இரண்டாயிரத்து பத்தில் செய்திகளை பெரிதும் ஆக்கிரமித்ததில் ஊழல் முதல் இடம் பெறுகிறது. காமன் வெல்த் விளையாட்டில் தொடங்கி, ஸ்பெக்ட்ரம், மகாராஷ்டிரா முதல்வரை காவு கொண்டு, எடியுரப்பாவிற்கு எனிமா கொடுத்து இந்திய அரசியலில் வழக்கம் போல் ஊழல் ஆட்சி புரிகிறது. இதன் பின் விளைவு நமக்கு அன்றாடம் தெரிகிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலையில் தொடங்கி எங்கும் பேய் முகம் காட்டுகிறது. இரண்டாயிரத்து பதினொன்றில் தமிழகம் தேர்தலை சந்திக்கப் போகிறது. வேறு ஒன்றும் புதியதாக இருக்காது. இனி இலவசங்களின் அணிவகுப்பைக் காணலாம். அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் அறிக்கையில் இலவச திட்டங்கள் போடுவார்கள். அதை வாங்கி நாமும் வோட்டுப் போட்டு வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவோம்.
இருந்தாலும் இரண்டாயிரத்துப் பதினொன்றை இனிதே வரவேற்போம்.
அணைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ரசித்த கவிதை
காற்று மாமா காற்று மாமா கருணை செய்குவீர்
ஏற்றி வந்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர்
சின்னஞ்சிறு குடிசை இது சிறிது நேரம் நான்
பொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்
ஏழைச் சிறுவன் என்னை நம்பிப் பாடம் படிக்கிறான்
ஏழும் மூனும் பத்து என்று எழுத்து கூட்டுகிறான்
காய்ச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்ட வேண்டாமோ
ஆச்சு இதோ ஆச்சு என்னை அணைத்து விடாதே.
..............கிருஷ்ணன் நம்பியின் குழந்தைப் பாடல்கள்.
ரசித்த நகைச்சுவை
ஒரு தமிழனும் சர்தார்ஜியும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். தமிழன் தன்னுடைய கைகடிகார பட்டையை கழட்ட தினருவதைக் கண்டு சர்தார்ஜி ஒரே உதறலில் கழட்டி விட்டு, “இதுக்குதான் உங்கள் மாதிரி மதராசிகள் கோதுமை சாப்பிடனும்” என்றார்.
தமிழனுக்கு பயங்கர கடுப்பு. சிறிது யோசித்துவிட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதுபோல் பாசாங்கு செய்தான். சர்தார்ஜி உடனே அதனை இழுத்து வண்டியை நிறுத்திவிட்டான்.
பிறகு கார்டும் ரயில்வே போலிசும் வந்து சர்தார்ஜியை ஒரு காய்ச்சு காய்ச்சிவிட்டு அபராதத் தொகையை பிடுங்கிச் சென்றனர்.
நம்ம ஆளு, சர்தார்ஜியிடம் “ அதுக்குதான் நீங்கள் எல்லாம் அரிசி சாப்பிடனும், மூளை வளரும்” என்றான்.
4 comments:
நல்ல கலக்கல்தான் வருட ஆரம்பத்தில்.... ஆமாம்... அரிசி சாப்பிட்டா ஊழல்களில் தப்பிக்க முடியாதோ!
எனது பல்சுவைப் பதிவுக்கு தலைப்பு கிடைச்சாச்சு :)))))
கலக்கல்
கலக்கறிங்களே சகோ...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.