Pages

Wednesday, 15 December 2010

அரசியலில் அன்டிராயர்..............................சகஜமப்பா

குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் ஒரு மக்கள் பிரச்சனை கூட பேசப்படாமல் தினமும் ஒரு பத்து நிமிடம் கும்பலுடன் கோவிந்தா போட்டு, குய்யோ முறையோ என்று கூவி கும்மியடிக்கப் போய் விட்டனர் நமது எம்.பி கூட்டம். இந்தக் கூத்துக்கு இவர்களுக்கு சம்பளம், பேட்டா, விமான டிக்கெட், மயிரு மட்டு என்று ஏகப்பட்ட சலுகைகள். இதன்  எதிரொலிதான் நம் கத்திரிக்காய், உப்பு, பருப்பில் தெரிகிறது. போதாக்குறைக்கு இந்த வருடம் எட்டாவது முறையாக பெட்ரோல் விலை ஏற்றப்படுகிறது.


இவ்வளவு கூப்பாடு போட்டும், எதிர் கட்சிகள் ஜே.பி.சி விசாரணை என்று கூவினாலும், அசராமல் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் தினமும் பத்து நிமிடம் வந்து போனாரே, நம்ம டர்பன் தாத்தா, அப்பா இவரு பெரிய ஆளுப்பா. இவருக்கு இதற்காகவே “பாரதரத்னா” கொடுக்கலாம்.

நம்ம ஊரு அரசியல் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. நீரா ராடியவுடன் ஐயா வூட்டுக் காரங்களும், அவர்களது நண்பிகளும் பேசிய பேச்சுக்கள் அய்யா குடும்பத்தின் சச்சரவுகள் குழாயடி ரேஞ்சுக்கு வந்துவிட்டது. இதில் அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் விபரீத முடிவுக்குப் போவார்கள் என்று வேறு பேசுகிறார்கள். இப்படி கூடவா அமைச்சர் ஆவார்கள் என்று கேள்வி எழுகிறது.

ஜன நாயகத்தில் ஏதோ கட்சி தலைவர்கள் எல்லாம் சேர்ந்து தான் அமைச்சரவை அமைக்கப் படுகிறது என்று நினைத்த நமக்கெல்லாம் வைத்த ஆப்பு இப்பொழுது எரிகிறது. கனவான்களும், மாமாக்களும் (மாமிகளும்) தான் முடிவு செய்யறாங்கப் போல. இந்த வியாபாரம் நல்ல வியாபாரம் போல் தெரிகிறது. எதிர் காலத்தில் இந்த வேலைக்கு பலத்தப் போட்டி இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

இப்பொழுது தியேட்டர் கிடைக்காதவன், தியேட்டரில் டிக்கெட் கிடைக்காதவன், என்று ஒரு கூட்டம் இந்த ஜோதியில் ஐக்கியமாக தயாராகிறது. இன்னும் போக போக என்ன ஆகுமோ தெரியவில்லை.

அதுக்குதான் அம்மட்டன் வாராவதி மேல் நின்னு அரை பாட்டில் வுட்டு அசையாம நின்ன ஐயாவு அன்னைக்கே சொன்னாரு “ஏலே அரசியல்வாதியையும் அன்டிராயரையும் அடிச்சு துவைத்து காயப் போடணும் இல்லாங்காட்டி நாறிடும்” னு.

7 comments:

  1. ellaraiyum adichi thuvaippadhuthaan sari.,eppadi??
    Arasiyal pannadaikalukkuthaan soodu,soranai kidaiyadhe.

    ReplyDelete
  2. ellaraiyum adichi thuvaippadhuthaan sari.,eppadi??
    Arasiyal pannadaikalukkuthaan soodu,soranai kidaiyadhe.

    ReplyDelete
  3. “ஏலே அரசியல்வாதியையும் அன்டிராயரையும் அடிச்சு துவைத்து காயப் போடணும் இல்லாங்காட்டி நாறிடும்”
    வெளுத்துக் கட்டிவிட்டீர்கள் கும்மாச்சி!

    ReplyDelete
  4. கடைசி வரிகள் செம கலக்கல்...

    ReplyDelete
  5. இந்தக் கூத்துக்கு இவர்களுக்கு சம்பளம், பேட்டா, விமான டிக்கெட், மயிரு மட்டு என்று ஏகப்பட்ட சலுகைகள்
    //
    தேர்ந்தெடுக்கபட்டவர்கள், அவரவர் பணிகளை செய்யாவிட்டால்.....

    திஹார் ஜெயில்-ல போட்டு நொங்கு எடுக்கனும்...
    அப்பதான் பயப்படுவானுக....

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.