Pages

Tuesday, 20 September 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 8


பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இந்த முறை அண்ணன் “பன்னிகுட்டி ராம்சாமி”. இவருக்கு ஒரு இணைப்பு கொடுத்தால் பத்தாது. ஏனென்றால் தலைவர் மூன்று வலைப்பூக்கள் வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். 




இவருடைய சுய அறிமுகம் பார்த்தால் தெரியும் பயங்கர நக்கல் பார்ட்டி என்று.


இவருடைய பதிவுகளில் இதே நக்கல் நையாண்டிக்கு பஞ்சம் இருக்காது. மூன்று வலைப்பூக்களிலும் மொத்தமாக கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பது பதிவுகள்  இட்டிருக்கிறார். 

இவருடைய டெர்ரர் கும்மியில் “பூமியைத்தேடி” என்று ஒரு புதிய விஞ்ஞான தொடர்கதையை தொடங்கி இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் அடுத்த தொடரை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். 

படிக்க வேண்டியவை டெர்ரர் பாண்டியனின் பய(ங்கர)டேட்டா,
பதிவுலகின் மாமாமேதை (நான் மாமேதைன்னா என்ன விட பெரியாளு மாமாமேதைதானே?) சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களை புகழ்ந்து ஒரு வாழ்த்துப்பா பாடியவாறு தொடங்குகிறேன்.

“பதிவுலகம் கண்ட மாமாமேதையே...
உன்னைச் சீண்டுபவர்களுக்கு நீ ஒரு தீப்பொறி திருமுகம்...
உன்னைத்தூண்டுபவர்களுக்கு நீ ஒரு கைப்புள்ள...
ஆணவக்காரர்களுக்கு நீ ஒரு அல்லக்கை...
அநியாயக்காரர்களுக்கு நீ கிரிகாலன்...
பிகர்களுக்கு நீ ஒரு சிரிப்பு காவலன்...
பதிவர்களுக்கு நீ ஒரு டெலக்ஸ் பாண்டியன்...
பாமரனுக்கு நீ ஒரு சூனா பானா...
நண்பர்களுக்கோ நீ செட்டப் செல்லப்பா...
இனி உன் கெட்டப்தான் என்னப்பா....?

செம நக்கல்பா.

காணாமல் போன பதிவரில் நான் சிரிப்புபோலிசை பற்றி எழுதியிருந்தேன் அதற்கு ஒரு பதிவர் அவர் கூகிள் பஸ்ஸில் இருக்கிறார் என்றதற்கு நம்ம ப.கு ஸார் ஆமாம்பா அவர் டிரைவரா இருக்கிறார், நான் கண்டக்டர் என்று பின்னூட்டம் போட்டிருந்தார். இப்போதான் மேட்டர் புரியுது.

“ஓடு ஓடு நிக்காம ஓடு வேலாயுதம் வருதாம்” ஏன் இந்த கொலை வெறி?.

 ராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க!

175869

ரொம்ப லொள்ளுதான்.

இவருடைய பதிவுகளைப் பற்றி எழுத நமக்கு வார்த்தை பத்தாதுங்க ஹி......... ஹி.................. ஹி....................

நீங்களே போயி “ராப்பகலா கண்ணு முழிச்சு கடைய தொறந்து வச்சிக்கிராறு”, போங்க அவருக்கு போனி பண்ணுங்க.

24 comments:

  1. ஓ.... இன்னிக்கு நம்ம பாஸா? அவரைப்பத்தி நல்லாவே சொல்லியிருக்கீங்க! ஆனா ஒண்ண விட்டுட்டீங்களே!

    அதாங்க! அந்த அஞ்சலி மேட்டரு! அதை பத்தி சொல்லலைன்னா சாமிக்குத்தம் ஆகிடும்னு அண்ணன் கோவிச்சுக்கப் போறார்!

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அதென்ன அஞ்சலி மேட்டரு, தல சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  3. நம்ம டாக்குட்டர் பன்னிக்குட்டி சார் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க..

    சிரிப்பு போலீஸ் டைம்மிங் காமெடி பண்ணுவதில் சூப்பர் ஆள்.

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பன்னியை பதிவுலகின் தாதான்னும் சொல்லலாம் [[ஏதோ நம்மால முடிஞ்சது]]

    ReplyDelete
  5. super star பன்னி குட்டி வாழ்க!

    ReplyDelete
  6. பானா ராவன்னா என்னோட ஃபேவரிட் பதிவர்! நகைச்சுவைக்காக அவரு மெனக்கெடவே தேவையில்லை. அது அவரோட டி.என்.ஏ-விலேயே இருக்குதுன்னு நினைக்கிறேன். இடுகையிலே மட்டுமில்லை; பின்னூட்டத்துலே கூட நகைச்சுவையிலே புகுந்து விளையாடுவாரு! அல்டிமேட் நக்கல், நையாண்டி எக்ஸ்பர்ட் அவருதான்!

    I admire him; I adore him! :-)

    வாழ்த்துகள் பானா ராவன்னா!

    ReplyDelete
  7. ஐ .. நாமளும் இவரு பத்தி சொல்லி இருந்தோமே... இவரு நெசமாவே ஒரு சூப்பர் ஸ்டார்தான்...

    ReplyDelete
  8. பன்னியார்..சகலகலா வல்லவர்...
    சூப்பர் ஸ்டார் தான்...

    ReplyDelete
  9. என்னங்ணா..இப்படி தூக்கு தூக்குன்னு தூக்கி இருக்கீங்க.....!

    ReplyDelete
  10. அப்புறம் ஒரு சின்ன திருத்தம், கவுண்டமணி ஃபேன்ஸ், டெரர்கும்மி ப்ளாக்குகள்ல நானும் ஒரு மெம்பர் அவ்ளோதான். அதுல வர்ர பதிவுகள் எல்லாமே நான் எழுதுனது இல்ல.

    ReplyDelete
  11. //////கும்மாச்சி said...
    அதென்ன அஞ்சலி மேட்டரு, தல சொல்லவே இல்லையே?//////

    அது ஒண்ணுமில்லீங்க..... ஒரு இடத்துல வாய்தவறி அஞ்சலின்னா எனக்கு புடிக்கும்னு சொன்னேங்க... அவ்ளோதாங்க..... மீதிய பசங்க டெவலப் பண்ணிட்டாங்க....

    ReplyDelete
  12. அட இண்டைக்கு நம்மாளு...

    வாழ்த்துக்கள் மாப்பிள//

    ReplyDelete
  13. பதிவுலகில் அனைவருக்கும் நண்பராக இருக்கும் ஒரு சிலர்களில் பன்னிக்குட்டியும் ஒருவர்... அவருக்கு எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. மூன்று வலைப்பூக்கள்ன்னு கவுண்டமணி fans வலைப்பூவையும் சேர்த்திருப்பதை வன்மையா கண்டிக்கிறேன்... இன்னும் ஒரு போஸ்ட் கூட போடல...

    ReplyDelete
  15. அட நம்ம பன்னி,,


    நிஜமாகவே சூப்பர் ஸ்டார்தான்..

    ReplyDelete
  16. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////கும்மாச்சி said...
    அதென்ன அஞ்சலி மேட்டரு, தல சொல்லவே இல்லையே?//////

    அது ஒண்ணுமில்லீங்க..... ஒரு இடத்துல வாய்தவறி அஞ்சலின்னா எனக்கு புடிக்கும்னு சொன்னேங்க... அவ்ளோதாங்க..... மீதிய பசங்க டெவலப் பண்ணிட்டாங்க....//

    யோவ் அப்போ உனக்கு நாயகன்,தளபதி,அலைபாயுதே,ரோஜா,பம்பாய் எல்லாம் பிடிக்காதா. ராஸ்கல்

    ReplyDelete
  17. Philosophy Prabhakaran said...

    மூன்று வலைப்பூக்கள்ன்னு கவுண்டமணி fans வலைப்பூவையும் சேர்த்திருப்பதை வன்மையா கண்டிக்கிறேன்... இன்னும் ஒரு போஸ்ட் கூட போடல...//

    நானும் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  18. ஏனென்றால் தலைவர் மூன்று வலைப்பூக்கள் வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். //

    ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யலைன்னு சொல்லுங்க!!!

    ReplyDelete
  19. சிரிப்பு போலீஸ் டைம்மிங் காமெடி பண்ணுவதில் சூப்பர் ஆள்.//

    இதுல ஏதும் உள்குத்து இருக்கா?

    ReplyDelete
  20. இவர் பதிவை படித்த பிறகு தான் நானும் காமெடி டிராக்கு மாறினேன்...

    ReplyDelete
  21. ஏன் பன்னி, அந்த சினிமாகாரவுங்க தான் இப்படி விளம்பரம் , விளம்பரம்ன்னு அலையுறாங்க ......நாம வாங்குற ஐஞ்சுக்கும், பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா ????

    இப்படிக்கு
    பொறாமையில் பொசுங்கி வேற வழியில்லாம சமாளிப்போர் சங்கம்

    ReplyDelete
  22. ஓ....நம்ம சூப்பர் ஸ்டாரா!!!!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. அட..நம்ம தலைய பத்தி சொல்லியிருகிங்க? அடடடா..... தலை ராக்ஸ் ( மொதல்ல டைப் பண்ண வெரல அடுப்புல வச்சு கருக்கனும் ) :))

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.