சி. ஜியும் நானும் மூன்றாம் வகுப்பிலிருந்தே பகைவர்கள். நாங்கள் மூன்றாம் வகுப்பு அரைப் பரீட்சை முடிந்தவுடன் எனிமி விட்டுக் கொண்டோம். எதற்காக என்று இன்று வரை காரணம் எனக்குத் தெரியாது. அரைப் பரீட்சை முடிந்தவுடன் என்னை அவன் வீட்டிற்கு கூட்டிசென்றான். அப்பொழுது நண்பர்களாக இருந்தோம். அன்று அவன் அம்மா எங்களுக்கு அடை, மோர்க்குழம்பு எல்லாம் செய்து கொடுத்தார்கள். அவர்கள் வீட்டு ஸ்பெஷாலிட்டி அது. பிறகு நன்றாக விளையாடினோம். பின்பு நான் வீட்டிற்கு வந்து அன்று இரவு விடுமுறையை கழிக்க பொள்ளாச்சியில் சித்தப்பா வீட்டிற்கு பயணமானோம். பிறகு விடுமுறை முடிந்து, பொங்கல் முடிந்து பள்ளித் திறந்தவுடந்தான் சி. ஜீ வித்யாசமாக நடந்து கொண்டான். என்னிடம் எனிமி விட்டான்.
இருந்தாலும் அதற்குப் பிறகு இருவரும் ஒன்றாக இருப்போம், ஒன்றாக விளையாடுவோம் ஆனால் பேசிக்கொள்ள மாட்டோம். என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் மற்றவரிடம் சொல்லி சொல்லச் சொல்வான். அதே சமயத்தில் எங்களில் ஒருவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தயங்காமல் உதவி செய்து கொள்வோம். இது எங்களுடன் இருக்கும் மற்றத் தோழர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்.
பள்ளி இறுதியாண்டு முடியும் சமயம் ஒரு கூட்டம் எங்களை எப்படியும் பேச வைக்க வேண்டுமென்று தீர்மானித்து தனியாக கொண்டு சென்றார்கள்.
எங்கள் இருவரையும் கை குலுக்க வைத்து பேச சொன்னார்கள்.
நான்தான் முதலில் என்னாட சி ஜீ என்றேன்.
சி ஜீ பதிலுக்கு என்னாடா சங்கர்லால் என்றான்.
ஆனால் எங்களின் நட்பு அடுத்த நாளே முறிந்தது.
சி ஜீ அடுத்த நாள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தான். நான் அவனுடன் “எனிமிதாண்டா” என்று மற்றவர்களிடம் சொன்னான். அதற்குப் பிறகும் நாங்கள் ஒன்றாகத் தான் இருந்தோம், ஆனால் பேச்சும் வார்த்தை மட்டும் கிடையாது.
இது இப்படியிருக்க சி ஜியின் தங்கை என் கல்லூரித் தோழனை காதலித்தாள். அவர்கள் இருவரும் திருமனம் புரிய நான்தான் காரணமாயிருந்தேன். அவன் தங்கை சாயா ஒரு வேற்று ஜாதிக் காரனை காதலித்தாள். நான் அவன் அம்மாவிடம் பேசி கல்யாணம் முடித்து வைத்தேன். அவர்கள் வீட்டில் அந்த பையனை யாருக்கும் பிடிக்கவில்லை. இருந்தாலும் கல்யாணம் நடந்தேறியது.
பிறகு காலத்தின் கட்டாயத்தில் நாங்கள் பிழைப்புக்காக வேறு வேறு நாடு சென்று சிதறி விட்டோம். இப்பொழுது சி ஜீயுடன் ஹாங்காங்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறன். சாயாவை பற்றி பேச்சு திரும்பியது. சாயாவுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொன்னான், இருந்தாலும் அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டான்.
சாயா என்னுடனும், என் மனைவியுடனும் தினமும் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றேன். அவளுக்கு இப்பொழுது இரண்டு பையன்கள், அட்லாண்டாவில் சுகமாக இருக்கிறாள் என்றேன்.
போன விடுமுறை நாங்கள் அவள் குடும்பத்துடந்தான் கழித்தேன் என்றேன். உன்னை பற்றி நாங்கள் பேசாத நாளில்லை என்றேன்.
பிறகு எனக்கு விமானத்திற்கு சமயம் ஆகிவிட்டதால் நான் அவனை பிரிய முடியாமல் பிரிந்தேன்.
9 comments:
very touching!
வருகைக்கு நன்றி சித்ரா
//பிறகு எனக்கு விமானத்திற்கு சமயம் ஆகிவிட்டதால் நான் அவனை பிரிய முடியாமல் பிரிந்தேன். //
உணர்வுகளுடன் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
interesting. thanks
மனசைத் தொட்டுப் போயிருச்சுங்க
மிக சுவாரசியம்!
அருமை... ஆனால் இந்தப் பதிவிற்கு Honey Rose ஏன்...?
touching ya
ithu eppo nadanthathu?
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.