Wednesday, 7 September 2011

கலக்கல் காக்டெயில் -40 (++++18 மட்டும்)

தக்காளி படிச்சது வேஸ்டா?

நாமெல்லாம் படிச்சு பாஸ் ஆகி, கிடைத்த வேலையில் சேர்ந்து ஓடி ஓடி சம்பாதிச்சு என்ன மயிரை பிடுங்கினோம் என்று தெரியவில்லை. சட்ட சபையில் சொத்து மதிப்பை அம்மா படித்த பொழுது ஆடிப்போயிட்டேன். அசையும் சொத்து, அசையா சொத்து. ஆடற சொத்து, ஆடாத சொத்து என்ற கணக்கில் ஒரு ஐம்பது கோடிக்கு கணக்கு காட்டறாங்க. ஐயாவோ நாற்பத்தைந்து கோடி காட்டராறு. பிரதமர் மாருதி எண்ணூறு வச்சுகிட்டு நாலு கோடிதான் என்று சூரத்தம்மன் கோயிலில் சூடம் அடிச்சு சொல்றாரு. மவனே என்ன நடக்குதுன்னு தெரியல்லை. முடிவு பண்ணிட்டேன் கட்சி விண்ணப்பம் வாங்கி ஏதோ ஒரு கட்சியில் ஐக்கியம் ஆகிட வேண்டியதுதான்.

பாலிருக்கும்..........................

பாலிருக்கும் பசியிருக்கும்
பழமிருக்காது
பஞ்சணையில் தூக்கம் வரும்
காற்று வராது

-------------------அடிக்கடி மின்சாரத்தை பிடுங்கினா இந்த மாதிரி தான் தோணுது என்ன செய்ய?

ஆபாச பதிவர்களுக்கு

“கொட்டகையில் அட்டு பிட்டு படம்”, “நண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட பிட்டு படம் “என்ற தலைப்பில் எப்பவோ தெரியாத்தனமா பதிவை போட்டுட்டு இப்போ புலம்பிக்கிட்டு இருக்கேன். ஒரு நாளில் ஐந்நூறு ஹிட் வருது அதில் நானூற்றி ஐம்பது மேற்சொன்ன பதிவைதான் படிக்கறாங்க. எல்லா மனிதரிடமும் ஏதோ விதத்தில் இந்த வக்கிரம் இருக்கத்தான் செய்கிறது.

ரசித்த கவிதை
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றனவாம்
அப்படியென்றால் ஏன் கண்ணே
நம் திருமணம் மட்டும்
கொருக்குப்பேட்டையில்
நிச்சயிக்கப் பட்டது?



நகைச்சுவை +++++18 மட்டும்

அந்த ஊரில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது, மனவியல் ரீதியான கணக்கெடுப்பு. ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் அந்த அரங்கில் கூடியிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் துணையுடன் எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றிய கணக்கெடுப்பு.

ஒரு நாளைக்கு இரண்டு முறை என்றவுடன் சில பேர் கை தூக்கினார்கள்.

கணக்கெடுக்கப்பட்டது.

தினமும்

மேலும் சில பேர், கணக்கெடுக்கப்பட்டது.

மேலும் வாரம் இருமுறை, மாதம் இருமுறை எல்லாம் நடந்து முடிந்தது.

கடைசியாக வருடம் ஒரு முறை என்று கேட்டவுடன் ஒருவர் துள்ளிக் குதித்து “நான் தான் நான் தான்” என்று அலம்பல் பண்ணிக்கொண்டிருந்தார்.

சரிப்பா நாங்கள் குறித்துக் கொள்கிறோம், ஏன் மச்சி அதுக்கு இந்த குதி குதிக்கிற என்றதற்கு.

அவர் சும்மா இருப்பா “ அந்த நாள் இன்றைக்கு தான்” என்றார்.     




ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

”தளிர் சுரேஷ்” said...

அரசியலில் ஆரம்பித்து ஜொள்ளுவில் முடித்தவரை அனைத்துமே அருமை! பாராட்டுக்கள்!

Unknown said...

சூப்பர்யா மாப்ள!

test said...

கலக்கல் பாஸ்! :-)

மன்மதக்குஞ்சு said...

சூப்பர் காக்டெயில்!!!!

நான் ரசித்த ட்விட்:

மங்காத்தாவை இன்னும் பாக்கலைடானு சொன்ன என்னை ஒரு மாதிரியா பாக்குறான் 2 மாசமா அவங்காத்தாவை பாக்காதவன்!

K said...

ரசித்த கவிதை
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றனவாம்
அப்படியென்றால் ஏன் கண்ணே
நம் திருமணம் மட்டும்
கொருக்குப்பேட்டையில்
நிச்சயிக்கப் பட்டது?///

ஆஹா அருமையான கவிதை! ஏனைய பகுதிகளும் அருமை!

ஆ.... சொல்ல மறந்துட்டேன்!

சார், கும்புடுறேனுங்க!

கத்தார் சீனு said...

சுவையான காக்டெயில் !!!
பிட்டு, சினிமான்னா எப்பவுமே ஹிட்டு தான் !!!

Anonymous said...

Cocktail...properly mixed...a little too much ...Spicy...

Yoga.s.FR said...

ஜொள்ளு அப்பிடீன்னு போட்டு கீழ அண்டர்லைன் பண்ணிட்டு,ஒரு பொம்பள படத்த போட்டிருக்கீங்களே, அப்புடீன்னா என்னங்க ??????????

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சூப்பருய்யா...

சி.பி.செந்தில்குமார் said...

யாரய்யா அந்த சிவப்பு கலர் ஜொள்ளுச்சா?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.