Sunday, 20 March 2011

கதாநாயகி அறிமுகம்

போன முறை “கதாநாயகன்” இந்த முறை “கதாநாயகியாம்”. மஞ்சள் துண்டு ஐயா விட்ட தேர்தல் அறிக்கைக்கு முன் கொடுத்த “ஜிஞ்சினக்கா” விளம்பரம். மாணவர்களுக்கு மடிக்கணினி, இல்லத்தரசிகளுக்கு இலவச க்ரைண்டர் அல்லது மிக்ஸி, ஒரு ரூபாய் அரிசி இருபது கிலோவிலிருந்து முப்பத்தைந்து கிலோவாக உயர்வு. எல்லாம் அம்மனிகளை குறி வைத்து ஒட்டுல “ஆட்டை”யைப் போடும் தந்திரம். ஆண்கள் ஓட்டைக் கவர ஏன் டாஸ்மாக்கில இலவச கட்டிங்கை விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை அடுத்த “குத்தாட்ட நடிகை” அறிமுகப்படுத்தும் பொழுது கொடுப்பார்களோ? இந்த இலவசங்களுக்கு திறப்புவிழா செய்தவர் எம்.ஜி.ஆர். சத்துணவில் தொடங்கி, பல்பொடி, செருப்பாக உயர்ந்து டிவி, கிரைண்டர் மிக்ஸி வரை தேய்ந்துவிட்டது. இனிவரும் அறிக்கைகள் கட்டில், மல்லிப்பூ, அல்வா, காண்டம் என்று போனாலும் ஆச்சர்யமில்லை.


இந்த முறை கார்பரேட் கம்பெனிக்கு “சங்கூதலாம்” என்றால், மாற்று கம்பனியும் வந்து ஒரு மசுரும் பிடுங்கப் போவதில்லை. ஐந்து வருட காலம் அறிக்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டு ஒய்வு எடுத்துக் கொண்டு, மூன்று மாதம் கால்ஷீட்டில் வந்திருக்கும் அம்மா “கொட்டுவாயில்” கூட்டணி போட்டு இன்னும் தோழமை கட்சிகளிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பேசும் பொழுது “ஏணி எப்படியும் அபீட்” என்ற ரேஞ்சில் வேட்பாளர்களை அறிவித்த அவசரம் பிறந்த குணத்தை காட்டி எல்லோரையும் நகைக்க வைத்திருக்கிறது.

ம.தி.மு.க வை முதுகில் குத்தியதை மானமுள்ளவர்கள் மன்னிக்கமாட்டார்கள். அதற்காக வை.கோவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்கு சமம். அகந்தை ஆனவம், தன்னிச்சையாக செயல்படுதல் என்ற அம்மாவின் குணம் இப்பொழுதுதான் புரிந்திருக்கிறது. வைகோ தனியாக எல்லா இடங்களிலும் நின்று ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள இந்தத் தேர்தலை பயன்படுத்தலாம்.

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மாற்றுக் கட்சியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த புதிய கட்சியும் இந்த இரு கழகங்களுடனும் கூட்டணி வைத்துக் கொண்டால் பின்பு அந்தக் கட்சிகளாலேயே அழிக்கப் படுவது வரலாறு கண்ட உண்மை. இதை விஜயகாந்தும் போக போக புரிந்து கொள்வார் என நம்புவோம். இந்த கழகங்களின் வேரறுக்க இன்னும் குறைந்தது பத்து வருடமாவது ஆகும்.

அதற்குள் நடிகையின் “தொப்புளில்” முகம் புதைக்காத ஏதாவது ஒரு புண்ணியவான் புதிய கட்சி கொண்டு வந்தால் தான் தமிழனுக்கு விடிவு காலம். இல்லையென்றால் இலவச கவர்ச்சிகளில் மயங்கி இருண்ட காலத்திற்கு போக வேண்டியது தான்.

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

settaikkaran said...

//இனிவரும் அறிக்கைகள் கட்டில், மல்லிப்பூ, அல்வா, காண்டம் என்று போனாலும் ஆச்சர்யமில்லை. //

சூப்பர்! ஜனங்களைப் பற்றி அரசியல்வாதிகள் எவ்வளவு மட்டமா கணக்குப் போட்டிருக்காங்கன்னுறத இத விட சுருக்குன்னு சொல்ல முடியாது.

settaikkaran said...

//வைகோ தனியாக எல்லா இடங்களிலும் நின்று ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள இந்தத் தேர்தலை பயன்படுத்தலாம்.//

ஆமாம்.

settaikkaran said...

சூடுபறக்கிற தேர்தல் சீஸனில் சூடாக ஒரு செமத்தியான இடுகை!

கும்மாச்சி said...

சேட்டை உங்கள் கருத்து சரி. வருகைக்கு நன்றி.

Jey said...

//ம.தி.மு.க வை முதுகில் குத்தியதை மானமுள்ளவர்கள் மன்னிக்கமாட்டார்கள். அதற்காக வை.கோவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்கு சமம். அகந்தை ஆனவம், தன்னிச்சையாக செயல்படுதல் என்ற அம்மாவின் குணம் இப்பொழுதுதான் புரிந்திருக்கிறது. வைகோ தனியாக எல்லா இடங்களிலும் நின்று ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள இந்தத் தேர்தலை பயன்படுத்தலாம்.//

அண்ணாச்சி சரியா சொல்லிருக்கீங்க..

ttpian said...

தேரோடும் சென்னையிலே
தேனொழுகும் சென்னையிலே
ஆரடித்தாரோ?
ஆரடித்தாரோ?

ttpian said...

நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தால்,

தண்ணி கலக்காத சரக்கு

பத்து உள் பாவாடை

இருபது தாவணிகள்

தருவோம்

கத்தார் சீனு said...

பதிவு சூப்பரு....
மீ டூ சேம் பீலிங் ....அல்மோஸ்ட் ஒரே மாதிரி பதிவு போட்டிருக்கேன்

Jayadev Das said...

\\ஆண்கள் ஓட்டைக் கவர ஏன் டாஸ்மாக்கில இலவச கட்டிங்கை விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை.\\சாராயத்தை நிறுத்திட்டா இலவசம் எங்கிருந்து வரும்? ஐயோ... ஐயோ... அரசாங்கமே சாராய விற்பனையில் வரும் லாபத்தை வச்சித் தான் ஓடுது. \\இனிவரும் அறிக்கைகள் கட்டில், மல்லிப்பூ, அல்வா, காண்டம் என்று போனாலும் ஆச்சர்யமில்லை.\\ அப்பவும் கில்மா கிடையாதான்னு தான் நம்மாளு கேட்பான். இலவச தொலைக் காட்சி கொடுக்கும் தாத்தா ஒரு போதும் கேபிள் இணைப்பை இலவசமாகக மாட்டார். அரசாங்க செலவில் தொலைக் காட்சி, அதற்க்கு கேபிள் கொடுத்து மாறன்களும் தாத்தாவின் மகன்களும் கொழுப்பார்கள். தாத்தா ஜகஜ்ஜால கில்லாடிதான்.

Unknown said...

தமிழனின் சாபக்கேடு சினிமா அரசியல் புள்ளிகளின் வரவு!

RayJaguar said...

vaiko election la nikkanum!! vote split aaganum!! ADMK azhiyanum!!!!! and DMK is far better

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.