உறக்கம்
கடைசி வண்டியின்
கடந்து போன சத்தம்
முரட்டு செருப்பின்
வறண்ட தேய்ப்பு
ஒற்றை நாயின்
வெற்று ஊளை
கடுவன் பூனையின்
சல்லாப அழைப்பு
தோட்டத்தில் சலசலக்கும்
வறண்ட இலைகள்
அடுத்த வீட்டு
கிழவியின் மூச்சிறைப்பு
எதுவும் வேண்டாம்
ஏன் இழுத்து மூடியும்
மனதினை விட்டு
அகல மறுக்கும்
வெய்யிலில் முதுமை
கேட்கும் பிச்சை
நாடும் பொழுது
நழுவுகிறது.
மனதில் வலியை உண்டு பண்ணும் கவிதை பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி நாகேந்திரன்
ReplyDeleteஅருமை.. பாராட்டுக்களுன் வாழ்த்துக்கள்..
ReplyDeleteவருகைக்கு நன்றி பிரஷா.
ReplyDeleteமனதை கனக்க வைக்கும் கவிதைங்க....
ReplyDeleteநன்றி சித்ரா
ReplyDeletesuperrr
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete