Monday, 12 September 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7


எனக்கு பிடித்த பதிவுலக சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இந்த முறை “உள்ளதை உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன் வியட்நாம் வாசி விக்கியுலகம் (வெங்கட்).” 


கிட்டத்தட்ட முன்னூற்றி ஐம்பது இடுகைகள், இருநூற்றி ஐம்பது பின் தொடர்பவர்கள் என்று தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பவர்.
இவருடைய சுயபுரானத்தில் “அம்மா நானா” பற்றி சொல்லி கடை சரக்கையும், போட் கிளப் சாலைகளையும், சனி ஞாயிறு கொட்டங்களையும் நியாபகப்படுத்தி பழைய நினைவுகளை கிளறிவிட்டார்.

நல்ல எழுத்து நடை, சுற்றி வளைக்காமல் சொல்லும் பாணி தனி சிறப்பு.
இவருடைய கிச்சளிக்காஸ் பல பேரை ஈர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை, என்ன? மொரோக்கோகாரியைதான் கண்ணில் காண்பிக்கவில்லை.
வியட்நாம் பற்றி தன் அனுபவங்களை (உதவியாளினியுடன் சென்றதை) பகிர்கிறார். 

“அந்த பன்னிரண்டு மணி நேரம்” தனியாக விட்டுச் சென்று வெள்ளத்தில் மாட்டிய நேரம் மனைவியின் எண்ணங்களை அவருடைய பதிவாக பகிர்கிறார். மேடமுக்கு திடமான மனசுதான், மொழி தெரியாத ஊரில் கணவனின் நிலை தெரியாது சிறு குழந்தையுடன் தத்தளித்தது மிகவும் கடினமான விஷயம்தான். 

அவருடைய பதிவுகளில் நையாண்டிக்கு பஞ்சமில்லை. மேலும் முக்கியமான விஷயம் எல்லோருடைய பதிவுகளையும் படித்து தவறாமல் “மாப்பிளே" என்று விளித்து பின்னோட்டமிடுவார்.
விக்கி உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.


காணாமல் போன பதிவர்கள் தலைப்பை தவிர்த்து இந்த முறை.............

புது வரவு


பதிவுலகத்திற்கு புதிய அறிமுகம் ஐடியா மணி.  


இப்பொழுது தான் வலைப்பூ தொடங்கியிருக்கிறார். அதற்குள் இவருக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அசர  வைக்கிறது.
இவரின் ”ஆண்களின் ஆபாச வயித்தெரிச்சல்! - ஒரு விரிவான அலசல்!!” ஒரு விதியாசமானா சிந்தனை.

பதிவோ, பின்னூட்டமோ எல்லோருக்கும் கும்பிடு போட்டு ஆரம்பிக்கும் பணிவு இது இது தான் ரொம்ப பிடிச்சது. 




படித்துவிட்டு தவறாம வோட்டையும் பின்னூட்டத்தையும் போடுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

25 comments:

Rajkumar said...

Nice listings...Keep it up...

கும்மாச்சி said...

நன்றி பி.டி.ஆர்

settaikkaran said...

அண்மைக்காலமாக நான் தவறாமல் படிக்கிற பதிவர் விக்கியுலகம்! நீங்கள் குறிப்பிட்டிருக்கிற எல்லா சிறப்புகளுக்கும் உரித்தானவர் என்பதுடன், மாற்றுக்கருத்துடையவர்களின் இடுகைகளிலும் நாகரீகமாக பின்னூட்டம் இடுபவர். வாழ்க!

கும்மாச்சி said...

சேட்டை, விக்கியுலகம் நல்ல பதிவர்தான் அதில் மாற்று கருத்து இல்லை. வருகைக்கு நன்றி பாஸ்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எங்களுக்கும் பிடித்த பதிவர் .வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

நன்றி எஸ்ரா.

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

சார், இப்போத்தான் கவனிச்சேன்! என்னையெல்லாம் அறிமுகப்பட்டுத்தியிருக்கீங்க! ரொம்ப நன்றி சார்!

நான் இதை மறக்கவே மாட்டேன்! ரொம்ப ஹேப்பியா இருக்கு!

அப்புறம் நண்பர் - விக்கியுலகம் சாருக்கும் வாழ்த்துக்கள்!!

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள் விக்கி வெங்கட்...

Philosophy Prabhakaran said...

// கண்ணாடி மனசுக்காரன் வியட்நாம் வாசி விக்கியுலகம் (வெங்கட்) //

நல்லா சொல்லியிருக்கீங்க...

Philosophy Prabhakaran said...

// சுற்றி வளைக்காமல் சொல்லும் பாணி தனி சிறப்பு //

விழுந்து விழுந்து சிரிச்சேன்... ஏங்க உங்களுக்கு மனசாட்சியே இல்லையா...

Unknown said...

மாப்ள இந்தப்பதிவு தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது...நன்றிங்க...இந்த அளவுக்கு தகுதி எனக்கு இருக்கா தெரியல...மீண்டும் நன்றி!

Unknown said...
This comment has been removed by the author.
கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி விக்கி. தொடரட்டும் உங்கள் பணி.

கும்மாச்சி said...

ஐடியா மணி, தொடருங்க உங்கள் பதிவுகளை.

நாய் நக்ஸ் said...

Nanri!!!
Vazhthukkal!!!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி தக்காளிக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஐடியா மணீக்கு ஒரு கும்பிடு

அம்பாளடியாள் said...

சரியான தேர்வு .அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .....

கும்மாச்சி said...

அம்பாளடியாள்
செந்தில்
வருகைக்கு நன்றி.

rajamelaiyur said...

விக்கி உண்மையில் சூப்பர் ஸ்டார் தான்

MANO நாஞ்சில் மனோ said...

மொரோக்காகாரியை விக்கி சொல்லமாட்டான் ஏன்னா அவன் உயிர் நண்பன் ஒருவன் அதில் சம்பந்தபட்டுருக்கான்....

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி ராஸ்கல்kku வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ said...

ஐடியா மணிக்கும் வாழ்த்துக்கள்...

நிரூபன் said...

விக்கி அண்ணாச்சிக்கும்,
ஐடியா மணிக்கும் வாழ்த்துக்கள்.

மன்மதக்குஞ்சு said...

ரொம்ப நாளாக ஏங்கின வலைச்சாவி தந்த கும்மாச்சி வாழ்க வாழ்கவே

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.