சமீபத்தில் சென்னை சென்ற பொழுது சுஜாதாவின் “விஞ்ஞான சிறுகதைகள்” வாங்கி வந்தேன். ஐம்பது விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு. இதில் சில கதைகளை திரும்ப திரும்ப பல முறை படித்திருக்கிறேன். காலயந்திரம், திமலா, ஜில்லு, யாகம் எத்துனை முறை படித்தாலும் அலுக்காதவை.
இப்பொழுது படிக்கும் பொழுது “அது” கதையை வெகுவாக ரசித்தேன். கதையின் சுருக்கம்
அந்தப் புதிய ஒளி வட்டம் வானத்தில் தெரிய ஆரம்பித்தவுடனே நாட்டு மக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அரசாங்கம் பிடிவாதமாக வதந்திகளை நம்பாதீர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள்.
ஆத்மாவும் நித்யாவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்பொழுதுதான் நித்யா நவீன மெஸ்ஸயா பாவாவிடம் போகலாம் என்று சொல்லுகிறாள். ஒரு நெடிய வரிசையில் நின்று அவரை சந்திக்கிறார்கள். அவர் உலகம் எப்படியும் அழியப் போகிறது என்னிடம் பாவ மன்னிப்பு பெறுங்கள் என்று சொல்லுகிறார்.
ஆத்மா, நித்யா முறை வருகிறது. ஆத்மா அவரிடம் “பாவா நீங்கள் தான் ஒரு பாவமும் செய்யாதவர் பின் ஏன் நீங்களும் பாவ மன்னிப்பு கோருகிறீர்கள்” என்று கேட்கிறான்.
அதற்கு பாவா, நீ கேட்ட கேள்வி ஆதாரமானது, அதை நான் அதிகம் யோசித்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் ஒரு பாவமும் செய்யவில்லை. பாவம் எப்படி இருக்கும் என்று அறியாதவன் என்று சொல்லிக் கொண்டே ஒரு அறையின் கதவை திறக்கிறார்.
அறையின் நடுவே பத்துப் பதினைந்துப் பெண்கள் அரைகுறை உடையில் “பாவா” என்று ஓடிவருகின்றனர்.
பாவா இப்பொழுது அறைக் கதவை மூடிக் கொண்டே ஆத்மாவிடம் “இருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் கொஞ்சம் பாவம் செய்யலாம் என்று இருக்கிறேன்” என்று கண்ணை சிமிட்டிக் கதவை மூடுகிறார்.
உள்ளே “வலிக்கிறது பாவா” என்று பெண்கள் குரல் கேட்கிறது.
வா பெண்ணே என் முன் மண்டியிடு என்கிறார்.
இதைப் படித்தவுடன் சமீப கால ஜல்சா சாமியார்கள் நினைவு வந்தால் அதற்கு சுஜாதா பொறுப்பில்லை.
ரசித்த கவிதை
பொழுது விடியும் புதுவையில் ஓர் வீட்டில்
விழி மலர்ந்த பாரதியார் காலைவினை முடித்து
மாடிக்குப் போவார் கடிதங்கள் வந்திருக்கும்
வாடிக்கையாக வரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்
சென்னைத் தினசரியின் சேதி பல பார்ப்பார்
முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய் படிந்ததுண்டா இல்லையா என்று
வரி மேல் விரல் வைத்து வாசிப்பார் ஏட்டை
இந்த வகையான பாரதிதாசன் எளிய நடை கவிதைகளுக்கு பொழிப்புரை தேவையில்லை.
1 comment:
'thEvaiyillaatha'thai ippadi 'poRuppil'laamal tharalaamaa, thalaivaa!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.