எல்லோருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்.
கடும் மின்வெட்டு
எப்பொழுது திருந்துவார்களோ? தெரியவில்லை. இரண்டு கட்சிகளும்
மாறி மாறி ஒருவர் மற்றொருவரை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் உபயோகம் இல்லை.
கூடங்குளம் மின் நிலையம் நம்பி உபயோகமில்லை. இந்த அரசு உரிய நடவடிக்கை
எடுக்கவில்லை என்றால் தமிழகம் எல்லா விதத்திலும் கடுமையாக பாதிக்கப்படும். வெளி
மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவது ஒரு தற்காலிக நடவடிக்கையே. நாளுக்கு
நாள் மின் உபயோகம் அதிகரிக்கும் என்பதை மனதில் கொண்டு எந்த அரசும் திட்டமிடாததே இதற்கு
காரணம்.
செயத்தக்க அல்ல செயக்கெடும், செயத்தக்க
செய்யாமை யானும் கெடும்.
வள்ளுவர் இவங்களுக்குத்தான் சொல்லியிருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல்
இந்த முறை எல்லா கட்சிகளும் தனித்து போட்டி வரவேற்கதக்க ஒன்று தான்,
உண்மை பலம் தெரியும். ஆனால் இது முழுக்க முழுக்க மாநில தேர்தல் ஆணையம் நடத்துவதால்
எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும் என்று தெரியவில்லை. மக்கள் தெளிவாக இருப்பது
நலம். இந்த மேயர், கவுன்சிலர் போட்டிகளுக்கு நடக்கும் தள்ளுமுள்ளைப் பார்த்தால்
யாரும் சேவை செய்ய வருவதாக தெரியவில்லை, முதல் போட்டு லாபம் ஈட்டப் போவதுபோல் தான்
முட்டிக் கொள்கிறார்கள்.
ரசித்த மரபு கவிதை
“சராசரி மனிதனுக்கு மரபுக்கவிஞனின் உபதேசம்” என்ற தலைப்பில்
சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கத்தில் எழுதியிருப்பது.
காலையிலே எழுந்திருந்தால் செய்தித் தாளில்
கற்பழிப்பு செய்திகளைப் படிக்க வேண்டாம்
காபித்தூள் கடன் வாங்கும் மனைவி கண்ணில்
காத்திருக்கும் நீரத்துளியை மதிக்க வேண்டாம்
வேலைக்காய் அலுவலகம் செல்லும் போது
வீதிகளில் நரகல்லை மிதிக்க வேண்டாம்
வேறெங்கோ பார்த்திருக்க லாரி மோதி
வீண்மரணம் அடைந்தவர்க்குத் துடிக்க வேண்டாம்
மாலைவரை ஈஒட்டும் உத்யோகத்தில்
மனச்சாட்சி துளிக்கூட கலக்க வேண்டாம்
மறுபடியும் மனைவியிடம் திரும்பி வந்து
மாறுதலாய் மல்லிகைப்பூக் கொடுக்க வேண்டாம்
சீலைதனை ராத்திரியில் உருவி விட்டு
செயல்படும்போ துனர்ச்சிகளைத் தடுக்க வேண்டாம்
சிரிதளவாய் இப்படியே தினமும் சாகும்
சின்னதொரு உணர்ச்சிகளை இழக்க வேண்டாம்.
ஜொள்ளு
3 comments:
சுஜாதா எழுத்து பகிர்வுக்கு நன்றி
//நாளுக்கு நாள் மின் உபயோகம் அதிகரிக்கும் என்பதை மனதில் கொண்டு எந்த அரசும் திட்டமிடாததே இதற்கு காரணம்.//
உண்மைதான். மின்வெட்டு தமிழகத்தை இப்படி முடக்கிக்கொண்டிருக்கும்போது, திருவிழாக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் மின்சாரத்தை விரயம் செய்கிறவர்களைப் பார்த்தால் எரிச்சல் மேலிடுகிறது. :-(
இப்படியே தினமும் சாகும்
சின்னதொரு உணர்ச்சிகளை இழக்க வேண்டாம்.///நச்!!!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.