Thursday, 28 April 2011

கலக்கல் காக்டெயில்-28

சாய்பாபா


மறைந்த பாபாவின் உடல் நேற்று ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தை தாண்டியது. நாட்டின் பிரபலங்கள் பல பேர் கண்ணீருடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது அவர் கடவுளா?, மனிதரா? என்கிற விவாதங்கள் எல்லாம் அவசியமற்றதாகிறது. எத்தனையோ சாமியார்கள் கோடிகளில் குளித்து கும்மியடிக்க, சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டு வருகிறேன் என்று பல கோடிகளை செலவழித்தும் பொட்டு நீர் பூண்டியில் கொண்டு வராமல் பல அரசாங்கங்கள் ஜல்லியடித்துக் கொண்டிருக்க, இரு நூறு கோடி செலவழித்து கண்டலேறு வாய்க்காலை மராமத்து செய்து பூண்டி ஏரியின் நீர் வரத்தை அதிகரித்து இன்று சென்னையின் குடி நீர் பிரச்சினையை ஓரளவுக்கு தீர்த்த அவர் ஒரு மனிதநேயமிக்க மகான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டத்தை முன்னேற்றிக் காட்டினார். இப்பொழுது அவர் அமைத்த ட்ரஸ்ட் கையிருப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்று சொல்லுகிறார்கள். அவையெல்லாம் இனி இது போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தயாளு “அவுட்” கனிமொழி “இன்”

ஸ்பெக்ட்ரம் ஒளிக்கற்றை வழக்கு செல்லும் பாதை கண் துடைப்போ என்று சிந்திக்க தோன்றுகிறது. கலைஞர் தொலைக் காட்சியில் அறுபது விழுக்காடு பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளை குற்றப் பத்திரிகையில் சேர்க்காமல், இருபது விழுக்காடு பங்கு வைத்திருக்கும் கனிமொழியையும், சரத் குமாரையும் சேர்த்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. இதற்குப் பிறகு இத்தனை நாட்களுக்குப் பிறகு கல்மாடியின் கைது அரசியல் நாடகங்கள் அரங்கேற்ற முன்னோடியா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இத்துணை நடந்தும் “அம்மா” காங்கிரசை ஒன்றும் சொல்லாது இருப்பது தேர்தல் பின் கூட்டணிக்கு அச்சாரமோ? அட போங்கப்பு ஒண்ணுமே புரியல!!!!!!!!!!!!!



இந்தவார கடி

மின்னஞ்சலில் வந்ததில் இருந்து சுட்டது.

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா?

அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 27 April 2011

ஒக்காந்து காப்பியடிப்போம்ல

வேலை பளுவினால் சிறிது நாட்கள் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை. ஆதலால் முதலில் மின்னஞ்சலில் வந்த ஒரு கடியுடன் தொடங்கலாம் என்று சுட்டதுதான் இது.


படத்துக்கும் கடிக்கும் சம்பந்தம் இல்லை. சும்மா உவ்வாகாட்டிக்கு.


கண்ணா நீ


கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,


கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,


பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,


நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...



ஒரு பொண்ணு போட்டோவுல


தேவதைமாதிரி இருந்தாலும்


நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா




அப்பா அடிச்சா வலிக்கும்


அம்மா அடிச்சா வலிக்கும்


ஆனால் சைட் அடிச்சா வலிக்காது



உன்னை யாரவது


லூசுன்னு சொன்னா


கவலை படாதே!


வருத்த படாதே!


ஃபீல் பண்ணாதே!


உங்களுக்கு எப்படி


தெரியும்ன்னு கேள்!




காதல் ஒரு மழை மாதிரி,


நனையும் போது சந்தோஷம்.


நனைந்த பின்பு ஜலதோஷம்.



மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?



ஐந்து கேள்விப்பா




நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?




முதல் மூணும் கடைசி இரண்டும்



வெரிகுட் கீபிடப்





டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.


இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????



என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?


டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.



நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.


அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.




டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!



வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?


சர்தார்: ஆகிவிட்டது.


வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?


சர்தார்: ஒர் பெண்ணை.


வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?


சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..



சார்,


டீ மாஸ்டர்டீ போடறாரு,


பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,


மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,


நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..



''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''


''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''



ஒரு காப்பி எவ்வளவு சார் ?


5 ரூபாய்.


எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?


டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!



உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.


நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.



இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா? இல்லை அவங்களே சொன்னங்க...


Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 14 April 2011

தேர்தல் ஆணையம் ---------------பணம் கூரையிலே

எழுபத்தைந்து விழுக்காடு வாக்குப் பதிவாம் தமிழகத்தில், தேர்தல் ஆணையம் தன் .........தை தானே சொரிந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இம்முறை பண்ணிய கெடுபிடிகள் பொது மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. உண்மையான பணம் பட்டுவாடா செய்தவர்களை பிடிக்காமல், தினக்கூலிகளிடமும், சில்லறை வியாபாரிகளிடமும் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் ஆணையம் மார் தட்டிக்கொண்டிருக்கிறது.


ஆளும் கட்சி கொடுக்கிறார்கள் என்று எதிர் கட்சிகள் புகார் செய்தவுடன் அந்த இடத்தில் ஆஜராகியும், எதிர் கட்சிகள் கொடுக்கும் பொழுது அம்பேல் ஆனதும் ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மக்களின் மத்தியில் ஒரு கேள்விக் குறியே.

அமைதியாக தேர்தல் நடத்தியதற்கு தேர்தல் ஆணையம் பெருமை கொள்வதிலும் நூறு விழுக்காடு உண்மை இல்லை. மாநில அரசின் உதவி இல்லாமல் இது நடக்க சாத்தியம் இல்லை. இந்த முறை மக்களை விட மற்றைய சக்திகள் ஆளும் கட்சியை இறக்குவதில் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது.

இதை சொல்வதனால் நான் ஒன்றும் தி.மு. க அபிமானி அல்ல. தமிழ் நாட்டை பிடித்த இரு சனியன்கள்தான் இரு கழகமும் என்பது என் கருத்து. அ.தி.மு.க ஒன்றும் உத்தமாமான கட்சி இல்லை. தமிழ் நாட்டிற்கு விடிவு காலம் இந்தக் கழகங்களும், காங்கிரசும், மதவாதக் கட்சிகளும் இல்லாமல் புதியதாக (தொப்புள் தேய்க்கும் நடிகர்கள் தவிர்த்து) யாராவது வந்தால் தான் விடிவு காலம்.

“அவாள்” பத்திரிகைகள் எல்லாம் ஏதோ புதியதாக பண பட்டுவாடா இந்தத் தேர்தலில் தான் நடப்பது போல் எழுதுவது நகைச்சுவையின் உச்சக் கட்டம். அதற்கு “திருமங்கலம் பார்முலா” என்று நாமகரணம். பென்னாகரம் தேர்தலில் அ.தி.மு.க தலைமை கொடுத்த பணத்தை விநியோகம் செய்யாமல் “வட்டம்” “மாவட்டம்” சுருட்டிக் கொண்ட செய்தி அப்பொழுதே பேசப்பட்டது. “லட்டில் மூக்குத்தி”யை மறந்து விட்டார்கள் போலும்.

தி.மு.க பணம் கொடுக்காத இடங்களில் எல்லாம் “இந்தா அவர்களுக்கும் சேர்த்து நான் கொடுக்கிறேன்” என்று அ.தி.மு.க கொடுத்த காட்சியை பார்த்தவர்கள் பலர் உண்டு. இதைத் தவிர பேங்க் கணக்கில் போட்டு எ.டி.எம் மூலம் எடுக்க வசதி செய்த கட்சிகளும் உண்டு. நகைகளை மீட்டுத்தந்த சம்பவங்களும் அரங்கேறியது. பணம் வாங்காத வீட்டுக் கூரைகளில் சொருகிச் சென்றதாகவும் தகவல்.

அடுத்து மேற்கு வங்கத் தேர்தல் அங்கே தேர்தல் ஆணையம் என்ன பிடுங்கிறார்கள்? என்று பார்ப்போம்.

யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்ற தலை விதியை நிர்ணயம் செய்வது ஏழை எளிய மக்களின் வாக்குகளே. இந்த நாட்டில் படித்தவர்கள் தங்கள் வாக்குகளை தங்கள் அதி மேதாவித்தனத்தால் வீனாக்குதல் தொன்று தொட்டு நடந்து வரும் செயல். வாய் கிழிய பேசியும், தாள் கிழிய எழுதியும் தேர்தல் நாளன்று கவுந்தடித்து படுப்பது வழக்கம்.

தமிழ் நாட்டின் நிர்ணயிக்கப்பட்ட விதி அறிவிக்கப்படும் நாள் மே பதிமூன்று, பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 10 April 2011

போடுங்கம்மா ஒட்டு

இரண்டு கட்சிகளும் தரும்



இலவசங்கள் தேடி வரும்


வளர்ச்சிகள் முடங்கி விடும்


சமுதாயம் சிதைந்து விடும்


மின்சார தட்டுப்பாட்டில்


க்ரைன்டரும் மிக்சியும்


கடைசிவரை வாரா


உழைப்பின் மூலதனம்


உறுதியுடன் உடன்வரும்


ஆடு மேய்க்க சொல்லி


சொந்தங்கள் உயர


சுயநலக் கட்சிகளின்


அரசாங்கங்கள் தேவையா?


பூப்பெய்தால் காசு


பிள்ளை பெற்றால் காசு


நின்றால் நிமிர்ந்தால்


நடந்தால் காசு


கணக்கு வைத்து


காசு பார்க்க


மடிக் கணினி.


அண்டை மாநில


சந்தைகளில் சகாய விலையில்


இலவசங்களின் அணிவகுப்பு


இல்லத்தரசனுக்கோ


இரண்டு நாள் சரக்கடிப்பு


சீர்தூக்கிப் பார்த்து


சிறப்பான ஒருவருக்கு


போடுங்கம்மா ஒட்டு

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 5 April 2011

கலக்கல் காக்டெயில்-27

ஜெயிப்பவன் தோற்பான், தோற்பவன் ஜெயிப்பான்.........


உலகக் கோப்பையை நழுவ விட்டு தாய்நாடு திரும்பிய இலங்கை வீரர்களை வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறது சிங்கள ஊடகங்கள். முரளியின் மனைவி இந்தியன் என்பதால்தான் முரளி விக்கட் எடுக்கவில்லை என்று கூறுவது சிங்களக் காடையர்களின் அபத்ததிற்கு எடுத்துக்காட்டு. தோல்வி சங்கக்காரவின் ராஜினாமா வரை போயிருக்கிறது.

“சங்கா” பூவா தலையா போடும் பொழுதே தன் அழுகுணி ஆட்டத்தையும் அழுகையையும் தொடங்கிவிட்டார். அவர் தலை என்று சொன்னது அவருக்கே கேட்கவில்லை எனபது அபத்தம். இருநூறு வருட கிரிக்கட் சரித்திரத்தில் இருமுறை பூவா தலையா கேட்ட ஒரே வீரர் என்ற பெருமையை சங்கா பெறுகிறார். அவர்களுடைய தோல்வி அப்பொழுதே எழுதப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது. தோனியின் ரன் அவுட்டை கோட்டைவிட்ட சங்கா அப்பொழுதே கோப்பையை நழுவவிட்டுவிட்டார். முன்னாள் கிரிக்கட் வீரர் “பேடி” சொல்வதுபோல் தொன்று தொட்டே ஸ்ரீலங்கா இந்த அழுகுணி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிரார்கள்.

முளையிலேயே கிள்ளி எறியனும்

நம்ம ஊர் தேர்தல் களத்தில் இந்த நடிகர்கள், நடிகைகள் அடிக்கும் கூத்து தாங்கவில்லை. “குடை பிடிச்சவன் ஏற்றி விட்ட ஏணியை ஏசுகிறான்” என்று எதிரணி சொன்னாலும், “தண்ணியில மிதக்கிற கப்பலை ஓட்டுபவன் கேப்டன், எந்நேரமும் தண்ணியில மிதக்கிறவன் கேப்டன் இல்லை” என்று வாங்கிய காசுக்கு அதிகமாகவே கூவுகிறார் வைகைப் புயல். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அவரை நல்ல வெயிட்டாக கவனிப்பார்கள் போல் தோன்றுகிறது.

கேப்டன் எப்பொழுது நிதானத்தில் இருப்பார் என்று அவர் பேச்சை கேட்பவர்கள் சொல்ல முடியாது.

இதற்கு மேல் கொசுறாக குஷ்பு, விந்தியா என்று ஒரு கூட்டம் அவர்கள் பங்கிற்கு உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் புதிய அரசியல் வரவு “டாக்குட்டரு” அப்பா மதுபான தொழிற்சாலைக்கு லைசென்ஸ் கேட்டுதான் அம்மாவிற்கு பிரசாரம் செய்கிறார் என்று சொற்பமிருந்த ரசிகர்கள் அறிவாலயம் போய் விட்டார்கள்.

இவர்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறியனும். இல்லை என்றால் கொடி காலை சுற்றி கழுத்தறுக்கும்.

இந்த வார ஜொள்ளு


கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

அவனவன் மண்டை காய்கிற வெயிலில் வருந்திக் கொண்டிருக்க இந்த தேர்தல் கூத்தையும் சகிக்க வேண்டிய காரணத்தால் இந்த வார ஜொள்ளுப் படம் இரண்டு.





Follow kummachi on Twitter

Post Comment

Monday, 4 April 2011

உளறுவாயர்களும் உருப்படாத தேர்தலும்

ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு சென்று வந்ததில் மூன்று மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் காணும் வாய்ப்பு கிட்டியது.


முதலில் “கோல்கத்தா”. மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஏற்பாடு வெறும் சுவர்களில் திரிணமுல் காங்கிரசின் விளம்பரங்களை காண முடிந்தது. இன்னும் மெகபோனை கையிலெடுத்து இருநூறு டெசிபல் அலறல் ஆரம்பிக்கவில்லை. மம்தா இருக்கும் “காளிகாடில்” கூட ஆர்பாட்டம் இல்லை. சி.பி.எம். என்ன உத்தி வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை. அலிபூர், ஜோகா, போயலான் பக்கம் எல்லாம் திரிணமூல் விளம்பரங்கள்தான்.

அடுத்த விசிட் கோழிகோடு. கேரளா தேர்தல் களம் நான் இருந்த மார்ச் மூன்றாம் வாரத்தில் பிரசாரம் இன்னும் தெருவுக்கு வரவில்லை. இப்பொழுதுதான் உமன்சாண்டியும், அச்சுதானந்தனும் ஒருவரை ஒருவரை குறை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் போக போக சூடு பிடிக்கலாம்.

என்றும் நம் மாநிலம்தான் எதற்கும் முதலிடம். ஊத்திகொடுத்தவரும், ஊறுகாய் கேட்டவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். மற்றொரு அணியில் காட்டிகொடுத்தவரும், கடுக்காய் கொடுப்பவரும், மற்ற அல்லக்கைகளும் கூடியிருக்கிறார்கள். கூடவே இருந்து வாசல் வரை வந்தவரும் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்.

வேட்பாளரை நையப்புடைத்து அப்படித்தான் அடிப்பேன், “நான் அடிச்சா மஹாராஜா ஆகிவிடுவார்” என்று சொல்ல “அப்போ எதற்கு தேர்தல் கல்யாண மண்டபத்தில் நாற்பத்து மூன்று பேரையும் நையப்புடைத்து மகா ராஜா ஆக்கவேண்டியது தானே” என்று நக்கல் செய்கிறார்கள்.

ஆளும் கட்சிக்கு ஆப்பு வைக்க “ஆப்” உட்டாதான் வேலைக்கு ஆகும் என்கிறார் தலைவர். கூட இருக்கும் அணிக்கே “கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் கொள்கையும் ஜெயிலில் இருக்கிறது” என்று மப்பில் மாற்றி பேசுகிறார். கொடியை இறக்குப்பா என்று அடிக்கடி அதட்டுகிறார்.

அரசியல் கோமாளியோ இந்தக் கட்சிக்கு எதற்கு முரசு சின்னம்? தேர்தல் ஆணையம் “பாட்டில்” சின்னம் கொடுத்திருக்கலாம் என்கிறார்.

எதிர் அணியோ இதை ஓயாமல் தங்களுடைய எல்லா தொலைக் காட்சிகளிலும் இந்தக் காமெடி பீசுகளையே காட்டி நொங்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரணியை சொல்ல ஒன்றுமில்லை. “இலவசங்களை அள்ளி வீசியிருக்கிறார்கள்”. ஏற்கனவே ராசா கைது குற்றப் பத்திரிகை என்று குடைந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா கேளிக்கை கூட்டணி அமைப்பிலேயே தொடங்கி விட்டது. அம்மா அவர் பங்குக்கு இலவசங்களில் “பவுண்செர்” போடுகிறார். இப்பொழுது குடும்பத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், ஒரு லட்சத்தி எழுபத்தி எட்டாயிரம் கோடி சுட்டு விட்டார் என்று ஒப்பாரி வைக்கிறார்.. சென்னையில் அம்மா எல்லா சீட்டுகளையும் வெல்ல தொண்டர்களின் உழைப்பு போறாது.

மொத்தத்தில் “மே பதிமூன்றாம் தேதி” எல்லோரும் எதிர் பார்க்கப்படும் நாள். அப்பொழுது யார் சிரிப்பரோ யார் அழுவாரோ தெரியாது.

இந்த முறை “பணநாயகம் வென்றது ஜனநாயகம் தோற்றது” போன்ற உளறல்கள் இருக்காது என நம்புவோம்.

Follow kummachi on Twitter

Post Comment