Sunday, 7 August 2011

கலக்கல் காக்டெயில்-37


அம்மா லொள் லொள், ஆற்காட்டார் லொள் லொள்..................

நேற்று முழுதினமும் மருத்துவமனையில் கழிக்க நேர்ந்தது, மந்தைவெளியில் உள்ள பிரபல மருத்துவமனையில் உறவினரின் அறுவை சிகிச்சைக்காக இருபத்திநான்கு மணிநேரம் அங்கேயே வாசம். இரவு பத்துமணிக்கு மேல் சிறிது தூங்கலாம் என்று படுத்தால், ரங்குஸ்கிங்க ஒரு பாடு என்னை மேய்ந்துவிட்டு அங்கங்கே விழுப்புண்களை ஏற்படுத்திப் படுத்தியது. அதையும் மீறி தூக்கம் வந்த நேரம் மின்சாரவாரியம் தன் கை வரிசையை காட்டியது. அருகே இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த அல்சேஷியனோ, டாபர்மேனோ, ஜெர்மன் ஷெப்பர்டோ ஏதோ ஒரு பைரவர் குளிர்சாதனம் போன கடுப்பில் “அம்மா லொள், ஆட்சி மாற்றம் லொள், ஆற்காட்டார் லொள், நத்தம் லொள்லொள்” என்று முன்னூறு டெசிபல் குரலில் குரைத்து காலை நான்கு மணிவரை உறங்க விடவில்லை. அதையும் தாண்டி உறங்கிய நேரம் நர்சம்மா கதவைத் தட்டி நீங்க டிஸ்சார்ஜ் ஆகிட்டிங்க போகலாம் என்று துரத்திவிட்டார்கள். சரி என்று வீட்டுக்கு வந்து மவனே இப்போ எவனும் என்னை தொந்தரவு பண்ண முடியாது என்று படுத்தால் மீண்டும் மின்சாரவாரியம் ஆப்பு வச்சிட்டாங்க. வாழ்க ஆட்சி மாற்றம்.

இம்மாம் சொத்தா......................

தலைவர் குடும்பத்து சொத்து கணக்கை நம்ம ஜார்ஜ் பெர்நாண்டேஸ் பத்திரிகையில் அக்கு வேறு ஆணி வேறாக போட்டு அலசியிருக்கிறார்கள். தலைவா இது ஒன்னும் தொண்டனுக்கு தெரியாததில்லை. அதனால்தான் இந்த தேர்தலில் நல்லாவே உள் குத்து குத்தினாக. பார்த்து இனிமேலாவது சூதானமா நடந்துக்குங்க. முரசொலியில் புதிய கவிதை ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க.

தலீவா உமக்கு சுக்கிரதசை ------தில நல்லா அடிச்சிக்கிட்டிருக்கு. எவனாவது மொட்ட பாப்பான பாருங்க, செவப்புத் துண்டை போட சொல்லுவான். மஞ்சள் துண்டை மாற்ற சொல்லுவானுங்க.

ரசித்த கவிதை

இருப்பு..:-
***************

மலைகளில்., விளம்பர
பெயிண்ட் அடித்தல்.,
பாறைகளில், பீச் மணலில்
முகங்களை வடித்தல்.,
மரங்களிலும், பேருந்துகளிலும்
பெயர்களைச் செதுக்குதல்.,
சரித்திரச் சின்னங்களில்
கையெழுத்துப் பொரித்தல்.,
வானொலிப்பாடல்களுக்கு
பத்ரிக்கைகளுக்கு கடிதம் எழுதுதல்
தொலைக்காட்சி பாடல்களூடே
பெயரோடு மெசேஜ் அனுப்புதல்.,
ரயில் கழிவறைகளில் கூட
கிறுக்கி வைத்தல் என
மனித சமூகம்
பிரகடனப்படுத்திக்
கொண்டே இருக்கிறது..
கல்வெட்டிலோ., காற்றிலோ.,
தன்னின் இருப்பை..

---------------தேனம்மை லக்ஷ்மன்  

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

கோகுல் said...

ஒரே லொள் லொள் தான்.
ஹா ஹா துண்டு,துண்டு.

settaikkaran said...

//“அம்மா லொள், ஆட்சி மாற்றம் லொள், ஆற்காட்டார் லொள், நத்தம் லொள்லொள்//

:-)))))

Advocate P.R.Jayarajan said...

http://sattaparvai.blogspot.in/2014/10/2014.html
Please visit sir

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.