Pages

Tuesday, 15 February 2011

முதுமையில் காதலர்தினம்

இருபதிலே இணைந்து


பாசத்திலே பிணைந்து

காதலிலே உழன்று

கணக்குடன் பெற்று

பாசத்தினை பொழிந்து

கல்வி கண் திறந்து

கருத்துடனே கற்பித்து

வாழ்வின் அனுபவங்களை

வடிவாகக் கொடுத்து

கூடிவாழ விழைகையில்

தேடி வந்த வேலை

நாடி சென்ற மக்கள்

சடுதியிலே சென்றதெல்லாம்

மனதினை உடைக்கவில்லை

நாடி தளர்ந்து நழுவுகையில்

நடுங்கும் கையுடன்

தலை கோதி வழியும்

உமிழ்நீரை வாஞ்சையுடன்

துடைக்கும் பொழுது

இடுங்கிய கண்களில்

போகும் உயிரை

நிறுத்த விழைகிராயே

நொறுங்கி உடைகிறது.



வாழும் ஒவ்வொரு

நொடியும் நம்

வாழ்வில் “காதலர்

தினமடி நம்

காதலின் புரிதல்

முழுமை பெறும்

காதலர்தினம்”

-------------------

10 comments:

  1. நல்லாருக்கு..படம் தேர்வு அருமை

    ReplyDelete
  2. //உமிழ்நீரை வாஞ்சையுடன்
    துடைக்கும் பொழுது
    இடுங்கிய கண்களில்
    போகும் உயிரை
    நிறுத்த விழைகிராயே//
    வழமையாக யதார்த்தம் அற்ற காதல் கவிதைகள் பெரிதாக பிடிப்பதில்லை ...இது மிக மிக பிடித்துவிட்டது..அருமை ..இப்படியே எழுதுங்கள் :)
    http://ethamil.blogspot.com/2011/02/blog-post_15.html

    ReplyDelete
  3. //வாழும் ஒவ்வொரு

    நொடியும் நம்

    வாழ்வில் “காதலர்

    தினமடி நம்

    காதலின் புரிதல்

    முழுமை பெறும்

    காதலர்தினம்”//

    Correct...

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க உங்க வார்த்தை பிரயோகம்

    ReplyDelete
  5. "ஊன் உயிரை உருக்கி உணர்வுகள் பெருக்கி,
    உள்ளத்திலே உவகை கொண்டு
    நேசிப்பவளை நேசித்து,
    என்னுள் நீ, உன்னுள் நான்
    உலகம் நீ என உணர வைத்து..."
    நன்றி கும்மாச்சி (2010 கவிதை!)

    ReplyDelete
  6. ஒஹ் ஒரே லவுசு டோய்...
    நல்லாருக்குங்க...கடைசில சொன்னீங்க பாருங்க...எல்லா நொடியும் காதலர் தினம் தான்னு... ஐ ஆம் ப்ளைண்ட்...

    ReplyDelete
  7. நம்ம கடப்பக்கமா வந்துராதீங்க ஹி ஹி!!

    ReplyDelete
  8. மன்னிச்சுக்குங்க பாஸ், கடைக்கு வரேன்.

    ReplyDelete
  9. முதியோர் கல்வி தரமாக இருந்தது. படம் ஜோர், ஜொள்ளுதான் ஐயா.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.