Pages

Friday, 11 March 2011

தேர்தல் வருது..........................

வருது வருது தேர்தல் வருது



பதுங்கிக்கிடந்த புலிகள் எல்லாம்


ஓட்டு கேட்டு பவனி வருது


சரக்கு போட்டு தொண்டரெல்லாம்


துண்டு போட்டு தொடர்ந்து வருது.


நிமிர்ந்து நடந்த புள்ளி எல்லாம்


குனிந்து கும்பிடு போட்டு வருது


சாவப்போற ஆயா எல்லாம்


சாவடி பக்கம் காவடி ஆடுது


க்வார்டருக்கு அலைஞ்சதெல்லாம்


ஃபுல்லோட ஆடி வருது


பழைய சோறு சட்டி எல்லாம்


பிரியாணி நிரம்பி வழியுது


குப்பையில் கிடந்த வழக்கு எல்லாம்


தூசி தட்டி துணிந்து வருது


நடப்பில் இருந்த வழக்கு எல்லாம்


கிடப்பில் போட்டு குப்பையாகுது


ஒட்டு போடும் “ராசா” எல்லாம்


புது வேட்டி கட்டி நிக்குது


கிழிஞ்ச சேலை “ராணி” எல்லாம்


புதிய சேலையில் மினுக்குது


நாறிப் போன நடிகை எல்லாம்


தேரேறி திறந்து வருது


இலவசங்கள் எல்லாம்


இருப்பு தேடி வருது


லட்டினிலே லஞ்சம் வருது


கவரினிலே கையூட்டு வருது


ஐந்து வருட ஆசையெல்லாம்


“ஐந்நூரில்” அடங்கி விடுது.

---------------------------------------------------------------

7 comments:

  1. No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
    நன்றி

    ReplyDelete
  2. சூடான கவிதை அத்தனையும் நிஜம்

    ReplyDelete
  3. வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
    தமிழ் திரட்டி

    ReplyDelete
  4. ஐந்து வருட ஆசையெல்லாம்


    “ஐந்நூரில்” அடங்கி விடுது.


    .....வேதனையான அவல நிலை, கவிதை முழுவதும் படம் பிடித்து காட்டி இருக்கீங்க.

    ReplyDelete
  5. தேர்தல் வருது..தேர்தல் வருது
    கும்மாச்சியோட பதிவுகளும்
    குதூகலமா துள்ளி வருது....!

    ReplyDelete
  6. சேட்டை வாங்க, வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.