Pages

Sunday, 10 April 2011

போடுங்கம்மா ஒட்டு

இரண்டு கட்சிகளும் தரும்



இலவசங்கள் தேடி வரும்


வளர்ச்சிகள் முடங்கி விடும்


சமுதாயம் சிதைந்து விடும்


மின்சார தட்டுப்பாட்டில்


க்ரைன்டரும் மிக்சியும்


கடைசிவரை வாரா


உழைப்பின் மூலதனம்


உறுதியுடன் உடன்வரும்


ஆடு மேய்க்க சொல்லி


சொந்தங்கள் உயர


சுயநலக் கட்சிகளின்


அரசாங்கங்கள் தேவையா?


பூப்பெய்தால் காசு


பிள்ளை பெற்றால் காசு


நின்றால் நிமிர்ந்தால்


நடந்தால் காசு


கணக்கு வைத்து


காசு பார்க்க


மடிக் கணினி.


அண்டை மாநில


சந்தைகளில் சகாய விலையில்


இலவசங்களின் அணிவகுப்பு


இல்லத்தரசனுக்கோ


இரண்டு நாள் சரக்கடிப்பு


சீர்தூக்கிப் பார்த்து


சிறப்பான ஒருவருக்கு


போடுங்கம்மா ஒட்டு

4 comments:

  1. அருமையாச் சொன்னீங்க ஆனா ஆருக்கு போடணும்னு இந்த மர மண்டைக்கு ஏரளிங்களே

    ReplyDelete
  2. மின்சார தட்டுப்பாட்டில்


    க்ரைன்டரும் மிக்சியும்

    .....ம்ம்ம்ம்..... மக்கள்தான் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.