Pages

Sunday, 28 August 2011

கலக்கல் காக்டெயில் -39


ஜன்லோக்பால வுட்டுட்டு இனி அமலா பால பாருங்க


ஒரு வழியாக மத்திய அரசு இறங்கிவந்து பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தவுடன் அன்னா ஹசாரே இன்று காலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். மத்திய அரசு கொண்டு வரப்போகும் மசோதாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எந்த விதத்தில் நடைமுறைப்படுத்தமுடியும் என்பது போக போக தான் தெரியும். ஆனால் ஜன்லோக்பாலில் பிரதமரையும், தலைமை நீதிபதியையும் சேர்க்கும் விஷயம் வரவேற்கத்தக்கதுதான் ஆனால் அதனால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என்ற கூற்று எப்படி என்று தெரியவில்லை?. தவறாக ஊழல புகார் அளிப்பவரும் தண்டனைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதும் நல்ல விஷயம்தான்.

இனி ஊடகங்கள் லோக்பாலை விட்டுவிட்டு அமலா பாலை பார்க்கப் போகலாம்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. என்றார் நடிகை நமீதா.

............................ பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நமீதா, அன்னா ஹசாரே மானாட மயிலாட வந்து கலந்துகொண்டு குத்தாட்டம் போட்டால் ஊழல் ஒழிந்து விடும் மச்சான்ஸ் என்றார்.  

 தமிழக சட்ட சபை நடவடிக்கைகள்

 தமிழக சட்டசபை நடவடிக்கைகளை போலிமேர் தொலைக்காட்சியிலும், ஜெயா தொலைக் காட்சியிலும் தினமும் காட்டுகிறார்கள். இந்த அவையின் நோக்கம் ஒன்று தெளிவாக தெரிகிறது. தி.மு.கவை எப்படியாவது வெளியேற்றிவிட்டு முதலமைச்சர் கடந்த ஆட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் தவறு என்று சொல்லி அவைக்குறிப்பில் எற்றுவதே தலையாய கடமை போல் செயல்படுகிறார்.

நூறாவது நாள் கொண்டாட்டம் சட்டசபையில் கொஞ்சம்  ஓவர்தான்.



அன்னா ஹசாரேவுக்கு தமிழ் திரையுலகம் ஆதரவு

 தமிழ் திரையுலகம் ஜன்லோக்பாலுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்ல கேலிக்கூத்து, முதலில் வருமான வரியை எல்லா நடிகர்களும் ஒழுங்கா கட்டினாலே போதும், இவர்கள் பங்கிற்கு நாட்டுக்கு நல்லது செய்யலாம்.

 மொக்கை


"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"

"மாமூலன்!"
 
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு....
 

ஜொள்ளு

10 comments:

  1. அருமையான ஜொள்ளு!!!!!

    ReplyDelete
  2. விக்ரம் எப்புடி "உள்ள" போனாரு?(வெட்டித் தானே ஒட்டியிருக்கீங்க?)

    ReplyDelete
  3. //மத்திய அரசு கொண்டு வரப்போகும் மசோதாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எந்த விதத்தில் நடைமுறைப்படுத்தமுடியும் என்பது போக போக தான் தெரியும்.//

    முதலில் சட்டம் இயற்றப்பட்டு, அமலுக்கு வரணுமே! :-)

    //ஆனால் ஜன்லோக்பாலில் பிரதமரையும், தலைமை நீதிபதியையும் சேர்க்கும் விஷயம் வரவேற்கத்தக்கதுதான்//

    இல்லை. பிரதமர் இல்லை; நீதித்துறையும் இல்லை! அண்ணாவே வேண்டாம் என்று சொல்லியாச்சு! :-)

    //நூறாவது நாள் கொண்டாட்டம் சட்டசபையில் கொஞ்சம் ஓவர்தான்.//

    சரித்திரம் திரும்புகிறது! :-))

    //தமிழ் திரையுலகம் ஜன்லோக்பாலுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்ல கேலிக்கூத்து//

    பத்தோட பதினொண்ணாவது கேலிக்கூத்து!

    ஜொள்ளு- சூப்பர்!

    ReplyDelete
  4. மாப்ள கலக்கல் காக்டைல்யா!

    ReplyDelete
  5. இனிமை....
    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
    ரெவெரி...

    ReplyDelete
  6. அருமையான ஜொள்ளுப் பதிவு .நன்றி சகோ
    பகிர்வுக்கு தமிழ்மணம் 4 போட்டாச்சு ......

    ReplyDelete
  7. // பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நமீதா, அன்னா ஹசாரே மானாட மயிலாட வந்து கலந்துகொண்டு குத்தாட்டம் போட்டால் ஊழல் ஒழிந்து விடும் மச்சான்ஸ் என்றார். //

    செம நக்கல்...

    ReplyDelete
  8. இந்தமுறை சரியா ஜொள்ளு விடலை...

    ReplyDelete
  9. அமலா பால் தெய்வத்திருமகன் கையில்
    இந்த பால் வேணாம். வேற பால் வேணும்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.