Pages

Friday, 29 July 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 1


நான் விரும்பிப் படிக்கும் பதிவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்கள் என் பார்வையில் ஒரு அலசல், இந்தத் தொடரை வாரம் ஒரு பதிவராக தொடர உத்தேசம்.

 முதலில் வந்தேமாதரம் சசிகுமார் (http://www.vandhemadharam.com/)

இவருடைய பதிவுகள் என்னைப் போன்ற கணினி அறிவு இல்லாத ஞான சூன்யங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எனக்கு கணினியில் தெரிந்தது ஹார்ட்வேர், சாப்ட்வேர், மற்றும் அண்டர்வேர் மட்டுமே. இவருடைய பதிவுகளைப் படித்து என் வலைப்பூவில் ஓரளவுக்கு மாற்றங்கள் செய்திருக்கிறேன். இப்பொழுதும் எனது வலைப்பூவில் பிரச்சினை என்றால் நான் இவர் வலைப்பூவை மேய்ந்து எப்படியாவது என் பிரச்சனைக்கு உரிய இடுகையை கண்டு பிடித்து சரி செய்துவிடுவேன்.
சமீபத்தில் பிளாக்கர் தளத்தில் கூகிள் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்திருக்கிறது. அதற்கு இவர் படம் வரைந்து பாகங்களை குறித்து விளக்கம் அளித்த விதம் சூப்பர்.

இவருடைய பெட்டகங்களை ஆராய்ந்தால் நமக்கு பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்.
இதை தவிர இவர் இன்னும் பயனுள்ள தகவல்களை தருகிறார். சுஜாதாவின் பல சிறுகதைகளை பி.டி.எப் கோப்பில் அளித்திருக்கிறார். திரைப்படங்களை தரையிறக்கம் செய்ய அணுக வேண்டிய தளங்களை கொடுக்கிறார். இன்னும் இவர் தளங்களில் நிறைய பிரிவுகளில் நமக்கு கணினி சம்பத்தப் பட்ட அறிவுரைகளை அள்ளித்தருகிறார்.

இவருடைய கட்டுரைகளில் ஒன்று ஆபாச வலை பதிவர்களுக்கு எச்சரிக்கை என்ற தலைப்பில் ஆபாச எழுத்துக்களின் விளைவுகளை கூறும் விதம் சமுதாய நற்சிந்தனைக்கு சான்று.
மொத்தத்தில் நான் விரும்பி படிக்கும் ஒரு வலைப்பூ.

இவருடைய “டுடே லொள்ளு” சூப்பரோ சூப்பர்.
காணாமல் போன பதிவர்.

இந்த தலைப்பிலும் வாரம் ஒருவரை இடுவதாக எண்ணம்.

நைஜீரியா ராகவன்.

நான் வலைப்பூ தொடங்கிய காலத்தில் இவர் மிகவும் பிரபலம். இவருடைய துபாய் விஜயம் இரண்டு மூன்று வாரங்கள் வந்தது. எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இட்டு ஊக்குவிப்பார். இவர் தமிழ்மணத்தில் வாரம் ஒரு நட்சத்திரத்தில் வந்ததாக நியாபகம். தற்பொழுது இவருடைய பதிவுகளை பார்க்க முடியவில்லை. இவர் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறாரா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.



..................சூப்பர் ஸ்டார் பதிவர்கள் தொடரும்


19 comments:

  1. நல்லா இருக்குங்க !!!
    தொடரட்டும் உங்கள் சேவை !!!

    ReplyDelete
  2. சசிக்குமார் உண்மையில் பிளாக்கர்களின் வரபிசாதம்தான்...

    புதிய முற்ச்சி...

    ReplyDelete
  3. தொடருங்கள்...

    ReplyDelete
  4. நண்பர்களே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. நல்ல முயற்சி... தொடருங்கள்

    ReplyDelete
  6. சசி ..கணினி அறிவு குறைவான எல்லாருக்கும் சொல்லித்தருவார்..

    ReplyDelete
  7. நன்றி நண்பர் கும்மாச்சி அவர்களே தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. சசிகுமார் உங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  9. en paeyarai poduveengala??????

    ReplyDelete
  10. அருமையான தொடக்கம்

    ReplyDelete
  11. // நைஜீரியா ராகவன் //

    ragavan anna is not writing even comments now, you can find him often in google buz. but he is reading everything.

    ReplyDelete
  12. சசிகுமாரின் பணி பாராட்டப்படவேண்டியது.. அவரோட தளத்துக்குப்போனாலே வலைப்பூ சம்பந்தமா எக்கச்சக்க விஷயங்களைத்தெரிஞ்சுக்கலாம்.

    ReplyDelete
  13. வணக்கம் சகோ,
    வித்தியாசமான முயற்சி, உங்களைப் போலவே சசியின் டுடே லொள்ளிற்கு நானும் ரசிகன்.
    தொடர்ந்தும் ஜமாயுங்கள்.

    ReplyDelete
  14. என் பெயரை தேடினேன் சசிகுமார்...எமாத்திடீங்களே....பேசாம நாமே சூப்பர் ஸ்டாருன்னு நம்ம பக்கத்திலே போட்டுக்க வேண்டியதுதான் போல...சட்டியிலே இருந்தா தான் அகப்பையிலே வரும்னு சும்மாவா சொன்னாங்க...

    ReplyDelete
  15. பதிவாளர்களுக்கான விருது என்றே இதை நான் நினைக்கிறேன்.. தொடரட்டும் உங்கள் ஊக்கம்..
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. நைஜீரியா ராகவன் சென்னை ராகவன் ஆகி விட்டார்.

    ReplyDelete
  17. நண்பர் சசி அவர்களின் பதிவுகள் அனைத்தும் பதிய பதிவர்களுக்கு வழிகாட்டல்கள்தான்

    பயனடைந்த நான் உட்பட..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.