உயிர் தரிக்கும் முன்பே
உற்றாருடன் தொடங்கி
நகை நட்டு, கட்டில், தொட்டில்
வரதட்சினை இன்ன பிற
மல்லிப்பூ, அல்வா மணக்க
மஞ்சத்தில் அடங்கி
மருத்துவமனை பிறப்பில்
மறக்காது கூட வரும்
அறிவுக்கண் திறக்க
அனைத்திலும் அயராது
சிரித்து நிற்கும்.
நின்றால் நடந்தால்
நிழல் போல தொடர்ந்து
வேலை வீடு என
வெளிர் பல் காட்டி
வேகம் பிடித்து
வேண்டாது கூடவரும்.
அறிந்தும் அறியாமல்
இருக்க அறிவுக்கண்
திறந்து விடும்.
அரசாங்கம் புகுந்து
அயராமல் ஆட்சிபுரியும்
எண்ணாயிரம் ஜாதியில்
எங்கள் நாடு பிரிந்தாலும்
ஒன்றே குலம்
ஒருவனே தேவனாகி
ஒன்றாக “ஒருஜாதி” என்று
ஓங்கி உயர்த்தும்.
ஒன்றே குலம்
ReplyDeleteஒருவனே தேவனாகி
ஒன்றாக “ஒருஜாதி” என்று
ஓங்கி உயர்த்தும்
......ஒரு நாள் நடக்கும்.
வருகைக்கு நன்றி
ReplyDeleteChitra said...
ReplyDeleteஒன்றே குலம்
ஒருவனே தேவனாகி
ஒன்றாக “ஒருஜாதி” என்று
ஓங்கி உயர்த்தும்
......ஒரு நாள் நடக்கும்.
//
nadakkumaa???
true to the core. inseparable ....
ReplyDeleteஇவ்வலைப் பதிவில் நாம் ஐவரும் ஒன்றே குலமென இருப்பதில் சந்தோசப் பட்டுக் கொள்ளலாம். ஐந்து ஐம்பதாகி, ஐம்பது ஐநூராகி தொடர வேண்டுவோம்
ReplyDelete