தமிழ்நாட்டு கடலோர மீனவர்களின் அவல வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருப்பது இந்திய அரசியலின் அவமானம். ஒவ்வொரு முறை மீனவர்கள் சிங்களனால் தாக்கப்படும் பொழுதும் கடிதம் மட்டும் எழுதி, நிவாரணம் கொடுத்துவிட்டு, அடுத்த இறப்பை எதிர்நோக்கும் அரசியல் நமக்கு சாபக்கேடு.
நமது கடலோரக் காவல் படை இருக்கிறார்களா? இல்லையா? என்று தெரியவில்லை. குஜராத் எல்லையில் மீனவர்களுக்கு உள்ள பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு இல்லை என்பது வருந்தக் கூடிய விஷயம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வாதத்தின் அடிப்படையில் கட்சிகளின் அமைச்சரவை இடங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பொது மனித வாழ்வில் கடைப் பிடிக்காத அரசியலை என்ன என்று சொல்லுவது?
இப்பொழுது நடந்த தாக்குதலை வைத்து தேர்தலை முன்னிட்டு அரசியல் செய்வது தலைவர்களின் சுய நலப் போக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அந்த ஆட்சியில் நாற்பது மீனவர்கள் இறந்த பொழுது அவர் ஏன் ஹெலிகாப்டரில் சென்று நிவாரணம் அளிக்கவில்லை என்று கோமணத்தை வரிந்து கட்டிக் கொண்டு குழாயடி சண்டை வேறு.
மீனவர்கள் மாண்டால் என்ன
சிங்களவன் சுட்டால் என்ன
மீனவக் குடும்பம் கெட்டால் என்ன
கிளியே
என் குடும்பம் வாழுமடி
ராசாத்தி மீன் குழம்பு வேண்டுமடி
எனக்கு தினமும்
மீன் குழம்பு வேண்டுமடி .
செந்தழல் ரவியின் வேண்டுகோளுக்கு இணங்கி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சமர்ப்பணம்.
இருபத்தாறு வருடங்கள் கடலில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் எனக்கு மீனவர்களின் கடின வாழ்க்கை சற்று நன்றாவே தெரியும். இது ஒன்றும் பெரிய பணம் கொடுக்கக் கூடிய தொழில் அல்ல. அதுவும் சிறிய மீன் பிடி படகை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு “உயிரை பணயம் வைத்து தினம் தினம் செத்துப் பிழைக்கும் பிழைப்பு”. இவர்களிடம் நவீன GPRS வசதியெல்லாம் கிடையாது. பழைய கருவிகள்தான். மீன் வளம் அதிகம் உள்ள இடங்களை தேடும் பொழுது எல்லை தாண்டுவது இயல்பு.
நமது கடலோரக் காவல் படை இருக்கிறார்களா? இல்லையா? என்று தெரியவில்லை. குஜராத் எல்லையில் மீனவர்களுக்கு உள்ள பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு இல்லை என்பது வருந்தக் கூடிய விஷயம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வாதத்தின் அடிப்படையில் கட்சிகளின் அமைச்சரவை இடங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பொது மனித வாழ்வில் கடைப் பிடிக்காத அரசியலை என்ன என்று சொல்லுவது?
இப்பொழுது நடந்த தாக்குதலை வைத்து தேர்தலை முன்னிட்டு அரசியல் செய்வது தலைவர்களின் சுய நலப் போக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அந்த ஆட்சியில் நாற்பது மீனவர்கள் இறந்த பொழுது அவர் ஏன் ஹெலிகாப்டரில் சென்று நிவாரணம் அளிக்கவில்லை என்று கோமணத்தை வரிந்து கட்டிக் கொண்டு குழாயடி சண்டை வேறு.
மீனவர்கள் மாண்டால் என்ன
சிங்களவன் சுட்டால் என்ன
மீனவக் குடும்பம் கெட்டால் என்ன
கிளியே
என் குடும்பம் வாழுமடி
ராசாத்தி மீன் குழம்பு வேண்டுமடி
எனக்கு தினமும்
மீன் குழம்பு வேண்டுமடி .
செந்தழல் ரவியின் வேண்டுகோளுக்கு இணங்கி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சமர்ப்பணம்.
8 comments:
தமிழினத்தலைவர் என்ற பசுத்தோல் போர்த்திய புலி போலும், சாரி ஓநாய் போலும்
ட்விட்டரில் சில ட்வீட்டுகளாவது பங்களிப்போம்.
Please join The Global Campaign for #TNfisherman on twitter . 28.01.11 Time 9.00PM - 10.00PM Indian Standard Time. RT pls
@மைதீன் said.யார் தமிழினத்தலைவர் அது ஒருவருக்கு மட்டும் தான் தகுதியுடையது ......
'யார் ஆண்டால் என்ன, யார் மாண்டால் என்ன -
என் வெட்டு (எனக்கு) வந்தால் போதுமடி யம்மா! '
இதுவே நம் நாட்டு இன்றைய அவல நிலைமை.
ஏன் தயாளு அம்மா வீட்டுல மீன் குழம்பு கிடைக்காதா? நல்ல கவிதை
என் பண்ண ?
தமிழனின் தீபாவளி வரும் வரை காத்து இருக்க வேண்டியதுதான்.
தலைப்பிலேயே சொல்ல வேண்டியதை சொல்லி விட்டீர்கள். என்று தான் இந்த apathy மன நிலை மாறுமோ?
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.