Tuesday, 24 May 2011

குனிய வைத்து குத்திட்டாங்க தலைவரே

சென்னை: கனிமொழி விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருக்க ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.


அப்போ எதுக்கு தலைவரே சி.பி. ஐ. ஆறாம் நம்பர் செல்லில் வைத்து குடையறாங்க.

இதுதொடர்பாக தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

என்னைப் பற்றியும், என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கைப் பற்றியும் நேரம் வரும்போதெல்லாம் பல முறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லி இருக்கிறேன்.

நீங்க சொல்ல வேண்டாம் தலைவரே, அதான் ஊரு மொத்தமும் பேச்சு.

நான் உயிரினும் மேலாக கருதும் நமது கழகம், பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்?

தேர்தல் முடிவு நாளில் முடிவு அறிவிப்பு தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே உங்க உடன் பிறப்புங்க, கெட்ட வார்த்தைகளில் யார் காரணமோ அவங்க பேரை சொல்லி வசை பாடிகிட்டே அறிவாலயத்திலிருந்து கிளம்பிட்டாங்க. அதனால் காரணம் நீங்க சொல்ல வேண்டாம்.

தமிழ்நாட்டிற்கென்றே தனியான "ஜபர்தஸ்து''களை, ஜனநாயக விரோதச்செயல்களை, சாட்டைகளாக கொண்டு, சர்வாதிகார "பாட்டை'' வகுத்துக்கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.

அதான் தலைவரே அடிச்ச துட்டை கொடுக்க விடாம பண்ணிட்டாங்க அவாள் கூட்டம்.

நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும், அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டும், சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

ஆமாம் தலைவரே, ஆனால் அதையெல்லாம் தான் உங்க குடும்பத்தினர் செழிக்க காங்கிரசிடம் அடகு வைத்துவிட்டீர்களே, அதைப்பற்றி இப்பொழுது எதுக்கு பேச்சு.

அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டு காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த காலகட்டங்களில் எதுவுமே சம்பாதிக்க வில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் ஆம்; சம்பாதித்தேன், "தமிழுக்கு தொண்டு செய்வோன்'', "தமிழ் வாழ தலையும் கொடுக்கத்துணிவோன்'' என்ற பட்டப்பெயர்களை, புகழுரைகளை நிரம்ப சம்பாதித்தேன்.

வேட்பாளர் மனுவில் நாற்பத்தியேழு கோடி போட்டதை மறந்துட்டிங்க தலைவரே.

"சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி - 18-10-2005 அன்று "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் - 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

தலைவரே கணக்குல தப்பு இருக்குது. இன்னாது இரண்டு கோடிதான் கனிமொழிக்கா? ராசாத்தி அம்மா இத்த படிக்கப் போறாங்க.


என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர்கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் "தர்ப்பைப் புல்'' முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

“தர்ப்பைப்புல்” என்ற இடத்தில் சூட்சுமம் வைத்த நீவிர், முதலிலேயே உஷாரா இருந்திருக்கணும். தலைவா இந்திய ஜனத்தொகையில் மூன்று விழுக்காடு இருந்து கொண்டு ரொம்ப படுத்தரானுங்க. குமரி முதல் கொடுமுடி வரை உங்க கதைய நாரடிச்சுட்டானுங்க.

ஆனால் உங்க உடன் பிறப்புங்க அப்படி நினைக்கவில்லை. நீங்க உங்க குடும்பத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் ரொம்ப குனிந்து கட்சியை அடகு வைத்து, உங்க தலையே எங்கே என்று தேட முடியவில்லை. முதலில் தலைய வெளிய எடுத்து அண்ணா பெரியாரிடம் கற்ற தன் மானம் எங்கே? என்று தேடுங்க, அடுத்த முறை ஆட்சிக்கு வரலாம்.

தலைவரே கடைசியா ஒன்னு, உங்களை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள், தமிழகத்தை காட்டாட்சியிலிருந்து காப்பாற்றி, காட்டேரியிடம் கொடுத்த தன்மான தலைவர் நீங்க தான்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

geethappriyan said...

பொய் சொல்லுற நாக்கை தர்ப்பை புல்லை வச்சே பொசுக்கனும்,என்ன நாஞ்சொல்றது?

கும்மாச்சி said...

கீதப்ரியன் நன்னா சொன்னேள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா..
உப்பை தின்னா தண்ணிதான் பாஸ்..

கும்மாச்சி said...

அது சரி "ரா" வா அடிச்சா எரியத்தானே செய்யும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.