Pages

Thursday, 25 November 2010

கலக்கல் காக்டெயில்-13

நாட்டாமை வீட்டில் நாட்டாமை


அந்த நாட்டாமை வீட்டிலேயே இப்பொழுது நாட்டாமை தேவை. தன்னை அடித்து துன்புறுத்தியதாக போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார், நாட்டாமையின் மகள். இப்பொழுது நாட்டாமை தலை மறைவாகியிருக்கிறார். மகனையும் காணவில்லை. விஷயம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டாமை இருக்கும் ஏரியாவில் அந்த நெடிய வில்லன் நடிகரின் தம்பி ஒரு காலத்தில் சூபெர்மர்கட் வைத்திருந்தார். நாட்டாமை வீட்டு வேலையாள் போய் எல்லா சாமானும் நாட்டாமை அம்மா வாங்கி வரச் சொன்னதாகச் சொல்லி வாங்கிச் சென்றுக்கிறார். காசு கேட்ட பொழுது அம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள், அம்மா கொடுப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

தம்பி மாலை அம்மாவிற்கு போன் செய்தால் என்ன தம்பி பணமெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்தா பாப்பாவிடம் பேசுங்கள் என்று பீப்பாவிடம் போனை கொடுத்திருக்கிறார்.

அவ்வளவு தான் அப்புறம் காசு எங்கே வருது.?

ஊரை அடித்து உலையில் போட்ட சொத்துக்குத்தான் இப்பொழுது தகராறு.

நாட்டாமை, கம்பியிலே எக்ஸ்பெர்ட் முறுக்கு கம்பி வேலைக்கு ஆவலையா?.



படித்ததில் ரசித்த கவிதை

நிதம்

ஒரு சோறு சமைத்து

அதில்

ஒரு பொரியல் சேர்த்து

நின்று நிறைய பரிமாறி

ஒரு சொல்லும் வலித்திடாமல்

ஒத்தடமாய் பேசி

ஏசல் பூசல்

எல்லாம் பெற்று

யவ்வனமாய் உடுத்தி

நிலவு வரக் காத்திருந்து

ஏந்திழையாள்

ஏவல் எல்லாம் செய்திடவே

தாங்கிப் பெற்றவர்களே

தருகிறார்கள்

தங்க நிலவை ஒரு

சமூக அடிமையாய்

சகல மந்திரங்களும் ஓதி

சபை நிறைந்து இருக்க

அவன் மனைவி என

பெயர் சூட்டி அனுப்புகிறார்கள்

ஆயினும் இங்கே கூடி கூடி

கொக்கரிக்கிறார்கள்

ஆங்கிலேயனை துரத்தியபோழுதே

அடிமைத்தனத்தை ஒழித்து விட்டோமென்று.



நகைச்சுவை

நம்ம ஊரு பண்பலை வானொலியில் கேட்டது

ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம்



“எங்கப்பா ரொம்ப பயந்தான்குள்ளிடா”



எப்படிடா சொல்லுறே”



“பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும பொழுது என் கையை கெட்டியமா பிடிச்சிக்கிறார்டா”.

6 comments:

  1. அடக்கொடுமையே!!!!! ஐந்திணைப்பெற்று, அந்தெந்த நேரத்து ஹீரோ, அருவா இயக்குனர், அருவா நாயகர் என ஊத்திகொடுத்தும் வளைத்து போட்டும், இப்ப யாரை வளைக்க முயற்சி செய்து தலைமறைவாயினர்?
    ஆனா எல்லாத்துக்கும் சூத்திரதாரியான ரிக்ஷாகாரியை ஒன்னும் பண்ணமுடியலையே?

    ReplyDelete
  2. மன்மதக் குஞ்சு பின்னூட்டம் சூப்பர்.

    ReplyDelete
  3. ஹா..ஹா...
    நீங்கபாட்டுக்கு இப்படி எழுதீட்டிங்க்ளே.. வன்புணர்ச்சினு, சொம்ப தூக்கிட்டு, பதிவர்கள சண்டைக்கு வந்திடப்போறாங்க.. ஹி..ஹி

    ReplyDelete
  4. engadaa yaarum idhaippathhi ezhudalayenu ninaichen nadathunga poruthirundhu parpom

    ReplyDelete
  5. சூப்பர் அப்பு

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.