Pages

Thursday, 27 October 2011

கலக்கல் காக்டெயில் -46

தீபாவளி

கம்பெனியில் இடைவிடாது ஆணி பிடுங்கியதால் எனது தீபாவளி வாழ்த்துகளும், பதிவும் சற்றே தாமதமாக வெளி வருகிறது. எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள். வீட்டிலும் தீபாவளியை விமர்சையாக கொண்டாட முடியவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் தீபாவளி அவ்வளவு விமர்சையாக கொண்டாட முடிவதில்லை. டாலரை துரத்துவதில் உள்ள இழப்பு இது.

நீதிமன்றத்தில் அம்மா

அம்மா போவாங்களா? மாட்டாங்களா? என்ற எதிர்பார்ப்புக்களுக்கு நடுவில் அம்மா இரண்டு நாட்கள் அல்ல மூன்று நாட்கள் தனி விமானத்தில் பறந்து பறந்து நீதிமன்றத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிரார்கள். கேள்வி நீளமாக இருந்தாலும் பதில் ஆம், இல்லை வகையா தெரியவில்லை.

அரசு வக்கீல்: இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் தானா?

அம்மா:  ஆம்

அரசு வக்கீல்: இன்னும் முன் போல அதே மாதிரி சொத்து சேர்க்கறீங்களா?

அம்மா: ????????????

உள்ளாட்சி தேர்தல்

எப்படியோ ஆளும் கட்சி ஐயருடன் கூட்டணி வைத்து எல்லா நகராட்சியையும் கைப்பற்றிவிட்டார்கள். கலைஞர் நேற்றைய தினம் புள்ளி விவரத்துடன் எல்லா கட்சிகள் பெற்ற ஒட்டு சதவிகிதத்தை புட்டு புட்டு வைத்தார். தி.மு.க தமிழகத்தில் இரண்டாம் கட்சியாக இருந்தாலும் மக்களின் கோபம் இன்னும் குறையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கலைஞரின் தற்போதைய நிலைமை கட்சியை பற்றி நினைக்க தோன்றுமா என்பது சந்தேகமே.

ரசித்த முடிவு தே.தி.மு.க, பா.ம.க விற்கு கிடைத்த அல்வா.!!!!!!!!!!!

ரசித்த கவிதை

வண்ண விளக்குகள்
மின்னும் நகைகள்
அர்த்த ஜாமத்தில்
உறக்கம் கெடுக்கும்
ஊர்வலம் வருகிறாள் அம்மன்
பக்தியுடன் கும்பிட்டாலும்
ஆசையுடன் மனம்
முன்னாள் ஆடிச்செல்லும்
கரகாட்டக்காரியின் பின்னே.


---------------பொன்குமார்  

ஜொள்ளு



5 comments:

  1. ரசித்த முடிவு தே.தி.மு.க, பா.ம.க விற்கு கிடைத்த அல்வா.!!!!!!!!!!!
    உன்மைதான் அவர்கள் இப்போதாவது உனர்வார்கலா

    ReplyDelete
  2. உள்ளாட்சி தேர்தலில் நான் ரசித்த முடிவு கலைஞரின் ஒப்புதல் வாக்குமூலம்

    ReplyDelete
  3. மொத்தம் மும்மூறு கேள்வியாம் ல,எல்லாத்துக்கும் அம்மா இதே பதில் தான் சொன்னாங்களா?

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.