அன்னா
ஹசாரேவும் அவிழ்ந்த கோவணங்களும்
இந்த
புதிய “இந்தியன் தாத்தா” லோக்பாலை கையில் எடுத்துக் கொண்டு
நாளொருமேனி பொழுதொரு வண்ணமுமாக, மத்திய
அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க. மத்திய அமைச்சர்கள் மாறி மாறி
இவருமட்டும் யோக்கியமா, உச்ச
நீதிமன்றம் ஏதோ ஒரு அறிக்கையில் அன்னா பெயரை குறிப்பிட இவர் வந்துட்டார்பா என்று
தெருவுக்கு தெரு கூவிக்கொண்டு இருக்கிறார்கள். இவரின் உண்ணாவிரதத்தை தடுக்க முயன்ற
மத்திய அரசு எவ்வளவு முயன்று பார்த்து கடைசியில் அர்ரெஸ்ட் அஸ்திரத்தை
உபயோகப்படுத்தி தாற்காலிகமாக
நிறுத்தியிருக்கிறார்கள். ஊழலை எதிர்க்கிறேன் என்று அவரவர்
கிளம்பியிருக்கிறார்கள். இதெல்லாம் வேலைக்கு ஆவாது. ஒரு பத்தாயிரம் “இந்தியன்
தாத்தா”வை க்ளோனிங் செய்து
எல்லா மாநிலத்திலும் விட்டுவிடவேண்டும் அப்புறம் ஊழல என்ற வார்த்தையே இருக்காது என்று
சங்கர் ஐடியா கொடுப்பார்.
துரைமுருகன் பாடி லாங்க்வேஜ் சரியில்லை.................
சட்டசபையில் என்னத்தான் நடக்குதுன்னு பார்த்தா, தினமும் வெளிநடப்பு ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் கேலி செய்வது என்று போய்க்கொண்டிருக்கிறது. இதில் இரண்டு கட்சிகளும் விதிவிலக்கல்ல. இந்த முறை துரைமுருகன் உட்காரும் தோரணை சரியில்லை என்னை கிண்டல் செய்வது போல் இருக்கிறது என்று ஒரு அமைச்சர் சொல்லுகிறார், சபாநாயகர் “சரியா உட்கார்பா” என்கிறார். உடனே சமத்துவ மக்கள் கட்சி தானைதலைவர் சுப்ரீம் ஸ்டார் அவங்க கட்சி தலைவரே அப்படித்தான் உட்கார்வார் என்கிறார். என்ன ஒரு விவாதம். உடுங்கப்பா அவங்களுக்கு “உட்காரும் இடத்தில்” என்ன கஷ்டமோ.
ஏதாவது மக்கள்நல பிரச்சினையை எடுத்து விவாதம் பண்ணுங்கப்பு. இப்பெல்லாம் நர்சரி பள்ளிகளிலேயே டீச்சர் அவள் கிள்ளிட்டா, அடிச்சிட்டா, பலப்பம் பிடுங்கிட்டா, குரங்கு மூஞ்சி காமிச்சா போன்ற முறையீடுகள் வருவதில்லையாம். சட்டசபை எப்போது வயசுக்கு வரும் என்று தெரியவில்லை.
ரசித்த கவிதை
இயற்கை
புகைவண்டி கூவினபடி
போய்க் கொண்டிருக்கிறது.
ஏறிட்டுப் கூடப் பார்க்கவில்லை
நடவு செய்ய
வயலில் குனிந்திருந்தவர்கள்.
அதிர்வடங்கும் வரை
தலைதூக்கி நகராமல் நின்றது
சோற்றுக் கற்றாழைப் புதரில்
ஒரு சிறு பாம்பு.
புல்லின் சிலிர்ப்பில்
மாற்றமே இல்லை
கல்யாண்ஜி
மரண
மொக்கை
டாஸ்மாக் வாசலில் இருக்கும் குப்பைதொட்டி அருகே படுத்திருக்கும்
நபர் தெளிந்தவுடன் எழுந்து எதிரில் தள்ளாடி வருபவரிடம்
ஏம்பா மேலே கீதே அது சூரியனா சந்திரனா.
போடா பாடு என்னாண்ட கேக்குறியே நானே ஊருக்கு
புச்சு.
பன்ச்
டயலாக்
“நான்
சாமிக்கிட்டேதான் சாந்தமா இருப்பேன் சாக்க்க்க்க்கடை கிட்டே இல்லை”.
சாக்கடை
கிட்டேயும் சாந்தமா தான் இருக்கணும் மீறி கையை வச்சே மவனே கப்பு ஆளை
அம்பேலாக்கிடும்.
இந்தவார
ஜொள்ளு
இன்ட்லியில் விழும் ஓட்டுக்கள் சமீபத்தில் மிகவும் குறைந்து விட்டது.
ஆதலால் வாக்காளப் பெருமக்களே, பெரியோர்களே, பதிவர்களே வோட்டை (ஓங்கி) நல்லா அழுத்தமா குத்துங்க ப்ளீஸ்.
8 comments:
ம் ... nice
vijay ya samma kalaai.... i give my full support for anna hazare
மூக்கை பொத்திக்கொண்டே வாசித்தேன்...
துரைமுருகன் காமடி,குசும்பில் வல்லவர்,அதுவும் உடல் அசைவுகளால் கிண்டல் செய்கிறார் என சபாநாயகரிடம் புகார்.நீங்க சொல்றது போல ஸ்கூலில் ந்டப்பது போல் சட்டசபையில் ந்டப்பது வேடிக்கையான சிரிப்பு.வேறென்ன சொல்ல..
இண்ட்லியில் பிரிவை தேர்ந்தெடுக்கும்போது நகைச்சுவை, அல்லது சினிமா செலக்ட் பண்ணூனா 5 மணி நேரத்தில் 24 ஓட்டுக்கள் உறுதி..
செந்தில் உங்கள் அருமையான டிப்சுக்கு நன்றி.
KalakkalKalakkal
Super post boss
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.