்கவே செய்கிறது.

அம்மா இது போல பல விஷயங்களை மதுரையில் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். அறிவாலயமும் பதிலுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கட்சிகள் வந்தாலும் எங்களை ஒன்றும் பண்ண முடியாது என்கிறார்கள். அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறது, திருவாளர் பொது ஜனம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் எழுதப் போகும் தீர்ப்பு அவருக்கே தெரிந்த விஷயம்.

ஆனால் அவர் மாத்தி மாத்தி குத்தி மன்னிப்போம் மறப்போம் என்று எல்லோரும் கொள்ளையடிக்க வழி செய்வார்.

இனி கட்சிகள் அணி மாறும் கூத்து, பேரம் பேசுதல், அல்லக்கை கட்சிகளின் ஆட்டம் ஒரே ரகளைதான்.

இனி ஒரு படம் நடித்தவர், ஓரமா தலையக் காட்டினவர், எல்லோரும் அரசியல் களத்தில் ஆடுவார்கள். இரண்டு கட்சிகளும் மார்க்கெட் போன நடிகை, நடிகர்களை காசு கொடுத்து களத்தில் இறக்குவார்கள். அவர்களும் வாங்கிய காசிற்கு ஜால்ரா போடுவார்கள். தமிழ் நாட்டு அரசியலின் சாபக்கேடு இது.

அது சரி நடிகரின் படத்திற்கு பாலபிஷேகமும், பீரபிஷேகமும் செய்யும் பகுத்தறிவாளர்கள் உள்ள நாடு இது.

எப்பொழுது விடியும்?.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

மதுரை சரவணன் said...

nalla arasiyal paarvai. vaalththukkal

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சரவணன்.

எஸ்.கே said...

நல்ல அலசல்!

Ravi kumar Karunanithi said...

kalaignar talent'ah dhan irukaru. but nammadhan aemandhu porom. idhu epdi theriuma iruku.
மனுஷன் படச்சதுல உருப்படியான ரெண்டே விஷயம்:
ஒன்னு நான், இன்னொன்று என் குடும்பம்...
இப்படிக்கு
கலைஞர்...
ipdi iruku....
aanalum tamilnadu'a kai kulla vachi irukanga...
when amma return to get CM post....?
padaipu arumai..

Unknown said...

supper shot

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது சரி நடிகரின் படத்திற்கு பாலபிஷேகமும், பீரபிஷேகமும் செய்யும் பகுத்தறிவாளர்கள் உள்ள நாடு இது.

//

ஹா.. ஹா.. அதனாலதானே.. அரசியல்வாதிகளின் காலச்சக்கரம் சுழல்கிறது கும்மாச்சி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல அலசல் அன்பரே.... எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நம் நாட்டின் நிலை இது தானே..

பித்தன் said...

ithuthaan namma thamizh naadu, kazhagam valarkirathu

sarathy said...

அலசிவிட்டீர்கள் நன்றாக. யோசித்துக் 'குத்து'வார்களா நம் தமிழ் மக்கள்?
பொறுத்திருந்து பார்ப்போம் - தீர்ப்பை.
[அப்படியே காலம் கடத்திவிட்டோம்]

MANO நாஞ்சில் மனோ said...

//எப்போது விடியும்//
ஒரு நாளும் விடியாது!!!!
போங்க போய் பிள்ளைகளை படிக்க வையுங்க.....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.