சரி ஒரு "தம்" அடிக்கலாம் என்று தெருமுனைக்கு வந்தேன். கோபாலன் நாயர் டீ கடை முன்புதான் இரண்டு பக்கமும் கோல் வைத்து நடுவில் கயிறு கட்டி அன்றைய பிழைப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தான் அவன். அவனுடன், அவன் மனைவி, அவள் மார்பினில் அபத்திரமாக தொங்கிக் கொண்டிருக்கும் கைக்குழைந்தை, எட்டு வயது சிறுமி. அச்சிறுமி மிகவும் வசீகரமாக இருந்தாள். அசப்பில் இந்தி பட அழகிகளின் சிறு வயதினர் போல் இருந்தாள். அச்சிறுமி கையில் கம்பு எடுத்துக் கொண்டு கையில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தாள். மனைவி கையில் உள்ள வாத்தியத்தையடிக்க அவன் கூவி கூவி கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.
தெருவில் உள்ள நண்டு சிண்டுகள் எல்லாம் அங்கு கூடி விட்டன. அங்கங்கே ஒன்று இரண்டு பெரிசுகளும் நின்று கொண்டு கழைக் கூத்தாடியின் மனைவியை கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது சிறிதாக கூட்டம் கூடவே கழைக் கூத்தாடி தன் காட்சியை தொடங்கினான். முதலில் அந்த சிறுமி தரையில் சில வித்தைகளை செய்து காட்டினாள். பின்னர் அவன் அந்த சிறுமியின் வயிற்றில் ஒரு குச்சியை வைத்துத் தூக்கி அவளை மேலே எறிந்து பின்பு அவளை கீழே இறக்கினான். பின்னர் நான் கண்ட கட்சி இன்று வரை என் கனவில் வந்து நடு நிசியில் கலங்க வைத்திருக்கிறது. அந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியில் இருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது.
இதே காட்சியை கோபாலன் நாயரும் பார்த்து அவனது காட்சியை நிறுத்தி விட்டு அங்கிருந்து போக சொன்னார். நாயரின் கட்டுப் பாட்டில் உள்ள அந்த இடம், நாயரை மீறி எதுவும் நடக்காது.
அவன் சாமான் செட்டுகளை ஏறக்கட்டிவிட்டு அந்த இடத்திலிருந்து அகண்ட கட்சி என்னை ஏதோ செய்தது. நான் நாயரிடம் அவன் காசு சேகரிக்கும் முன் அவனை போக சொன்னது மிகவும் தப்பு, நாயர் கடையில் உள்ள தின் பண்டங்களை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்று வாதாடினேன்.
நாயர் “ஏலே உண்ட ஜோலியை நோக்கிக் கொண்டு போ அவனுக்கு இட்லி வடை கொடுத்தெங்கில் காசு யாரானும் கொடுக்கிறது” என்று வாதாடினான்.
பின்பு அருகில் உள்ள பாய் கடையில் வாடகை சைக்கிள் எடுத்து அந்த கழை கூத்தாடி போன திசையில் போனேன். அவன் மனைவியை ஒரு இரண்டு மைல் தள்ளி அந்த சினிமா கொட்டகையின் வாசலில் அடுத்த வித்தைக்கு ஆயத்தமாவதைக் கண்டேன்.
என்னுடைய கையிலிருந்த ஒரு இரண்டு ரூபாயை அவளிடன் நீட்டினேன்.
அவள் “ க்யா ஹம் லோக் பிகாரி நை” என்றாள்.
5 comments:
பஞ்ச் லைன் ஹிந்தியில வந்துடுச்சே.... தமிழாக்கமும் ப்ளீஸ்.... me kku ஹிந்தி தெரியாதே.
“என்ன? நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல!!!!!!!!!!!!” என்றாள்.
விளக்கம் கேட்டதற்கு நன்றி சித்ரா
வறுமையிலும் செழுமை என்பது இதுதானோ/
தமிழக மக்கள் இலவச கலர் டி வி வாங்குவதையும் மற்ற இலவசங்களை வாங்குவதையும் ஒரு கணம் நினைத்தால்..
அந்த கழகூத்தாடிகிட்ட உள்ள நேர்மை உழைத்துத்தான் உண்ணனும் என்ற எண்ணம் கிரேட்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.