Pages

Monday, 4 April 2011

உளறுவாயர்களும் உருப்படாத தேர்தலும்

ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு சென்று வந்ததில் மூன்று மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் காணும் வாய்ப்பு கிட்டியது.


முதலில் “கோல்கத்தா”. மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஏற்பாடு வெறும் சுவர்களில் திரிணமுல் காங்கிரசின் விளம்பரங்களை காண முடிந்தது. இன்னும் மெகபோனை கையிலெடுத்து இருநூறு டெசிபல் அலறல் ஆரம்பிக்கவில்லை. மம்தா இருக்கும் “காளிகாடில்” கூட ஆர்பாட்டம் இல்லை. சி.பி.எம். என்ன உத்தி வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை. அலிபூர், ஜோகா, போயலான் பக்கம் எல்லாம் திரிணமூல் விளம்பரங்கள்தான்.

அடுத்த விசிட் கோழிகோடு. கேரளா தேர்தல் களம் நான் இருந்த மார்ச் மூன்றாம் வாரத்தில் பிரசாரம் இன்னும் தெருவுக்கு வரவில்லை. இப்பொழுதுதான் உமன்சாண்டியும், அச்சுதானந்தனும் ஒருவரை ஒருவரை குறை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் போக போக சூடு பிடிக்கலாம்.

என்றும் நம் மாநிலம்தான் எதற்கும் முதலிடம். ஊத்திகொடுத்தவரும், ஊறுகாய் கேட்டவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். மற்றொரு அணியில் காட்டிகொடுத்தவரும், கடுக்காய் கொடுப்பவரும், மற்ற அல்லக்கைகளும் கூடியிருக்கிறார்கள். கூடவே இருந்து வாசல் வரை வந்தவரும் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்.

வேட்பாளரை நையப்புடைத்து அப்படித்தான் அடிப்பேன், “நான் அடிச்சா மஹாராஜா ஆகிவிடுவார்” என்று சொல்ல “அப்போ எதற்கு தேர்தல் கல்யாண மண்டபத்தில் நாற்பத்து மூன்று பேரையும் நையப்புடைத்து மகா ராஜா ஆக்கவேண்டியது தானே” என்று நக்கல் செய்கிறார்கள்.

ஆளும் கட்சிக்கு ஆப்பு வைக்க “ஆப்” உட்டாதான் வேலைக்கு ஆகும் என்கிறார் தலைவர். கூட இருக்கும் அணிக்கே “கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் கொள்கையும் ஜெயிலில் இருக்கிறது” என்று மப்பில் மாற்றி பேசுகிறார். கொடியை இறக்குப்பா என்று அடிக்கடி அதட்டுகிறார்.

அரசியல் கோமாளியோ இந்தக் கட்சிக்கு எதற்கு முரசு சின்னம்? தேர்தல் ஆணையம் “பாட்டில்” சின்னம் கொடுத்திருக்கலாம் என்கிறார்.

எதிர் அணியோ இதை ஓயாமல் தங்களுடைய எல்லா தொலைக் காட்சிகளிலும் இந்தக் காமெடி பீசுகளையே காட்டி நொங்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரணியை சொல்ல ஒன்றுமில்லை. “இலவசங்களை அள்ளி வீசியிருக்கிறார்கள்”. ஏற்கனவே ராசா கைது குற்றப் பத்திரிகை என்று குடைந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா கேளிக்கை கூட்டணி அமைப்பிலேயே தொடங்கி விட்டது. அம்மா அவர் பங்குக்கு இலவசங்களில் “பவுண்செர்” போடுகிறார். இப்பொழுது குடும்பத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், ஒரு லட்சத்தி எழுபத்தி எட்டாயிரம் கோடி சுட்டு விட்டார் என்று ஒப்பாரி வைக்கிறார்.. சென்னையில் அம்மா எல்லா சீட்டுகளையும் வெல்ல தொண்டர்களின் உழைப்பு போறாது.

மொத்தத்தில் “மே பதிமூன்றாம் தேதி” எல்லோரும் எதிர் பார்க்கப்படும் நாள். அப்பொழுது யார் சிரிப்பரோ யார் அழுவாரோ தெரியாது.

இந்த முறை “பணநாயகம் வென்றது ஜனநாயகம் தோற்றது” போன்ற உளறல்கள் இருக்காது என நம்புவோம்.

2 comments:

  1. இந்த முறை “பணநாயகம் வென்றது ஜனநாயகம் தோற்றது” போன்ற உளறல்கள் இருக்காது என நம்புவோம்.


    ...... sure!

    ReplyDelete
  2. adithya channel thaan comedy la number one nu nenachaen!! but vijayakanth speech atha beat panniduchu!!!!!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.