போன ஞாயிறு மதியம் தொலைக்காட்சி பெட்டியில்
மேய்ந்து கொண்டிருந்த பொழுது “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” என்று யேசுதாஸ்
அற்புதம் உடைந்து போகாமல் மென்மையாக பாடும் பாட்டு வந்து கொண்டிருந்தது.
கண்ணதாசனின் வரிகளுக்காகவும், அசோக் குமாரின் அற்புதமான கேமராவில் வால்பாறையின்
இயற்கைக்காட்சிகளை அள்ளி விட்டிருப்பதனாலும் இந்த பாட்டை கேட்டாலே என்னுள் அந்தக்
காட்சிகள் விரியும். இந்த காட்சியை பார்த்ததும் ரிமொட்டில் நெக்ஸ்ட் பட்டனை
தொடாமல் கொஞ்சநேரம் இருந்தேன். பாட்டு முடிந்தவுடன் படம் தொடர்ந்த பொழுதுதான் ஆஹா
முழுப் படமும் போடுகிறார்களே என்று ரிமோட்டை துறந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
படம் ரிலீஸ் ஆன சமயத்தில் தி. நகரில் உள்ள
ராஜகுமாரி தியேட்டரில் முதல் நாள் இரவு காட்சிக்கு அடித்து பிடித்து டிக்கட்
வாங்கி பார்த்த பொழுது ரசித்ததை விட கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து இந்தப்
படத்தை மிகவும் ரசித்தேன். ரஜினி, ஷோபா, இவர்களின் நடிப்பு, மகேந்திரனின் கதை
வசனம், இயக்கம், இளையராஜாவின் பின்னணி இசை இந்த நான்கு பேர்களின் அதிக அளவு
உழைப்பும் திறமையும் இந்த படத்தின் வெற்றிக்கு சான்று.
இதில் ரஜினியின் நடிப்பு கனகச்சிதம். சரத்
பாபுவை தன் கையிழந்த பின்பு தன் வேலையின் நிலைமையை அறிய செல்வார். சரத்பாபு இவருக்கு
வேலை தரமுடியாத நிலைமையை விளக்கும்பொழுது ரஜினியின் ரியாக்ஷன் சூப்பர்.
“என்ஜினியர் ஸார் ஒரு கை என்ன ஸார் ரெண்டு கை ரெண்டு காலும் போனாக்கூட இந்த காளி
பொழைச்சுக்குவான் ஸார், ரொம்ப கெட்ட பையன் ஸார்” என்பார். அப்பொழுது தியேட்டரில்
முப்பது வருடங்கள் முன்பு கேட்ட ரசிகர்களின் விசில் சத்தம் எனக்கு மறுபடியும்
கேட்டது.
படாபட் ஜெயலக்ஷ்மி படுக்கை அறையில் “நித்தம்
நித்தம் நெல்லு சோறு” என்று ஆரம்பிக்கவும் ரஜினியின் முக பாவனைகள் அந்த பாட்டு
முடியும் வரை நமது கவனத்தை அவரிடமே கட்டி வைத்திருப்பார்.
படத்தின் க்ளைமாக்ஸ்: இதில் ரஜினி, ஷோபாவின்
நடிப்பு இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் “ஹைலைட்”. குறிப்பாக ரஜினி இங்கு
எல்லோரையும் விட ஒரு படி தன் நடிப்பால் உயர்ந்து நிற்பார்.
மொத்தத்தில் ரஜினியின் படங்களில் முள்ளும்
மலரும் அவரது மகுடத்தில் பதிந்த வைரம்.
(நன்றி: போலிமேர் டிவி திடீரென்று இது போன்று
நல்ல படங்கள் போடுகிறார்கள்)
18 comments:
ஆஹா! தலைவர் படத்துலே எனக்குப் பிடிச்ச இன்னொரு படம்.
ரஜினி,ஷோபா,படாபட் யாருக்கும் ஒப்பனை கிடையாது. இறுதிக்காட்சியின்போது, கண்கலங்கியது இன்னும் ஞாபகமிருக்கிறது. இந்தப் படத்தில் ஒரே ஒரு நெருடல் - வெ.ஆ.மூர்த்தியின் கதாபாத்திரமும், சில தவிர்த்திருக்கக் கூடிய அவர் தொடர்புடைய காட்சிகளும்.
Of course, ராஜாவின் இசை ராஜாங்கத்தைப் பற்றி புதிதாய் என்ன சொல்ல..? :-)
சேட்டை தலைவர் படத்தை இன்னும் ஒரு முறை பல வருடங்களுக்கு பிறகு பார்ப்பது உண்மையிலேய நன்றாக இருந்தது.
நீங்க குறிப்பிட்ட அந்த வசனம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்... ஆனால் முழுப்படத்தையும் இதுவரை பார்த்ததில்லை...
mullum malarum the great movie
வருகைக்கு நன்றி ராசி
பிலாசபி பின்னூட்டத்திற்கு நன்றி.
“என்ஜினியர் ஸார் ஒரு கை என்ன ஸார் ரெண்டு கை ரெண்டு காலும் போனாக்கூட இந்த காளி (விக்கி ஹிஹி!)பொழைச்சுக்குவான் ஸார், ரொம்ப கெட்ட பையன் ஸார்”
-ஒரு நிமிஷம் என்னை நினைச்சி பாத்தேன்...மாப்ள!,,,,ஹிஹி!
விக்கி பாஸ் வருகைக்கு நன்றி.
பாட்டு முடிந்தவுடன் படம் தொடர்ந்த பொழுதுதான் ஆஹா முழுப் படமும் போடுகிறார்களே என்று ரிமோட்டை துறந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.//எனக்கும் ரொம்ப பிடிக்கும்..
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மாலதி.
ம் ...
வருகைக்கு நன்றி பாஸ்.
மொத்தத்தில் ரஜினியின் படங்களில் முள்ளும் மலரும் அவரது மகுடத்தில் பதிந்த வைரம்.//
மிக சரியாக சொன்னீர்கள்....!
முள்ளும் மலரும் படம் பற்றிய நினைவு மீட்டல் மூலம் மீண்டும் என் சிறு வயது நினைவுகளைக் கிளறியிருக்கிறீங்க.
அந்த படம் தனி ரகம் தான்...செந்தாழம்பூ...எத்தனை முறை தனியாக போகும் போதும் கேட்கலாம்..கூடவே பாடி மகிழலாம்...ஷோபா...ஆழ்கடலில் எடுத்து தொலைந்து போன முத்து...அதையும் தாண்டி தலைவர் வழக்கம் போல் தனி முத்திரை தான்...ராஜ முத்திரை...
முள்ளும் மலரும் மகேந்திரன் ப்டம் வருவதற்கு
மல்ஹாசன்,Mr.கும்மாச்சி
முள்ளும் மலரும் மகேந்திரன் ப்டம் வருவதற்கு உதவியது,
நம்மவர் உலகநாயகன் கமல்ஹாசன் தெரியுமா,Mr.கும்மாச்சி
முள்ளும் மலரும் மகேந்திரன் ப்டம் வருவதற்கு உதவியது,
நம்மவர் உலகநாயகன் கமல்ஹாசன் தெரியுமா,Mr.கும்மாச்சி
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.