இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது.
ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல் வருது, மக்களும் காசு, பணம், சாராயம், பிரியாணி எல்லாம் பெற்றுக் கொண்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுகிறார்கள். இந்தக் கூட்டனின்னு ஒன்ன போட்டுக்கிட்டு எந்தப் பக்கம் அதிக சுருட்டுற கூட்டம் இருக்கோ அவனுங்க வந்து ஆட்சின்னு சொல்லி கொள்ளயடித்துப் போகிறது வழக்கமாப் போச்சு.
இதற்கு சுரண்டுவதை முறைப் படுத்த அரசியல் நிர்ணயச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.
1. முதலில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
2. மாநிலத்தில் கட்சிகளின் செல்வாக்கு அடிப்படையில் ஒரு ஐந்து கட்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு தனியார் கம்பனிக்கு காண்ட்ராக்ட் விட்டு ஒரு சர்வே நடத்த வேண்டும்.
3. பின்னர் பொது மக்களின் முன்னிலையில் ஐந்து கட்சிகளின் பெயர்களை எழுதி ஒரு குடத்தினுள் போடவேண்டும்.
4. பின்பு குலுக்கல் முறையில் ஐந்துக் கட்சிகளையும் வரிசைப்படுத்த வேண்டும்.
5. முதலில் வரும் கட்சி ஒரு இரண்டாண்டுகள் ஆட்சி புரியட்டும். பின்பு இரண்டாண்டுகள் இரண்டாவது வந்த கட்சி, இரண்டாண்டு என்று எல்லாக் கட்சிகளும் ஆட்சி செய்யட்டும்.
6. மக்கள் நல திட்டத்திற்கு இரண்டாண்டுகளுக்கு உண்டான ஒரு அமௌன்ட் நிர்ணயம் செய்ய வேண்டும்.
7. இதை வளர்ச்சி பணிகளுக்கு, அரசாங்க செலவுகளுக்கு என்று செலவிட வேண்டும், இதில் ஆட்சி புரியும் கட்சி ஒரு குறிப்பிட்ட % சுருட்டிக் கொள்ளலாம்.
8. % நிர்ணயம் செய்வதை மக்களிடம் விடவேண்டும். இதற்கும் தனியார் கம்பனிகளின் உதவியை நாடி சர்வே நடத்தலாம்.
9. தேர்வு செய்யப்பட்ட கட்சி யாரை வேண்டுமென்றாலும் அமைச்சர்களாக நியமித்துக் கொள்ளலாம்.
10. பீத்த மகன்/ள், பெண்டாட்டி, வைப்பாட்டி, உடன் பிறந்த சகோதரி, உடன் பிறவா சகோதரி, அவர்கள் மாமன் மச்சான், அக்காள் மகன், கொழுந்தியா, தொடுப்பு, எடுப்பு, ஓரகத்தி, சக்களத்தி, சித்தப்பா, தொத்தா, ஐயா , ஆயா, பாட்டன், பாட்டி, வளர்ப்பு மகன், வளர்க்காத மகன் என்று யாரை வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம்.
11. % பங்கு போட்டுக் கொள்வதை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டிய அவசியமில்லை.
12. புதிய வரிகள் எதுவும் விதிக்கக் கூடாது.
13. இருக்கும் வரிகளும், டாஸ்மாக் வருமானமும் வைத்துக் கொண்டுதான் அரசாங்கம் நடத்தப் படவேண்டும்.
14. பின்னர் பத்து வருடங்கள் கழித்து மற்றுமொரு சர்வே மற்றுமொரு குலுக்கல் என்று போகலாம்.
இதனால் மக்கள் அடையும் லாபங்கள் நிறையவுள்ளன.
1. தேர்தல் செலவு குறையும்.
2. சட்ட சபை கிடையாது, அதனால் ஆகும் செலவுகள் குறையும்.
3. சட்ட சபையில் வேட்டி சேலை உருவும் காட்சியை அடுத்த சந்ததியனர் பார்க்க முடியாது.
4. இந்தக் கூட்டணி போடுறது, வேட்டி துவைக்கிறது, உள்பாவாடை துவைக்கிறது எல்லாம் காணாமல் போய்விடும்.
5. முக்கியமாக இலவசம் கிடைக்காது. தலைவர் படம் போட்ட, பை, செருப்பு, காண்டம் (நன்றி: பட்டாபட்டி) முதலியவை அறவே ஒழிக்கப்படும்.
6. கட்சி, கொடி, மைக்செட், போஸ்டர் கட்சி ஆபிஸ் என்ற வீண் செலவுகள் குறையும்.
7. மொத்தத்தில் ஒரு கார்பரரெட் வியாபாரமாகி விடும்.
8. கொள்ளையடிப்பது வரைமுறைப் படுத்தப்படும்.
ஏதோ என்னால் ஆனா யோசனையை மல்லாக்கப் படுத்து யோசிச்சு எழுதியிருக்கேன். மேலும் சில யோசனைகளை தொடர் பதிவாளர்களுக்கு விட்டுவிடுகிறேன்.

சத்தியமா தேர்தலுக்கும் மேலே உள்ள பிகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரொம்ப நாளா நம்ம நண்பன் ஒருத்தன் என்ன உன் பதிவுல நல்ல பிகர் படம் போடலேன்னு லொள்ளு பண்றான்.
அதனால் இந்தப் படம். ----------------------------------------------------
8 comments:
சிறப்பான பதிவு நண்பரே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிவின் தலைப்பு வேறொரு பதிவர் வழக்கமாக தலைப்பு வைக்கும் ஸ்டைலை நினைவூட்டுகிறது...
வோட்டு போடுறவங்க எல்லோரும் இப்படி யோசித்தால் நல்லது.... வோட்டு கேட்கிறவங்க, மக்கள் நலனை பற்றி யோசித்தால், இன்னும் நல்லது.
ஒரு முடிவோடத்தான் இருக்கீங்கன்னு நினைக்கிறேன், நல்ல சுவையாக இருந்தது
சீக்கிரம் நடந்தாலும் ஆச்சரியப்படமுடியாது பாஸ்..
ஹா.ஹா...
எத்தன நாள் தான் செத்து செத்து விளையாடுறதுன்னு சொல்றீங்க சரிதானே!
அப்படியே இந்தப்பதிவய்யும் பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க
http://vikkiulagam.blogspot.com/2011/02/vote.html
பதினாலு அம்சத் திட்டம் அட்டகாசமா இருக்கு. அமுல் படுத்துவாங்களா? ;-)
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.