அந்த விவகாரத்தில் திக்கு முக்காடி முதலில் ராஜா தலித் ஆதலால் தான் இதை பெரிது படுத்துகிறார்கள் என்று புலம்பினார். இப்பொழுது
சூத்திரர்கோர் நீதி தண்டச்சோறு
பார்ப்புக்கொரு நீதி
என்று பாரதியை மேற்கோள் காட்டுகிறார். மொத்தத்தில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலமையில் தலைமை ஆடிப் போயிருக்கிறது.
போதாதற்கு “நீரா ராடியா” வேறு கனிமொழி ராஜா விவகாரத்தை கிளப்பிவிட்டதே மாறன் தான் என்று புதிய வெடியைப் போட்டிருக்கிறார். அவர்களுக்குள் நடந்த பேச்சு விவகாரம் இப்பொழுது இணைய தளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
உடனே மாறன் தாத்தாவிடம் போய் புதியத் திரியை கிள்ளி விட்டிருக்கிறார். தாத்தாவிற்கு இந்த வயசில் இது தேவையா?
இது தான் சாக்கு என்று கொடநாட்டில் கும்மியிருந்த அம்மா நாளுக்கொரு அறிக்கை விடுகிறார். பட்டுப்போன இலை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.
தேர்தலுக்குள் என்ன என்ன நடக்குமோ தெரியவில்லை.
காங்கிரசின் பீகார் கனவு தவிடு பொடியாகிவிட்டது. தமிழ்நாடு காங்கிரசின் நிலைமை அய்யகோதான்.
யார் யார் என்ன வியூகம் அமைக்கப் போகிறார்கள். மருத்துவர் ஐயா எங்கே பிச்சை எடுப்பார்?, கேப்டன் என்ன உதார் விடுவார்?
நடுவில் சுப்ரீம் ஸ்டார், டண்டணக்கா போன்றோர் கட்சிகள் இருக்குமா காணாமல் போகுமா?.
வைகோவிற்கு போக்கிடம் இல்லை.
மே மாதத்திற்குள் ஒரு வழி பண்ணிவிடுவார்கள். பார்ப்போம்.
5 comments:
//மே மாதத்திற்குள் ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.//
ஹி..ஹி..பதிவுலகிலும் தான்..
பட்டாபட்டி நிஜம்தான், பதிவுலகிற்கு நல்ல தீனிதான்.
அது மாப்பு இல்ல ?
வாங்க தொப்பிதொப்பி, முதல் முறை வந்திருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி
ஆஹா,,,நீங்க எல்லாரையும் ஒரு வழி பண்ணிருக்கீங்களே..சூப்பரு...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.