Pages

Tuesday, 16 November 2010

கலக்கல் காக்டெயில்-12 (இருநூறாவது பதிவு)

என் பார்வையில் மைனா
இன்று காலை தொட்டே மழை சென்னையில் பெய்து கொண்டிருந்தபடியால் தியேட்டர் பக்கம் ஒதுங்கினேன். பார்த்த படம் மைனா. கதை ஒன்றும் புதியதல்ல. ஒரு வரி கதைதான். ஆனால் வித்யாசமாக சொல்லப்பட்ட விதத்திற்கு பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள். படத்தின் நாயகனும் நாயகியும் புதுமுகங்கள். விதார்த்தும், அமலாவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சமீப காலமாக தமிழ் திரையுலகில் இது போன்ற படங்கள் வந்து அவ்வப்போது புது இயக்குனர்கள் நல்ல படம் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை ஊட்டுகின்றன.

போடி, தேனீ பக்கம் இவ்வளவு அழகான இடங்களா. ஆஹா லொகேசன் அருமை. படத்தின் இன்னும் ரசிக்க வேண்டிய விஷயம் ஈமானின் பின்னணி இசை. காமெடியில் தம்பி ராமையா கலக்கியிருக்கிறார். முக்கியமாக தன் மேலதிகாரியின் பதட்டதைக் குறைத்து, “எனக்கு மட்டுமா தீபாவளி கொண்டாட முடியவில்லை என்று ஆதங்கம் இல்லை. விடுங்க ஸார் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன், சாப்பாட்டுல விஷம் வைத்துவிடுகிறேன் என்று தன் எல்லா முகங்களையும் காட்டுகிறார். ஜெயில் அதிகாரியாக வரும் சேது, நாயகியின் அம்மா, நாயகனின் அப்பா என்று ஒவ்வொருவரும் படத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். பேருந்து குத்துப் பாட்டு ஆரம்பிக்கும் முன்பு அரங்கில் எழுந்த ஆரவாரம், குத்துப் பாட்டையும் தமிழ் படத்தையும் பிரிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

படம் முடியும்பொழுது நல்ல படம் பார்த்த திருப்தி.



ராசாவும் அலைக்கற்றை விவகாரமும்.


ராசா ராஜினாமா எப்பொழுதோ நடந்திருக்க வேண்டிய ஒன்று, தாமதப் படுத்தியதால், தி. மு. க விற்கு தலைக் குனிவு. ராசாவிற்குப் பிறகு “ராணி”தான் அமைச்சர் என்ற பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து காங்கிரெஸ் சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் பேரம் பேச அச்சாரம் போட்டுவிட்டனர். அம்மா வேறு கதவை திறந்து கூவுகிற படியால் காங்கிரெஸ் பூனை எந்தப் பக்கம் தாவும் என்பது தற்போது கேள்விக் குறியே. மொத்தத்தில் வரும் தேர்தல் அதிக எதிர் பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. ஒன்று யார் வந்தாலும் ஒன்றும் பெரிய மாற்றம் வரப்போவதில்லை என்பது ஊரறிந்த விஷயம்.



அனுபவமொழிகள்

குற்றம் புரிந்தவன் தனக்கு நியாயம் கேட்கிறான், குற்றத்திற்கு ஆட்பட்டவனும் நியாயம் கேட்கிறான், யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம்தான் முடிவு செய்கிறது.

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்ப்பது எல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.



...............கண்ணதாசன்.

21 comments:

  1. முதலில் 200-வது இடுகைக்குப் பாராட்டுகள். மென்மேலும் பல அட்டகாசமான இடுகைகள் எழுத வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  2. சேட்டை உங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  3. அண்ணே,முதல்ல கையை குடுங்க ,திருப்பி குடுத்துடறேன்,... ஹி ஹி 200 வது இடுகைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. செந்தில் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. 200 வது இடுகைக்கு வாழ்த்துகள்...தொடருங்கள்...

    ReplyDelete
  6. தாமஸ்ரூபன் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. naan ippadhan myna movie parthutu inga vandhen...

    ReplyDelete
  8. 200வது இடுகைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் கும்மாச்சி

    ReplyDelete
  10. வாழ்த்துகள் கும்மாச்சி:)

    ReplyDelete
  11. வருகை தந்து வாழ்த்திய அணைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  12. 200-வது இடுகைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  13. இருநூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்,,,

    அதென்ன கும்மாச்சி//

    ReplyDelete
  14. ஹா... இருநூறா?..
    தொடர்ந்து கலக்குங்க.. மைனா பார்க்கனும் பாஸ்.. வீசிடியா.. இல்ல தியேட்டரானு தெரியலே.. ஹி..ஹி

    ReplyDelete
  15. பட்டாபட்டி வருகைக்கு நன்றி, மைனாவ தியேட்டரில் பாருங்க பாஸ்.

    ReplyDelete
  16. நான் எனது தளத்தில் பல்சுவைப் பதிவுகள் ஒன்றை எழுத எண்ணியிருந்தேன்... அதற்கு தலைப்பு என்ன வைக்கலாம் என்று ஆழமாக யாரும் வைக்காத தலைப்பாக இருக்க வேண்டும் என சிந்தித்து காக்டெயில் பக்கங்கள் அல்லது காக்டெயில் தத்துபித்துவங்கள் என்று வைக்க முடிவு செய்திருந்தேன்... இன்னைக்குத்தான் உங்க தலைப்பை பார்த்தேன்... ரொம்ப அப்செட் நண்பா...

    ReplyDelete
  17. பிரபாகரன் வருத்தம் வேண்டாம், நான் தலைப்பு தருகிறேன், கதம்பம், கூட்டாஞ்சோறு, கலவை, வடைகறி போன்ற தலைப்புகள் இருக்கின்றன.

    ReplyDelete
  18. 200-வது இடுகைக்குப் பாராட்டுகள். மென்மேலும் பல அட்டகாசமான இடுகைகள் எழுத வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  19. ம்ம்ம்... தலைப்பு தந்ததற்கு நன்றி... ஆனால் நான் சரக்கு, சரக்கு சம்பந்தமான தலைப்பை எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.