Tuesday, 8 March 2011

கலக்கல் காக்டெயில்-24

அறுபத்துமூவர்




கலைஞர் விட்ட கடைசி “அஸ்திரத்திற்கு” இறங்கி எல்லா நிபந்தனைகளையும் கை விட்டு அறுபத்து மூன்றிற்கு மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அறுபத்து மூன்றில் எவ்வளவு தேறும் என்பது “தேர்தல் ஆணைய பகவானு” க்குத்தான் வெளிச்சம்.

அம்மா “காங்கிரஸ் கடாட்சம்” எதிர் பார்த்து கடைசி வரை வைகோவை வாசலில் நிறுத்திய அவலம் எந்த கட்சி தலைவருக்கும் நேராத அவமானம். தன்மான சிங்கம் பேசாமல் அ.தி.மு.க. ஜோதியில் ஐக்கியமாகிவிடலாம்.

மொத்தத்தில் கொள்கை, கண்ணியம் என்பதெல்லாம் ..த்தா ரேஞ்சிற்கு இறங்கி விட்டது தமிழ் கூறும் நல்லுலகம் கொள்கை ஓட்டை கொட்டடியில் போட்டு பிரியாணிக்கு மயங்கி க்வார்டரில் குளித்ததால் வந்த வினை.

“வினை விதைத்தவன் வினையறுப்பான்”.

மே பதிமூன்றாம் தேதி பேரம் தொடங்கும் நாள்.

ரசித்த கவிதை

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்

இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தலை அறிக

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்

நானே தொடக்கம் நானே முடிவு

நானுரைப்பதுதான் நாட்டின் சட்டம்.

கவிஞர்: பெயர் சொல்ல வேண்டிய அவசியமில்லை.



ஒரு கட்டிங் எஸ்டிரா

Pack my box with five dozen liquor jugs

இந்த வாக்கியத்தில் ஆங்கில எழுத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன. குடிமகன்கள் பெருமை கொள்ளலாம்.

இந்த வார ஜொள்ளு




Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்கள் ரசித்த கவிதை அருமை. நானும் ரசித்தேன்.

Chitra said...

:-)))

கும்மாச்சி said...

பிரஷா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சித்ரா வருகைக்கு நன்றி.

Kandumany Veluppillai Rudra said...

கவிதை,...................

goget99 said...

சுட சுட நியூஸ் from கும்மாச்சி. கலக்குங்க.

ttpian said...

முனியாண்டி கோவிலில் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை பலியிடுவதை பார்த்திரிக்கிறேன்:
இப்போது அறுபத்து முன்று ஆடுகளை பலி aakappOvathai
பார்க்கபோகிறோம்

RayJaguar said...

congress compress aaganum!!

கத்தார் சீனு said...

அறுபத்து மூணுல ஒன்னு கூட தேராது..என் கணிப்பு......கவிதை அழகு

sarathy said...

Bottom really Top(s) up Sir!
Nice treat for mind & eyes!

அ.சந்தர் சிங். said...

கண்ணதாசன் கவிதை என்று சொல்லியா தெரிய வேண்டும்?

கும்மாச்சி said...

சாரதி பின்னூட்டம் போடும்பொழுது அம்மணி அருகில் இல்லையோ?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.