Pages

Thursday, 17 March 2011

வை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா...........................

கூட்டணியில் இருந்துகொண்டு


கொள்கை உள்ள கட்சி

வெல்லாது என்பது

ஜனநாயகம் வகுத்ததையா

வை. கோ,

இந்திய ஜனநாயகம் வகுத்ததையா

வருவதை எதிர் கொள் ஐயா.

அம்மாவுடன் நீ இல்லை

ஐயாவுடனும் இல்லை,

தொண்டரும் தொடரவில்லை

ஊர் பழி ஏற்றாய் ஐயா வை.கோ,

தனிமரம் ஆனாய் ஐயா.

பதினெட்டு மாதம்

சிறையில் அடைத்த

பாசிச அம்மாவிடம்

நாற்பது கோடி பெற்று

சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாய் ஐயா

வஞ்சகி அம்மா ஐயா

வை.கோ. வஞ்சகி அம்மா ஐயா.

தமிழ் ஈழம் என்று சொல்லி

கழுத்து நரம்பு

புடைக்க மேடையில்

முழங்கினாய் ஐயா

வை.கோ, நடந்து

நடந்து தேய்ந்தாய் ஐயா

நேற்று வந்த கூத்தாடி எல்லாம்

நாற்பது பெற்று உன்னை

நட்டாற்றில் விட்டார்கள் ஐயா

வை.கோ தன்மானம் இழந்தாய் ஐயா

கட்சி காணாமல் போகும் ஐயா

வை.கோ பம்பரம் அபீட் ஐயா

வை.கோ பம்பரம் அபீட் ஐயா.

7 comments:

  1. அடப் பாவி மக்கா...

    பச்சைப் புடவை, தமிழ்நாட்டை சுரண்ட வழி கொடுக்க மாட்டிர்களா?

    ReplyDelete
  2. பதிவுலகம் அறிமுகமானதிலிருந்து நான் அளித்த முதல் எதிர் ஓட்டு. பொறுத்துக்குங்க அண்ணாச்சி....

    ReplyDelete
  3. கர்ணன் தியாகமும் பட்ட அவமானமும் வைகோ முன்னால் காணாமல் போய் விட்டது

    ReplyDelete
  4. எட்டு சுரைக்காய் சோத்துக்கு உதவாது
    மேடை முழக்கம் ஆட்சிக்கு உதவாது

    ReplyDelete
  5. டக்கால்டி பாஸ் என் ஆதரவு எப்பொழுதும் உண்டு.

    ReplyDelete
  6. only cinema glamour can win but not Vaiko.samy

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.