Pages

Thursday, 15 September 2011

இலவசம்






சோற்றுக்கு அரிசி இலவசம்

மாவாட்ட, மசாலா அரைக்க
க்ரைன்டர், மிக்சி
இலவசம்.


வியர்க்காத உடலுக்கு
காற்று வாங்க மின்விசிறியும்
இலவசம்


உண்ட களைப்பு நீங்க
கண்டு காண தொலைக்காட்சி
இலவசம்


எஞ்சிய பொழுது வலையில் மேய
மாணவர்களுக்கு மடிக்கணினி
இலவசம்.


படிப்பு ஏறாமல் பரிதவித்து போனால்
பட்டிதொட்டியில் படுத்துறங்க
ஆடு, மாடுகள்
இலவசம்.

தாலிக்கு தங்கம் இலவசம்
குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஐநூறு
கர்ப்பிணிக்கு பத்தாயிரம்
முடிவை மக்களிடையே விட்டு
யோசிக்க நேரம்
இலவசம்.


இலவசம் என்று கொச்சை படுத்தாமல்
விலையில்லா அரிசி, மிக்ஸி, மடிக்கணினி
என பக்குவமா பெயர் வைத்து
போதையில் பொருளீட்டி
மேதைகள் செய்யும் ஆட்சி
வாழ்க தமிழகம்.

21 comments:

  1. "தாலிக்கு தங்கம் இலவசம்
    குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஐநூறு
    கர்ப்பிணிக்கு பத்தாயிரம்
    முடிவை மக்களிடையே விட்டு
    யோசிக்க நேரம்
    இலவசம்."

    நச்சுன்னு நான் ரசித்த வரிகள்.

    ReplyDelete
  2. மன்மதக்குஞ்சு முதல் வடை உங்களுக்குத்தான். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. எஸ்ரா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. சுருக்கென்றும் நறுக்கென்றும் சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஐடியாமணி வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  6. நறுக்...கவிதை/பாடல்.

    ReplyDelete
  7. கடைத்தேங்காயை எடுத்து..............!
    ஹும்!

    ReplyDelete
  8. சேட்டை
    ரேவ்ரி
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பா,
    நச்சென்று சொல்லியிருக்கிறீங்க.

    இலவசத்தின் பெயரால் தமிழர்களின் உழைப்பினை மழுங்கடிப்போருக்கான சாட்டையடிக் கவிதை நண்பா.

    ReplyDelete
  10. பின்னூட்டத்திற்கு நன்றி நிரூபன்.

    ReplyDelete
  11. பதிவை அழகாக சுருக்கமாக் சொல்லியிருக்கீங்க.

    இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    ReplyDelete
  12. வைரை சதீஷ்
    சி.பி.
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. நான் சேட்டைகாரரின் கருத்தை அமோதிக்கிறேன்..

    இவர்கள் நவீன ராபின் ஹூட்கள் போல இருக்கே!!..

    ReplyDelete
  14. அரசு கொடுக்கும் இலவசங்களை ஒரு புறம் பெற்றுக் கொண்டு மறுபுறம் பெட்ரோலுக்கும் கேஸூக்கும் காய்கறிகளுக்கும் அதிக பணம் கொடுத்தே அழிந்து விடுவோம் நாம். வாழைப்பழத்தில் நன்றாகவே ஊசி ஏற்றியிருக்கிறீர்கள். நன்று.

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி, கணேஷ்.

    ReplyDelete
  16. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  17. நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  18. இலவசத்தின் ”அழகை” நல்லா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.