Pages

Wednesday, 5 January 2011

சூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடும்ப) தலைவரின் புலம்பல்

ஒன்றை மணந்து ஒன்றே பெற்றேன்


என்றும் போதையில் திளைக்கவிட்டேன்

மறைந்தவள் நினைவு மறையும் முன்னே

இருந்த ஒருவனை இறக்கிவிட்டேன்

பின்பு மணந்து நான்கு பெற்றேன்

வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என

கணக்கு தவறாமல் பிரித்து கொடுத்தேன்

தென் திசை சிங்கம் என்னை

திணற வைக்க திண்டாடி நின்றேன்

நடுவில் ஒன்றை நட்டுவைத்தேன்

சடுதியில் ஒன்றை பெற்றுவிட்டேன்

பழம் என்று “கனி”ய வைத்தேன்

“அம்மா லூசு, அப்பா செவிடு”

அண்ணன் ஐந்தாம் வகுப்பு அடாசு

என்று ஊரார் கேட்க அல்லலுற்றேன்

பேரப் பிள்ளைகள் எல்லாம்

படம் பிடிக்க அனுப்பி வைத்தேன்

குடும்பம் செழிக்க

அல்லும் பகலும் அயராது

“சூரிய(ன்)னு”க்கே சூன்யம் வைத்தேன்

கண்மணிகளை கதற வைத்தேன்

மருமகனை வளரவிட்டேன்

வர்த்தக சாம்ராஜ்யம் செழிக்கவைத்தேன்

இத்தனை செய்தேன் என்று இறுமாந்திருந்தேன்



தமிழ் தமிழ் என்று

ஜல்லியடித்தேன்

தமிழை வைத்து வளர்ந்தேன்

தமிழ் இனமெல்லாம்

தொப்புள் கொடி உறவு என

மப்பில் உளறிவிட்டேன்

காலை சுற்றும் பொழுது

கழுத்தறுத்தேன்

இத்துணை செய்தும் நான்

சளைக்கவில்லை

உறவு கூட்டம்

இப்பொழுது கும்மியடிக்க

ஊழல் படம் எடுத்து ஆட

ஊரார் முன்பு ஊமையானேன்.



சமீபத்தில் நொந்து நூலாகிப் போன ஒரு தலைவரின் புலம்பல்.

7 comments:

  1. கலக்கல் நையாண்டி.

    ReplyDelete
  2. ஃஃஃஃஊழல் படம் எடுத்து ஆட

    ஊரார் முன்பு ஊமையானேன்.ஃஃஃஃ

    நல்ல வரி ஒன்று..

    ReplyDelete
  3. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நக்கல் கவிதை - அவரது பாணியிலேயே.... கலக்கல்!

    ReplyDelete
  4. கலக்கல் நக்கல்னு சொல்லுங்க...

    ReplyDelete
  5. உள்குத்து இருக்கிற மாதிரியே இருக்கு

    ReplyDelete
  6. கலக்கல் கும்மாச்சி !!!!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.