Tuesday, 22 February 2011

கலக்கல் காக்டெயில்-22

கணீர் குரலார் மரணம்


மலேசியா வாசுதேவன் எழுபதுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட பின்னணி பாடகர். சினிமா ஆசையில் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்து முதலில் விளம்பர பாடல்களில் அறிமுகம். எழுபதுகளில் விவிதபாரதி தொடங்கிய பொழுது வந்த மிகக் குறைவான விளம்பரப் பாடல்களில் “கரோணா காலணிகள்” என்று வானொலியில் அறிமுகம். பின்பு “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடி குறுகிய காலத்தில் பிரபலமானவர். பின்பு ரஜினி படங்களில் நிறைய பாடல்கள் பாடி ஏறக்குறைய “அருணாசலம்” படம் வரை அவர் பாடல்கள் நிச்சயம் உண்டு. இப்பொழுது மேடையில் பாடுபவர்கள் அவர் குரலை கொண்டு வருவது கடினம். ஒரு வித்யாசமான குரல். அவர் மறைந்தாலும் அவர் பாடிய “கோடைகால கற்றே, ஒரு தங்க ரதத்தில், வெத்தலை வெத்தலை வெத்தலையோ, ஆட்டு குட்டி, ஆசை நூறு வகை, பூங்காற்று திரும்புமா” பாடல்கள் என்றும் எல்லோர் காதிலும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
---------------------------------------------------------------------------------------------

மற்றொரு மரணம் “பார்வதியம்மாள்”

தன் இனத்துக்காக போராடி கயவர்களால் காட்டிக்கொடுக்கப் பட்டு கடைசி வரை களத்தில் இருந்து முழுக் குடும்பத்தையும் இழந்து வீர மரணம் எய்திய வீரனைப் பெற்றவள். கடைசிக் காலங்களில் கணவனையும் இழந்து கவனிப்பாரற்ற வாழ்க்கை. ஆனால் நய வஞ்சக அரசியல்வாதியைப் பெற்றேடுக்காமல் வீரனைப் பெற்றதற்கு அம்மையார் சந்தோஷப் பட்டிருக்க வேண்டும். உண்மையான ஈழத் தமிழன் “வீரத்தாய்” என்று கொடாடுவது மிகப் பொருத்தமே.

“ரத்தத் தீவு” அனிதா பிரதாபின் புத்தகத்தைப் படித்தவுடன், பிரபாகரன் பற்றிய என் எண்ணங்கள் மாறியது.

--------------------------------------------------------------------------------------------

கிரிக்கெட் உலகக்கோப்பை

நல்ல நேரத்துல இந்த விளையாட்ட வைத்து பொதுத் தேர்வு படிக்கும் குழந்தைகளுடன் விளையாடுகிறார்கள். போதாத குறைக்கு தேர்தல் வேறு வீதியா மைக் செட்டை வைத்து அரசியல்வாதிகள் பண்ணும் அலப்பறை வேற. படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ரங்கமனிகள் டிவியை அலறவிட்டு இந்த வெத்து போட்டியை பார்க்காதீர்கள். எப்படியும் இந்தப் போட்டிகளில் முதல் பாதியில் கடைசி ஐந்து ஓவர்களும், கடை பாதியில் ஒரு ஐந்து ஓவர்களும் ம்யூட்டில் வைத்து பார்த்தாலே முழு மேட்ச் பார்ப்பதற்கு சமம். நடுவில் எவனும் ஒன்னும் கிழிச்சிடப் போறதில்லை.

-------------------------------------------------------------------------------------

எல்.கே.ஜி. தாதா

தல உன் ஆள்கிட்டே ஒருத்தன் ரப்பர் கேட்குறான் தல.

யார் ரா அவன்?

பெசன்ட் நகர் “பென்னி” தல

யாரவன் என் ஆள் கிட்டே ரப்பர் கேட்கிறது

கூப்பிடுறா “பலப்பம் பாபு” வையும் “செர்லாக் சேகரையும்”

பெசன்ட் நகர் பென்னியோட ஸ்லேட், பீடிங் பாட்டில், டிபன் பாக்ஸ் எல்லாத்தையும் எடுக்க சொல்லுடா மவனே “பெசன்ட்நகர் பென்னி” பன்னி சாவட்டும்.

----------------------------------------------------------------------------------------------

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

Thenammai Lakshmanan said...

இறப்புக்கு இரங்கல்கள்..

எல் கேஜி தாதா சூப்பர்..:))

கும்மாச்சி said...

தேனம்மை மேடம் வருகைக்கு நன்றி, ரொம்ப நாட்களுக்குப் பிறகு வருகை தந்துள்ளீர்கள்.

RVS said...

இதே மாதிரி அடுத்த முறை தாத்தா எழுதுங்க தல.. ;-)

கும்மாச்சி said...

ஆர.வி. எஸ் எந்த தாத்தாவை சொல்லுறீங்க. வருகைக்கு நன்றி.

Chitra said...

May their souls rest in peace.

RayJaguar said...

avargalin aanma santhi adaiya aandavanai praarthikkiraen

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.