Monday, 29 August 2011

மீண்டும் வள்ளி


இந்த சிக்னல் ஒரு பெரிய தலைவலி. தி. நகரிலிருந்து அண்ணா சாலையை கடக்க ஒரு இருபது நிமிட நேரமாவது ஆகிவிடும். அங்கிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு அந்த இடம்தான் வசூல் அமோகமாக நடக்குமிடம். நான்கு முறை கிரீன் சிக்னல் விழுந்தாகிவிட்டது இன்னும் கடக்க முடியவில்லை. அப்பொழுதுதான் அவளை பார்த்தேன் கையில் ஒரு குழந்தையை மார்போடு அனைத்து காரின் கண்ணாடியை தட்டி பிச்சை கேட்டாள். அவளை அடையாளம் கண்டுகொண்டேன். அவளை அந்த நிலையில் பார்த்ததிலிருந்து எனக்கு அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. மனைவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவள் ஏழு எட்டு வருடம் முன்பு இருந்த வள்ளியை நினைவு கூர்ந்தாள்.

கோடை மழை ஒரு அரை மணி அடித்து விட்டு ஓய்ந்திருந்தது. மின்சாரம் தடைபட்டு போய் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்தேன். வெளியில் லாரி சத்தம் கேட்டது. வெளி விளக்கை போட்டு பார்த்தேன். என் வீட்டு வாசலில் மணல் லாரி வந்து மணலை இறக்கிக் கொண்டிருந்தார்கள். எதிர் வீட்டு காலி மனையில் கவுண்டர் வீடு கட்டப் போகிறது உறுதியாக விட்டது. ஒரு நான்கு மாதம் முன்புதான் வீடு கட்டப் போவதாக சொன்னார். தண்ணீர் உங்கள் வீட்டில் தான் எடுத்துக் கொள்ளவேண்டும் நீங்க பெரிய மனசு பண்ணவேண்டும் என்றார். அதனால் என்ன எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

அடுத்த நாள் காலையில் இரண்டு பெண்கள் கைக்குழந்தைகளுடன் மணலில் அமர்ந்திருந்தார்கள். கூட இரண்டு; ஆண்களும் ஒரு பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியும் இருந்தார்கள். அந்த பெண்கள் குழந்தைகள் பசி ஆறியவுடன் ஆடையை சரி செய்து கொண்டு குழந்தைகளை அந்த சிறுமியிடம் ஒப்படைத்துவிட்டு அந்த ஆண்களுடன் கடக்காலுக்கு பள்ளம் தோண்ட சென்று விட்டார்கள். அந்த சிறுமி குழந்தைகளை கவனித்துக் கொண்டு அழுதால் அவர்கள் தாயிடம் ஒப்படைத்துவிட்டு பிறகு அவர்களை தூங்க தூளியிலிட்டு தூங்க செய்வாள். மிகவும் சூட்டிகையான சிறுமி. என் மனைவி அவளின் பொறுப்புணர்ச்சியை கண்டு வியந்தாள். அவர்களுடன் பேச்சு கொடுத்ததில் அந்த சிறுமியின் பெயர் வள்ளி என்றும் அவள் ஒரு அநாதை என்றும் தெரிந்து கொண்டோம். அந்த வேலை செய்யும் சித்தாள்கள் இந்தப் பெண்ணை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுடன் தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். மாலை வேலை முடிந்தவுடன் அவர்கள் எங்கள் வீட்டு பின்புறம் உள்ள கிணற்றில் நீர் இறைத்து குளித்துவிட்டு அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று விடுவார்கள்.

கிட்டத்தட்ட அந்த வீடை கட்டி முடிக்க ஒரு வருடம் ஆகியது. இந்த ஒரு வருடத்தில் வள்ளி என் வீட்டில் சுதந்திரமாக அந்தக் குழந்தைகளை வைத்துக் கொண்டு புழங்க ஆரம்பித்தாள். என் மனைவிக்கு வள்ளியை மிகவும் பிடித்து போய் விட்டது. ஏங்க இந்த வள்ளியை நாம் வளர்க்கலாமே என்றாள். சரி என்று அந்த சித்தால்களில் பெரியவனிடம் நான் கேட்ட பொழுது “ஸார் அது எங்க பொண்ணு ஸார் என் பெண்டாட்டிக்கு தான் பெத்ததைவிட இது கிட்ட தான் ஸார் ஆசை அதிகம் இன்ன கேள்வி கேட்டுட்டிங்க ஸார்” என்றான். என் மனைவி அவர்களின் பெரிய மனதை எண்ணி வியந்தாள்.

அந்த வள்ளியைதான் இப்பொழுது கையில் குழந்தையுடன் பார்த்த அதிர்ச்சியில் மனைவியுடன் சொன்னேன். ஒரு இரண்டு மணி பிறகு மனைவி போன் செய்தாள், நீங்க வள்ளியை பார்த்ததை சொன்னதிலிருந்து எனக்கு வேலை ஓட வில்லை, என்ன அலுவலகத்தில் கிழிக்கிரீர்கள் அரை நாள் லீவ் போட்டு வாங்க என்றாள்.

“ஏய் என்ன விளையாடுறியா நான் ரொம்ப பிஸி இன்னிக்குள் அந்த டெண்டரை முடிக்கவேண்டும் இல்லை என்றாளல் என்னுடைய டேமேஜர் சுலுக்கு எடுத்து விடுவான்” என்று சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.  

அன்று இரவு எங்களுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் முதல் காரியமாக அந்த சாலை சந்திப்பு அருகில் உள்ள தலைப்பாகட்டு பிரியாணி கடை வாசலில் காரை நிறுத்திவிட்டு வள்ளியை தேட சென்றோம். அவளை அங்கு காணவில்லை. இந்த பிச்சைகார்களை பிச்சை எடுக்க விட்டு காசு சேர்க்கும் கூட்டத்தின் கங்காணி எங்கு இருப்பான் என்று மக்களுக்கு தெரியும் ஆனால் போலிசுக்கு தெரியாது.

ட்ராபிக் போலிசு அருகில் நின்ற அவனை அனுகினேன். அவனிடம் வள்ளியின் அடையாளத்தை சொல்லி கேட்டபொழுது “ஸார் நீ யாரு போலிசா இன்னாத்துக்கு கேட்கிறே, பொத்தினு போய்க்கினே இரு” என்று ஒரு முறை முறைத்தான்.

“வந்துட்டானுகபா நம்ம பொழைப்புல மண்ணை போட நாங்களே பத்தாயிரம் முதல் போட்டு எடுத்திருக்கிறோம்” என்று அந்த ட்ராபிக் போலீசிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

இருந்தாலும் என் மனைவி விடுவதாக இல்லை, இன்னிக்கி அவள் வரவில்லை என்றால் என்ன எப்படியும் அவளை கண்டு பிடித்துவிடலாம் என்றாள்.

இதெல்லாம் நடக்கிற கதை இல்லை என்றால் அவள் புரிந்து கொள்ளமாட்டாள்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

கதை இன்னும் முடியல போல!

Chitra said...

இந்த பிச்சைகார்களை பிச்சை எடுக்க விட்டு காசு சேர்க்கும் கூட்டத்தின் கங்காணி எங்கு இருப்பான் என்று மக்களுக்கு தெரியும் ஆனால் போலிசுக்கு தெரியாது.

..... ஹா,ஹா,ஹா,ஹா..... அவர்களுக்குத் தெரியாதோ இல்லை, தெரியாத மாதிரி கண்டுக்காம இருப்பாங்களோ?

Chitra said...

தொடரும்???

மன்மதக்குஞ்சு said...

டச்சிங் டச்சிங்
சுளுக்கையே சுளுக்கெடுத்திட்டேயே
இரண்டாம் பாகத்திற்க்காக வெயிட்டிங்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடர்கிறேன் ...

Anonymous said...

இதெல்லாம் நடக்கிற கதை இல்லை ???

நல்லாயிருந்திச்சு....

Philosophy Prabhakaran said...

கதை இன்னும் முடியல... ஆனா தொடரும் போடலை...???

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.