Monday, 1 August 2011

கலக்கல் காக்டெயில்-36


ரொம்பத்தான் ஆடுறாங்க

அம்மா ரொம்ப மாறிட்டாக இனி தமிழ் நாட்டுக்கு நல்ல காலம்தான், சுவிட்ச் போட்டா விளக்கெரியும், பேன் சுத்தும் அப்படின்னு அய்யாக்கு கட்டாய ஒய்வு கொடுத்த தமிழக மக்கள் இப்போ மௌனமா நொந்து நூடூல்ஸ் ஆகிட்டு இருக்காங்க. சமச்சீர் கல்விய கையிலெடுத்து ஒரு வழி செய்து ஆசிரியர்கள் எல்லாம் மிரட்டப் பட்டு வாய் பூட்டு போட்டிருப்பதாக விகடனார் புலம்புகிறார். உயர்நீதி மன்றத்துக்கு சமச்சீர் கல்வி ஆய்வுக் குழு என்று பள்ளியில் வேலை  செய்யும் ஆயா, பஞ்சர் ஒற்றவனை எல்லாம் வைத்து ஒரு கமிஷன் போட்டு ஒரு டுபாகூர் அறிக்கை கொடுத்து பிலிம் காட்டினாக. உச்ச நீதி மன்றம் என்ன அப்பாடக்கரா “நான் என்று போன ஆட்சியில் கொண்டு வந்ததை எப்படியும் ஒத்துக்கமாட்டேன்” என்று மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிக்கிட்டு இருக்காங்க.
இதை தவிர எதிரியை ஒடுக்க தினம் ஒரு அரெஸ்ட், சிறையில் அடைப்புன்னு செய்தி  வந்துக்கிட்டே இருக்கு. அதிலும் சில போலிஸ்காரங்க பழைய விசுவாசத்தில் சல்யுட் அடிச்சாங்கன்னு அத்திப்பட்டுக்கும் ஆளில்லா காட்டுக்கும் மாற்றிக்கிட்டு இருக்காங்க. அரசாங்க இயந்திரம் பழி வாங்குவதற்காக முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

ஐயா எதிர் கட்சி தலைவர் புரட்சி கலைஞரே
(கலையில் என்ன புரட்சி செஞ்சீங்கன்னு மக்க மண்டை காஞ்சிகிட்டு இருக்காங்க)  அப்படியே சட்டசபையில் அம்மா முன் பம்மிக்கிட்டு இருங்க, குரல் உட்டீங்கன்னா உங்களுக்கும் இதே கதிதான்.


வெளங்கிடும் தமிழகம்.

சூப்பர் ஸ்டார் பதிவர்கள்

சூப்பர் ஸ்டார் பதிவர்கள் என்று ஒரு புதிய தொடர் தொடங்கியதற்கு நல்ல வரவேற்பு. இதை வாரம் ஒரு முறை எனக்குப் பிடித்த ப்லோகர் பற்றி எழுதுவதாக இருக்கிறேன். வலை பூவில் எத்துனை திறமைகளை புதைந்து கிடக்கிறது. நல்ல எழுத்துக்களை பாராட்டும் பொழுது கிடைக்கும் இன்பமே தனி. அதற்கு பிரத்தியேக காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பாராட்டுபவன் பாராட்டு பெறுபவர் இருவருமே மகிழ்கிறார்கள்.

ரசித்த கவிதை   

வீழ்வதில் என்ன தாழ்வு...!

உணர்வோடு வாழ்ந்தால்
வழியெங்கும் பூக்காடு
உணர்ச்சியற்று வீழ்ந்தால்
படுக்கையே சாக்காடு
வீழ்வதில் என்ன தாழ்வு
வீழ்ந்தே கிடப்பதுதான் தாழ்வு
உயிரோடு வாழ்வதுதான் வாழ்வா உலகில் ?
உயிர்ப்போடு வாழ்வதுதான் வாழ்வு ....!

----------------அனிஸ்கா-



இந்த வார நகைச்சுவை

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தேர்தலில், செலவுகள் என்பது இனி இருக்கக் கூடாது. இனி நாங்கள், "கட்சியினருக்கு ஓட்டுச் சாவடி செலவுக்கு பணம் கொடுக்கப் போவதில்லை' எனவும், "வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம்' எனவும், அனைத்து கட்சிகளும் உறுதியேற்று, அறிக்கை வெளியிட வேண்டும்.

 அப்போ நீங்க ஒவ்வொரு தேர்தலிலும் பணம்  கொடுத்ததை ஒத்துக்கிறீங்க, உங்க தைர்யம் யாருக்கு வரும் மருத்துவர் ஐயா.?


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

RayJaguar said...

kalakkal cocktail nu pottutu intha vaara jolla kaanomae!!!!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

Chitra said...

சமச் சீர் கல்வி குறித்து கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு தெரியாது. பதிவில் சொல்லப்பட்டு இருக்கும் மற்ற விஷயங்கள், சூப்பர். நல்ல கவிதையையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

கத்தார் சீனு said...

காக்டெயில் கலக்கல் !!!
அப்புறம் kummacchionline.com நல்லா இருக்கு !!!

நெல்லி. மூர்த்தி said...

"அம்மா ரொம்ப மாறிட்டாக இனி தமிழ் நாட்டுக்கு நல்ல காலம்தான், சுவிட்ச் போட்டா விளக்கெரியும், பேன் சுத்தும் " -
"பதிவுலகத்திலும் அதிலும் முந்தைய ஜெயாவின் ஆட்சிக்காலத்தில் ஓட்டுப் போடும் வயதை எட்டாது முதல் முறையாகவோ அல்லது இரண்டாவது முறையாக வாக்களிக்க வயதேர்ந்த சிங்கங்கள் ஜெவே எதிர்பாராத அளவிற்கு அப்படி ஒரு பில்ட் அப்பை கொடுத்தார்கள். எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ தனிப் பெரும்பான்மை கிடைக்கலாம். ஆனால், மிருக பலம் கிடைத்தால் இப்படித்தான். எது எப்படியோ ஒவ்வொரு தேர்தலில் தண்டிக்கப்படுவதும் அல்லது ஏமாறுவதும் வாக்காளர்களாகிய நாம் தான். இதில் குறைவாக எவர் செய்வர் என்று தான் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கும்மாச்சி said...

சித்ரா அப்படிக்கா போயிட்டு திரும்ப இப்படிக்கா வந்துட்டீங்களா? வருக வந்து வழக்கம்போல் கலக்குங்க.

கும்மாச்சி said...

கத்தார் சீனு வருகைக்கு நன்றி, பதினைந்தாம் தேதி சி.ஓ.பியில் சிந்திப்போம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.