Wednesday, 18 May 2011

முதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்

புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம் இல்லை மடல், அப்பப்போ தங்கத்தாரகை, தைர்யலட்சுமி, பொன்னகை துறந்த புன்னகை அரசி, அம்மா எல்லாம் போட்டுக்கோங்க.


உங்களை மறுபடியும் மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு நீங்க அப்படியே நேர்மையானவங்க, தமிழ் நாட்டை தங்க மாநிலமா ஆக்குவிங்க, விலைவாசி எல்லாம் அப்படியே குழி தோண்டி இறங்கிவிடும் என்று நம்பிக்கையில் அல்ல.

போன ஆட்சி அடிச்ச கூத்து, பத்திரிகைகள் எடுத்துக் கூறியும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் அதற்கு சாதிச் சாயம் பூசி மழுப்பியதைக் கண்டு மக்கள் கடுப்பானார்கள்.

குடும்பத்தோடு அடித்த கொள்ளை, முதல் பெண்டாட்டி, மக்கள், வப்பாட்டி, மகள் என்று போட்ட ஆட்டம் அவர்களுக்கு ஆப்பாகி உங்களுக்கு டாப்பாகிவிட்டது.

அது போகட்டும் அத்த விடுங்க.

ஆட்சிக்கு வந்தவுடனே தலைமை செயலகத்தை கோட்டைக்கு மாற்றி வீண் செலவில் தொடங்குகிறீர்கள். ஓட்டுப் போட்ட மக்கள் இப்பொழுது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

உர ஊழலில் ஆரம்பித்து கைதுப் படலம் தொடங்கியிருக்கிறீர்கள், இது அப்படியே முன்னாள் அமைச்சர் வரை போகும் என்பதில் தோல்வியடைந்தவர்கள் நடுங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் மக்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது இதையல்ல.

அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, தடையில்லா மின்சாரம் கொடுத்தால், எங்களுக்கு வேண்டியதை நாங்களே சம்பாதித்து டாஸ்மாக்கில் தண்ணியடித்து மட்டையாகி இருப்போம், அடுத்த தேர்தல் வரும் வரை.

இப்படிக்கு,

அடுத்த தேர்தல் வரும் வரை போட்டதை தின்று, டாஸ்மாக் வாசலில் கடை திறக்க தவமிருக்கும் டகால்டி.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

geethappriyan said...

நண்பர் கும்மாச்சி
மிக அவசியமான பதிவு,நானும் எனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்,மே18 இன அழிப்பு நாளுக்கு ஒரு இடுகை போட்டு எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,நன்றி
http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_17.html

Chitra said...

எங்களுக்கு வேண்டியதை நாங்களே சம்பாதித்து டாஸ்மாக்கில் தண்ணியடித்து மட்டையாகி இருப்போம், அடுத்த தேர்தல் வரும் வரை.



...... நல்ல லட்சியம் சாமி..... :-(

RayJaguar said...

super

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.