Pages

Sunday, 16 January 2011

உறக்கம்


கடைசி வண்டியின்



கடந்து போன சத்தம்


முரட்டு செருப்பின்


வறண்ட தேய்ப்பு


ஒற்றை நாயின்


வெற்று ஊளை


கடுவன் பூனையின்


சல்லாப அழைப்பு


தோட்டத்தில் சலசலக்கும்


வறண்ட இலைகள்


அடுத்த வீட்டு


கிழவியின் மூச்சிறைப்பு


எதுவும் வேண்டாம்


ஏன் இழுத்து மூடியும்


மனதினை விட்டு


அகல மறுக்கும்


வெய்யிலில் முதுமை


கேட்கும் பிச்சை


நாடும் பொழுது


நழுவுகிறது.

8 comments:

  1. மனதில் வலியை உண்டு பண்ணும் கவிதை பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. நன்றி நாகேந்திரன்

    ReplyDelete
  3. அருமை.. பாராட்டுக்களுன் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி பிரஷா.

    ReplyDelete
  5. மனதை கனக்க வைக்கும் கவிதைங்க....

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.