Pages

Monday, 10 October 2011

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 9

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இந்த முறை அண்ணன் “பிலாசபி பிரபாகரன்”. அவரது வலைப்பூவின் பெயர் “பிரபாகரனின் தத்துபித்துவங்கள்” சற்றே வித்தியாசமான பெயர்.


இவருடன் எனக்கு பரிச்சயம் இவரது பல்சுவை பகுதிக்கு  பெயர் வைக்கும்பொழுது என்னை நினைவு கூர்ந்தார். நான் கலக்கல் காக்டெயில் என்று வைத்ததனால் அவர் “பிரபா ஒயின்ஷாப்” என்று பெயர் வைத்து பின்னுகிறார். தலைவர் போடும் ஜொள்ளு படங்கள் பதிவுலகில் பிரசித்தம். 

   
பிரபா ஸ்பெஷல்

இதுவரை நூற்றி எழுபத்தைந்து பதிவுகள், நானூற்றி சொச்சம்  தொடர்பவர்கள்  என்று தனக்கென்று ஒரு ராஜபாட்டை வகுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவரின் “காண்டம்” கவிதையை நான்  என்னுடைய கலக்கல் காக்டெயிலில் பகிர்ந்தேன். வித்தியாசமான சிந்தனை.
மங்காத்தா விமர்சனம் நான்  ரசித்த ஒன்று. அந்த பதிவின் உள்ளடக்கத்தைவிட தலைப்பை ரசித்தேன். 

தமிழ் புத்தாண்டு:
"நித்திரையில் இருக்கும் தமிழா...!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...!"

கலைஞர் முயலுக்கு நாலு கால்என்று சொன்னால் இல்லையில்லை... கலைஞர் ஒரு தமிழன துரோகி, போலி நாத்திகவாதி, சுயநலவாதி... அவர் சொல்வது எல்லாவற்றையும் நான் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன்... நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்...என்று சொல்பவர்களுக்கு மேலே உள்ள பாரதிதாசன் கவிதையை டெடிகேட் செய்கிறேன். எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்பவர்கள் சமஸ்கிருத புத்தாண்டாம் ஏப்ரல் பதினான்கையே பிடித்து தொங்குங்கள்.

இது தமிழ் புத்தாண்டை வைத்து அரசியல் கூத்து நடத்தும் அரசியல் வாதிகளின் அழிச்சாட்டியத்தை வெட்ட வெளிச்சமாக்கும் ஒரு “ஒயின் ஷாப்” கருத்து. 

“காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும் காத்திருக்காதே... கல்லடி கிடைக்கும்...
இது இவரது வலைப்பூவின் சப் டைட்டில்.

மேலும் இவரின் வலைப்பூவிலிருந்து ஒரு இதழ்.
ஒவ்வொரு புதுவருட பிறக்கும்போதும் இந்த சமுதாயம் நம் முன்பு ஒரு கேள்வியை வைக்கிறது. உங்களுடைய நியூ இயர் ரெசல்யூஷன் என்ன...? (ங்கொய்யால யாருங்க கண்டுபுடிச்சது இந்த மேட்டரை...) சரி, இதுவரை எடுத்த நியூ இயர் ரெசல்யூஷன்களில் ஒன்றையாவது காப்பாற்றியிருக்கிறேனா...?

பொண்ணுங்க பேச்சை கேட்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன். நாசமாப் போச்சு.
சரக்கை மறக்க நினைத்தேன். நண்பர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.
மற்றவர்களை கலாய்க்கக் கூடாதென்று கருதினேன். பதிவுலக வாழ்க்கையில் அது சாத்தியமா என்ன...?
நியூ இயர் ரிசல்யூஷன் “ங்கொயாலா எவண்டா கண்டு பிடிச்சான் இதை”, இதே அலைவரிசையில் சிகரெட்டை ஒவ்வொரு ஜனவரி ஒன்று அன்று வரை கஷ்டப்பட்டு விட்டு, இரண்டாம் தேதி  சேர்த்து வைத்து பிடித்த ஊதாங்குழலர்களில் நானும் ஒருவன்.

பிரபா கலக்கு சாமீ.

13 comments:

  1. முதல் வாழ்த்து டூ பிரபா

    ReplyDelete
  2. ஈரோடு அன்பர்கள் செந்திலுக்கும், எஸ்ரா விற்கும் நன்றி

    ReplyDelete
  3. வித்தியாசமாய் சிந்திக்கிறவர் பிலாசபி பிரபாகரன். கவிதை, சினிமா விமர்சனம், கட்டுரை என்று எது என்றாலும் கலக்குவதில் வல்லவர். நிஜமாகவே சூப்பர் ஸ்டார் தான்! (பக்கா கமல் ரசிகர் என்றாலும் கூட!) :-)

    ReplyDelete
  4. சேட்டை வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பிரபாகரன் + கும்மாச்சி ....

    ReplyDelete
  6. எனக்கும் பிலாசரி சாரை பிடிக்கும், அவரின் எழுத்துக்கள் வலியன!

    இவர் சமீபத்தில் 7 ம் அறிவு பாடல்களுக்கு மொக்கையாக விமர்சனம் எழுதியிருந்தார்!

    அந்தப் பதிவைத் தவிர இவரது ஏனைய பதிவுகள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும்!

    குறிப்பாக வலைச்சரத்தில் இவர் ஆசிரியராக இருந்த அந்த ஒரு வாரம் இவரது உழைப்பு அபாரமாக இருந்தது! பலராலும் வியந்து போற்றப்பட்டது!

    அவருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வசீகரிக்கும் எழுத்து நடை, துணிச்சலான கருத்துக்களுக்கு சொந்தக்காரர் பிரபாகரன்.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. சூப்பர்ஸ்டாருக்கான சரியான தேர்வு !
    வாழ்த்துக்கள்!பிரபா!

    ReplyDelete
  9. தில்லு துர பதிவர் பிரபாக்கு வாழ்த்துக்கள்....சிறு வயதில் அரசியலை எதிர்கொள்ளும் வல்லமை உண்டு இவருக்கு...வாழ்த்துக்கள் உங்களுக்கும் நன்றி!...கடைசில சாமின்னு சொன்னத எடுத்துருங்க...மாப்ளைக்கு பிடிக்காது ஹிஹி!

    ReplyDelete
  10. யோவ் இது எப்பய்யா நடந்துச்சு... சொல்லவே இல்லை... நியு இயர் ரெசல்யூஷன் பதிவெல்லாம் பயங்கர மொக்கையாச்சேங்க... ஏதோ அறியா வயதில் கிறுக்கியது... அதையெல்லாம் தேடி எடுத்து போட்டிருக்கிறீர்களே....

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.