Pages

Wednesday, 11 May 2011

கருத்து கந்தசாமிங்கோ................

மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் (Exit Poll) கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தபடியால் நேற்று சில கருத்துக் கணிப்புகள் வெளியாயின.


வடக்கத்தி தொலைக்காட்சிகள் தமிழ் நாட்டில் அம்மா கூட்டணி 112-130 இடங்களைப் பெறும் என்றும் ஐயா கூட்டணி 102-120 இடங்களைப் பெறும் என்றும் தலைப்பில் கூறிவிட்டு பட்டும் படாமல் போய் விட்டார்கள். அதே சமயத்தில் மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி 230 இடங்களை பிடிக்கும் என்று சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறினார்கள். கேரளத்தில் எண்களை தப்பாகப் போட்டு குழப்பினார்கள்.

சி.ஏன்.ஏன், சோ ராமசாமியிடம் கருத்துக் கேட்டு அம்மாதான் அடுத்த முதல்வர் என்று போயஸ் தோட்டத்திற்கும், கோட நாட்டிற்கும் குடை பிடித்தார்கள்.

ஹெட்லைன்ஸ் டுடே ஐயாதான் என்று கூறி நூற்று முப்பது வரை அள்ளி விடுவார் என்கிறார்கள்.

நக்கீரனோ தொகுதி வாரியாகப் பிரித்தது ஐயா கூட்டணி 134 என்று கூறி அம்மாவிற்கு 90 என்று விசுவாசம் காண்பித்துள்ளார்.

ஆக மொத்தம் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமானது அல்லது புறம்பானது என்பது வெள்ளிக்கிழமை மதியம் தெரிந்துவிடும்.

யார் வேண்டுமானாலும் வரட்டும், எப்படியும் எங்களுக்கு கிடைக்கும் “இலவசம்” கேரண்டி என்று மக்கள் அமைதிக் காக்கிறார்கள்.

எங்களுக்கு இப்பொழுதுள்ள ஒரே கவலை “டாஸ்மாக்” வெள்ளிக்கிழமை எப்பொழுது திறப்பார்கள்?.

யாரவது கணித்து சொல்லுங்கப்பு.

5 comments:

  1. nakkheeran says DMK
    http://www.my-poonga.blogspot.com/

    ReplyDelete
  2. தேர்தல் கணிப்பு லூட்டிகளின் நக்கல் சரியாகத்தான் இருக்குது:)

    ReplyDelete
  3. எங்களுக்கு இப்பொழுதுள்ள ஒரே கவலை “டாஸ்மாக்” வெள்ளிக்கிழமை எப்பொழுது திறப்பார்கள்?.

    ..... சரியா போச்சு! ம்ம்ம்ம்..... :-))))

    ReplyDelete
  4. எங்களுக்கு இப்பொழுதுள்ள ஒரே கவலை “டாஸ்மாக்” வெள்ளிக்கிழமை எப்பொழுது திறப்பார்கள்?.
    //

    ஹா.ஹா.....
    தீ மாறி இருக்கனுமுண்ணே.!!!.


    முடிஞ்சா.. வியாழக்கிழமையே வாங்கி வெச்சுக்குங்க.. :-)

    ReplyDelete
  5. avan avan vaangara kaasukku koovaraan. vidunga boss

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.