Wednesday, 1 December 2010

கவுஜ எழுதலாம் வாங்க.......

கவுஜ எழுதலாம் என்று தொடங்குமுன் என்ன கவிதை என்பதை யோசிக்க வேண்டும். கருத்து மிகவும் முக்கியம். தலைப்பு சும்மா நச்சுன்னு இருக்கணும்.


அப்புறம் மரபுக் கவிதைன்னா இந்த சீர், தளை அதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் படிக்க வில்லையென்றால் ஐயம்பெருமாள் கோனார் விலாவரியாக சொல்லியிருக்கிறார், அந்தப் புத்தகத்தை தேடி படிக்க வேண்டும்.

இதற்கு பழக வேண்டுமானால், சீத்தலை சாத்தனார், போன்றவர்களின் கவிதைகளை எடுத்து தளை பிரித்து அதை தேமா, புளிமா தோசை மா என்று பிரித்து அக்கு அக்காக அடுக்கி வைக்கப் பழக வேண்டும்.

இதை வைத்து அறுசீர் விருத்தம், கழிநெடி விருத்தம், வெண்பா, கலிப்பா, கட்டளைக் கலிப்பா, அருட்பா..................

இருப்பா!!!!!!!!!!..................... எங்கே ஓடுறீங்க.

சரி சரி அதெல்லாம் வேண்டாமா, அப்போ வாங்க நீங்க நம்ம ஆளு.

இப்படித்தான் நம்ம நண்பன் ஒருத்தன் பக்கத்து செக்ஷனில் ஆணி பிடுங்குற பய வந்து என்னாண்ட கேட்டான், மச்சி நீ எப்படிடா கவுஜ எழுதுற எனக்கு வர மாட்டேங்குது.

நான் எங்கேடா எழுதினேன், அது சும்மா உவ்வாகாட்டிக்கு.

அப்படியும் விடாம இல்ல மச்சி சொல்லிக் கொடுடா என்று கேட்டு நகர மாட்டேங்கிறான்.

டேய் போடா போய் ஆணி புடுங்கு, இங்கே எனக்கு தலைக்கு மேல வேலை இருக்குன்னாலும் கேக்காம நகர மாட்டேங்கிறான்.

சரி இவன எப்படிடா காலி பண்றதுன்னு சொல்லித்தான் மேலே கூறிய இலக்கணமெல்லாம் அவுத்து வுட்டேன்.

ஹூஹூம் பய அசரலை.

சரி இப்போ உனக்கு என்ன மாதிரிக் கவிதை வேணும் சொல்லுன்னேன்.

தோடா மெதுவா சின்னதா எழுத ஆர்மபிச்சு அப்பால சினிமாவுக்கு பாட்டு எழுதுனமுங்கிறான்.

சரி அவ்வளவுதானே வுடு,

தோ பார் மொதல்ல எதுகை மோனை தெரிஞ்சிருக்கணும். உதாரணத்திற்கு

பஞ்சம்- மஞ்சம்

மாடு – காடு

வாடி- போடி

வாடா – போடா

அடி- கடி

இது போல ஒரு நூறு வார்த்தை தெருஞ்சிக்கின்னு அத்தே மொதோ வரியிலும் அடுத்த வரியிலும் முதலில் வைத்து அப்பால நீ இன்னா வார்த்தை வேனுமுன்னாலும் போட்டுக்கலாம், இன்னா தெரியுதான்னு கேட்டா, ஓகே மாமு இப்போ புரியுது அப்படின்னான்.

இதுதான் புதுக் கவிதைன்னு சொல்றானுங்க, இதே எப்படி வேணுன்னாலும் எழுதலாம். எத்தகை மோனைப் போட்டா சினிமாவுல போனியாகும். அப்படிய இல்லன்னா பத்திரிகை, வலைப்பூவுல பிச்சிக்கின்னு ஒடுன்னேன்.

இன்ன வேனுமுன்னாலும் எழுது அப்படின்னேன்.

சரி நான் உனக்கு முதல் வரி எடுத்துக் குடுக்கிறேன் நீ கவிதை சொல்லுன்னேன்.

ஆத்தா நான் பாசாயிட்டேன்.


அதுக்கு அவன்

.. த்தா நான் பெயிலாயிட்டேன்


மவனே அவன் சொன்ன அந்த வரியில நான் ஆடிப் போயிட்டேன்.

சரி ஆள வுடு இனி தமிழ்நாட்டுல உன்னை விட சிறந்த கவிஞன் எவனும் பிறக்கப் போவதில்லைன்னு வாழ்த்தி அனுப்பி விட்டேன்.

பையன் இப்போ நிறைய சினிமாப் பாட்டு எழுதிக்கின்னு இருக்கான்.

சமீபத்தில் கூட ஒரு பாட்டு நீங்க கேட்டிருப்பீங்க.



ங்கொய்யால ங்கொய்யால

ஐய்யால ஐய்யால

இன்னாடா பண்ணலாம்

எவளாண்ட போவலாம்

கீதா தேடிப் போனா

சோடா குடின்னு சொன்னா



அது அவன் எழுதியப் பாட்டுதான். அந்தப் பாட்டு விருதுக்கு போயிருக்குன்னு சொல்லின்டிருக்கான்.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதையெல்லாம் இப்படி தான் எழுதுறாங்களா,,, எனக்கும் கொஞ்சம் சொல்லி குடுங்க பாஸ்..

Admin said...

கவித கவித........... படி!!!!!!!!!!!

Anonymous said...

நாந்தான் முதல்ல

Anonymous said...

ஆத்தா நான் பாசாயிட்டேன்.


அதுக்கு அவன்

.. த்தா நான் பெயிலாயிட்டேன்
//
ஹஹா

எஸ்.கே said...

செம காமெடி! நல்லயிருந்தது சார்!

Unknown said...

எதிர் கவுஜ, பாதி கவுஜ இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்கலாம்..

NaSo said...

எனக்கும் சொல்லிக் கொடுங்க!!

sarathy said...

பெரிய ரகசியங்களையெல்லாம் அம்பலப்படுத்தறீங்க, அண்ணாச்சி! ஜாக்கிரதை. wikileak ஆளுங்களுக்கு arrest warrant கொடுக்கப்போறாங்களாம்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நகைச்சுவை....ரசித்தேன் நண்பரே.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வித்தியாசமான பாணியில் நகைச்சுவை. ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.