சோற்றுக்கு அரிசி இலவசம்
மாவாட்ட, மசாலா அரைக்க
க்ரைன்டர், மிக்சி
இலவசம்.
வியர்க்காத உடலுக்கு
காற்று வாங்க மின்விசிறியும்
இலவசம்
கண்டு காண தொலைக்காட்சி
இலவசம்
எஞ்சிய பொழுது வலையில் மேய
மாணவர்களுக்கு மடிக்கணினி
இலவசம்.
படிப்பு ஏறாமல் பரிதவித்து போனால்
பட்டிதொட்டியில் படுத்துறங்க
ஆடு, மாடுகள்
இலவசம்.
தாலிக்கு தங்கம் இலவசம்
குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஐநூறு
கர்ப்பிணிக்கு பத்தாயிரம்
முடிவை மக்களிடையே விட்டு
யோசிக்க நேரம்
இலவசம்.
இலவசம் என்று கொச்சை படுத்தாமல்
விலையில்லா அரிசி, மிக்ஸி, மடிக்கணினி
என பக்குவமா பெயர் வைத்து
போதையில் பொருளீட்டி
மேதைகள் செய்யும் ஆட்சி
வாழ்க தமிழகம்.
"தாலிக்கு தங்கம் இலவசம்
ReplyDeleteகுடும்ப கட்டுப்பாட்டுக்கு ஐநூறு
கர்ப்பிணிக்கு பத்தாயிரம்
முடிவை மக்களிடையே விட்டு
யோசிக்க நேரம்
இலவசம்."
நச்சுன்னு நான் ரசித்த வரிகள்.
மன்மதக்குஞ்சு முதல் வடை உங்களுக்குத்தான். வருகைக்கு நன்றி.
ReplyDeleteஎஸ்ரா வருகைக்கு நன்றி.
ReplyDeleteசுருக்கென்றும் நறுக்கென்றும் சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஐடியாமணி வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
ReplyDeleteநறுக்...கவிதை/பாடல்.
ReplyDeleteகடைத்தேங்காயை எடுத்து..............!
ReplyDeleteஹும்!
சேட்டை
ReplyDeleteரேவ்ரி
வருகைக்கு நன்றி.
வணக்கம் நண்பா,
ReplyDeleteநச்சென்று சொல்லியிருக்கிறீங்க.
இலவசத்தின் பெயரால் தமிழர்களின் உழைப்பினை மழுங்கடிப்போருக்கான சாட்டையடிக் கவிதை நண்பா.
பின்னூட்டத்திற்கு நன்றி நிரூபன்.
ReplyDeleteபதிவை அழகாக சுருக்கமாக் சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteஇதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
இலவசம் இனி இலைவசம்
ReplyDeleteவைரை சதீஷ்
ReplyDeleteசி.பி.
வருகைக்கு நன்றி.
நான் சேட்டைகாரரின் கருத்தை அமோதிக்கிறேன்..
ReplyDeleteஇவர்கள் நவீன ராபின் ஹூட்கள் போல இருக்கே!!..
நன்றி ரமேஷ்பாபு.
ReplyDeleteஅரசு கொடுக்கும் இலவசங்களை ஒரு புறம் பெற்றுக் கொண்டு மறுபுறம் பெட்ரோலுக்கும் கேஸூக்கும் காய்கறிகளுக்கும் அதிக பணம் கொடுத்தே அழிந்து விடுவோம் நாம். வாழைப்பழத்தில் நன்றாகவே ஊசி ஏற்றியிருக்கிறீர்கள். நன்று.
ReplyDeleteவருகைக்கு நன்றி, கணேஷ்.
ReplyDeleteஅருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteதமிழ்மணம் 9
ReplyDeleteநன்றி அம்பாளடியாள்.
ReplyDeleteஇலவசத்தின் ”அழகை” நல்லா சொல்லி இருக்கீங்க
ReplyDelete