Pages

Saturday, 14 May 2011

கண்ணே கனி களி தின்ன ஆசையா?.................

வெற்றிக் களிப்பில்


திளைப்போம் என

சுற்றிக் களைத்த

உடன் பிறப்பே

இனி கேப்பைக் களி தின்ன

அணி திரண்டு நிற்போம்

கொடுத்த இலவசங்கள்

கூரை ஏறிக் காக்கும் என

படுத்திருந்து கண்ட கனவு

கடுப்பேற்றிப் போனதடா

வினை விதைத்தோம்

வினை அறுத்தோம்

கொட நாட்டில் படுத்தவரை

கோட்டையில் கொடி

ஏற்ற வைத்தோம்

குடும்பத்தை வளர்க்க

கூண்டோடு குனிந்தோம்

தமிழினம் என்று சொல்லி

தமிழர்களை அழித்தோம்

கூட இருந்து குனிய வைத்து

குமுறி எடுத்த கூட்டம்

கழட்டி விட்டு போகும் என

கனவிலும் நினையோம்

ராசா நீ அங்கே

கனி எங்கே?

குடும்பத்தினர்

குமுறி அடிக்க

களி கொண்டு அங்கே

கலந்து கொடுக்க

நான் இங்கே.

1 comment:

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.